ரூல்ஸ் உடையுதா? இளையராஜா கேட்ட காப்பி ரைட்ஸ்.. கஸ்தூரி ராஜா கேட்ட நறுக்.. அஜித் மவுனம் ஏன்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குட் பேட் அக்லி குறித்த பாடல்கள் காப்பிரைட் குறித்த சலசலப்புகள் எதுவுமே தல அஜித் காதுக்கு போகவில்லையா? எந்த பேட்டியையும் அஜித் பார்க்க மாட்டாரா? சம்பந்தப்பட்டவர்கள் கேட்கும் கேள்விகள் அஜித் கவனத்துக்கு போகாதா? என்கிற சந்தேகம் எழுவதாக மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார். அத்துடன், நடிகர் அஜித் குறித்த பண்பையும் தன்னுடைய பேட்டியில் பாராட்டி கூறியிருக்கிறார்.

குட் பேட் அக்லி பாடல் காப்பி ரைட் விவகாரம் சில நாட்களாகவே சர்ச்சையானது.. இதுகுறித்து கருத்து சொல்லியிருந்த டாக்டர் காந்தராஜ், "பாடல்களில் காப்பி ரைட் விஷயம் என்பது அந்த காலத்திலிருந்தே இருக்கிறது.. தமிழ் பாடல்கள் மீது ஹாலிவுட்டில் அப்போதே கேஸ் போட்டிருக்கிறார்கள்.. இளையராஜாவை பொறுத்தவரை, ராயல்டியை அவர் எப்போதுமே கேட்க கூடாது. அவர்தான் தன்னுடைய பாடல்களை விற்றுவிட்டாரே? அப்படியானால் தயாரிப்பாளருக்குதானே உரிமை உள்ளது? என்று கேட்டிருந்தார்.

பஞ்சு மிட்டாய் சேலை

இந்நிலையில், டூரிங் டாக்கிஸ் என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள கஸ்தூரி ராஜா, "ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படத்தில் பஞ்சுமிட்டாய் சேலை கட்டி என்ற பாடல் இடம் பெற்றிருந்தது.. நான் அதை கண்டுக்கொள்ளவில்லை. காரணம், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அப்போதுதான் திருமணம் நடந்து முடிந்திருந்தது.. அந்த திருமணத்திற்கு நான் சென்றபோது, உங்க பாட்டு சூப்பர் சார் என்று மேடையிலேயே சொன்னார்.

ஆனால், 2வது படத்திலும் அதையே திரும்ப செய்துள்ளார்கள்.. குறைந்தபட்சம் என்னிடம் அவர்கள் அனுமதியாவது பெற்றிருக்கலாம், எனக்கு ஒரு மரியாதையை தந்திருக்கலாம்.. "நாம அவர்கிட்ட போய் பேசணுமா?" என்று இளம் டைரக்டர்கள் நினைக்கிறார்கள்..

குட் பேட் அக்லி படம் நல்ல வசூலை தந்திருப்பதாக சொல்கிறார்கள்.. அந்த படத்திலும் ஒத்த ரூபாய் தாரேன் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.. இதுகுறித்து பேச ஆதிக் ரவிச்சந்திரனிடம் பலமுறை முயன்றும், அவர் என்னிடம் பேச தயாராக இல்லை.

ஆதிக் ரவிச்சந்திரன்

ஒரு படத்திற்கு பல கோடியை செலவு செய்யும் இவர்கள் ஒரு பாடலைக்கூட சரியாக எடுக்க முடியாதபோது, எங்கிருந்து இவர்களால் ஒரு நல்ல கதையை வழங்க முடியும்? இன்றைய இளம் இயக்குநர்கள் மீதே சந்தேகம் வருகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் மறுபடியும் ஒரு படத்தை எடுக்கிறார்.. இதிலும், பழைய பாட்டைத் தான் தேடி செல்வராக இல்லை, புது பாட்டை பயன்படுத்துவாராதெரியவில்லை. அன்று உயிரை கொடுத்து, கஷ்டப்பட்டு நாங்கள் எடுத்த படத்தின் பாடலை, பயன்படுத்தி கைத்தட்டலை இவர்கள் வாங்கிக் கொள்வது எப்படி சரியானதாக இருக்கும்? உங்களிடம் அனுமதி கேட்காமல் பாடலை பயன்படுத்திவிட்டேன் என்று குறைந்தபட்சம் ஒரு மன்னிப்பாவது கேட்டு இருக்கலாமே? என்று கஸ்தூரி ராஜா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

பாடல் சலசலப்பு

இந்நிலையில், Cheyyaru Balu யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "கஸ்தூரி ராஜா பேசுவது மிக மிக நியாயமானது.. இதுவரை குட் பேட் அக்லி குறித்த பாடல் சலசலப்புகள் அஜித் காதுக்கு போகவில்லையா? எந்த பேட்டியையும் அஜித் பார்க்க மாட்டாரா? சம்பந்தப்பட்டவர்கள் கேட்கும் கேள்விகள் அஜித் கவனத்துக்கு போகாதா? அஜித்துக்கு தேவையான விஷயத்தை மட்டும்தான், அறிக்கையாக வெளியிடுவாரா? தேவையானதை சொல்லும்போது, அவருடன் இருப்பவர்கள் அஜித்தை தடுத்து விடுகிறார்களா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.

அங்கீகாரம் தரக்கூடிய அற்புதமான மனிதர் அஜித் என்று ஒருமுறை விதார்த் கூறியிருந்தார்.. காரணம், விதார்த்துக்கு வீரம் படத்தில் அந்த கேரக்டரை பெற்று தந்ததே அஜித்தான் என்று கூறியிருந்தார்..

வீரம் விதார்த் நெகிழ்ச்சி

இதை பற்றி விதார்த் சொல்லும்போது, "107 நாள் அஜித்துடனேயே நான் பயணித்தேன்.. ஒரு மனிதன் நல்லவனாக நடிக்க சில நாட்களே முடியும். ஆனால், 107 நாளும் நல்லவராகவே அஜித்தை நான் பார்த்தேன்.. வீரம் படத்தில் கிளாப் தட்டி, விதார்த் துவக்கி வைக்கட்டும் என்று சொன்னதும் அஜித்தான்.. அந்த அளவுக்கு பிறருக்கு அங்கீகாரம் தரக்கூடியவர் மனிதர்" என்று புகழ்ந்து பேசியிருந்தார்.

எல்லாம் தெரிந்த மனிதரான அஜித்துக்கு, குட் பேட் அக்லி பட பாடல்கள் குறித்த பேட்டிகள் மட்டும் தெரியாமல்போனதா? என்று தெரியவில்லை.. இனி வரும் காலங்களில், எல்லாம் தெரிந்து, எல்லாவற்றுக்குமான பதிலை அஜித் தர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்கிறார் செய்யாறு பாலு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+