IndiGo: இண்டிகோ விமான பிரச்சனையில் சிக்கிய ரோபோ சங்கர் மகள் இந்திரஜா.. மருமகன் வெளியிட்ட வீடியோ! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: நேற்றிலிருந்து திடீரென இண்டிகோ விமான சேவை நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட சிரமங்கள் குறித்து பலரும் வீடியோக்களும், வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர். இண்டிகோ விமான பிரச்சனையில் நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜாவும் அவருடைய மருமகனும் சிக்கி இருக்கிறார்கள். அது குறித்த வீடியோவை இவர்கள் வெளியிட்டதும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு நாளைக்கு சுமார் 2200-க்கும் அதிகமான விமானங்களை இயக்கும் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோவில் விமானிகள் பற்றாக்குறையால், நேற்று டிசம்பர் 5ஆம் தேதி சுமார் 1000 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. விமான சேவை திடீரென தடைபட்டதால் பல பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள்.

இதனால் பாதிக்கப்பட்ட பலர் சோசியல் மீடியாவில் தாங்கள் சந்தித்த கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் பகிர்ந்து வருகிறார்கள். ஒரு இடத்தில் ரிசப்ஷனுக்கு கூட மணமக்கள் இல்லாமல் அவர்கள் வீடியோ காலில் ரிசப்ஷனில் கலந்து கொண்டனர். திடீரென விமான சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் வாக்குவாதங்களிலும், போராட்டங்களிலும் கூட ஈடுபட்டனர்.
காத்திருப்பில் இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை கூட இண்டிகோ தரப்பில் செய்யாதது பெரிய அளவில் பிரச்சினையாக மாறி இருக்கிறது. இண்டிகோவின் இந்த பிரச்சனையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மற்ற ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய விமானத்தின் டிக்கெட்டை அதிகப்படியாக விலை ஏற்றி வைத்திருக்கிறார்கள். இதனால் சுமார் 10,000 மதிப்பான டிக்கெட்டின் விலை இப்போது 80,000 வரை விலை உயர்த்தப்பட்டது என்றும் சிலர் கூறியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த வாரணாசியில் இருந்து சென்னைக்கு வர இண்டிகோவில் டிக்கெட் புக் செய்த ரோபோ சங்கர் மகளும், மருமகனும் இந்த பிரச்சனையில் சிக்கி இருக்கிறார்கள். அதாவது அவர்கள் இண்டிகோவில் டிக்கெட் புக் செய்து விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்கள். முதலில் விமானம் கேன்சல் என்று சொன்னவர்கள் பிறகு விமானம் இயக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள். அதை நம்பி இவர்கள் இருவரும் சென்று இருக்கிறார்கள். ஆனால் அங்கு விமானம் இயக்கப்படவில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.
இதனால் நீண்ட நேரம் விமான நிலையத்திலேயே காத்திருந்து இண்டிகோ நிறுவனத்திடம் பேசி பார்த்து தங்களது முயற்சிக்கு எந்த பயனும் இல்லை என்று கடைசியாக அங்குள்ள தன் தங்களுடைய நண்பர்களின் வீட்டிற்கு திரும்பி இருக்கிறார்கள். இது பற்றி இந்திரஜாவின் கணவர் வெளியிட்ட வீடியோவில், நாங்கள் ஒரு இவன்ட்க்காக இங்கே வந்தோம். ஆனால் இப்போது எப்படி சென்னை போறது என்று தெரியவில்லை. இது மட்டுமில்லாமல் வேறு ஒரு விமானத்தில் போகலாம் என்றாலும் கூட டிக்கெட்டின் விலை பல மடங்காக இருக்கிறது.
எங்களுக்கு இங்கு தெரிந்தவர்கள் இருப்பதால் நாங்கள் அங்கு சென்று விடுவோம். ஆனால் மற்றவர்களின் நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. மேலும் வயதானவர்கள் பலரும் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்திரஜாவும் அவருடைய கணவரும் பேசியிருக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications