இறுதி அத்தியாயத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. வீட்டு வாசலில் ஏமாந்த கண்ணன்..எதிர்பாராத முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வர இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில நிகழ்வுகளை வீடியோவாக சேனல் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மீனா, முல்லை, ஜீவா, கண்ணன் ஆகியோர் விளையாடி இருக்கின்றனர். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இருந்து இந்த சீரியல் அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருவதால் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதனால் இந்த சீரியல் டிஆர்பி யில் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் சமீப காலமாக இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. அது படித்தான் இப்போது கதையும் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த வாரம் இந்த சீரியல் இப்போதைக்கு முடிவு இல்லை இன்னும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டது.

அது போல தான் திடீரென்று ஜனார்த்தனன் மற்றும் பிரசாந்த் இடையே பிரச்சனை வெடித்து வந்தது. ஆரம்பத்தில் இருந்தே ஜனார்த்தனன் இடம் பிரசாந்த் பற்றி ஜீவா அறிவுரை கூறிக்கொண்டே இருந்த நிலையில் அதை ஜனார்த்தனன் நம்பாமல் இருந்தார்.இந்த நிலையில் இப்போது சீரியல் முடிவுக்கு வரும் நிலையில் ஜனார்த்தனனுக்கு பிரசாந்த் பற்றிய அனைத்து உண்மைகளும் தெரிய வந்திருக்கிறது.
இந்த நிலையில் பிரசார்ந்தால் குத்து பட்ட ஜனார்த்தனன் அபாய கட்டத்தில் இருப்பதாக மருத்துவமனையில் கூறியிருக்கின்றனர். அதோடு மேனேஜரை பிரசாந்த் கொலை செய்து இருக்கிறார். ஆனால் மொத்த பழியையும் ஜீவா மற்றும் கதிர் மீது போட்டிருக்கிறார். இந்த நிலையில் இனி பிரசாந்த் பற்றி ஜனார்த்தனன் சுயநினைவுக்கு வந்து மொத்த குடும்பத்திலும் உண்மையினால் சொன்னதும் கதை முடிவுக்கு வந்துவிடும்.
மீதமுள்ள மொத்த பிரச்சனையும் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் ஜனார்த்தனன் கண் விழித்து மொத்த உண்மையை சொல்லுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சூட்டிங் ஸ்பாட்டில் மீனா, ஜீவா, கண்ணன், முல்லை நான்கு பேரும் ஜாலியாக பேப்பர் கப் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர் .அந்த வீடியோவை விஜய் டிவி youtube சேனல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றனர்.

அதில் பாண்டியன் ஸ்டோர் வீட்டு முன்பு இவர்கள் நான்கு பேரும் விளையாடிக் கொண்டிருக்கும்போது அதிகமான பேப்பர் கப்புகளை அடுக்கியது மீனாதான். ஆனால் அதைவிட அதிகமாக ஜீவா அடுக்கியிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் முடிப்பதற்கு முன்பு அந்த கப்புகள் கீழே விழுந்து விட்டது. அதுபோல கண்ணன் விளையாடிக் கொண்டிருக்கும்போது அந்தக் கப்புகளை முல்லை தட்டி விட்டு விட்டார்.
இப்படியாக இவர்கள் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்த வீடியோ வெளியானதும் சீரியல் முடியப்போகிறது என்ற வருத்தம் கொஞ்சம் கூட இல்லாமல் இப்படி ஜாலி பண்ணிக்கிட்டு இருக்கீங்களே? என்று ரசிகர்கள் செல்லமாக கலாய்த்து வருகிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications