அஜித் படத்தில் விஜய்க்கு ஜோடி நான்.. இப்போது ஏர்போர்ட்டில் விஜய் என்னிடம் சொன்ன வார்த்தை!- இந்திரஜா
சென்னை: நடிகர் விஜய் மற்றும் அஜித் நடித்த ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இந்திரஜா பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது, சில வருடங்களுக்கு முன்பு விஜய்யை ஏர்போர்ட்டில் பார்த்தபோது விஜய் தன்னிடம் பேசிய விஷயம் குறித்து பகிர்ந்து இருக்கிறார்.
பொதுவாக பல நடிகைகள் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். அதற்கு பிறகு சில வருடங்கள் கழித்து அதே கதாநாயகர்களுக்கு அக்காவாகவும், அண்ணியாகவும் கூட நடித்திருக்கிறார்கள். ஒரு சில நடிகைகள் மட்டும் புகழின் உச்சத்தில் இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு டாட்டா காட்டிவிட்டு போய்விடுகிறார்கள்.

ஆனால் சில நடிகைகள் திருமணம் ஆனாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல தான் இந்திரஜா தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். அதிலும் நடிகர் ரஜினி நடித்த உழைப்பாளி திரைப்படத்தின் மூலமாகத்தான் இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து தெலுங்கில் அதிகமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது தமிழில் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதில் "ராஜாவின் பார்வையிலே" திரைப்படமும் உண்டு. அந்த திரைப்படத்தில் மட்டும் தான் நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும் ஒன்றாக நடித்திருந்தார்கள். அந்த படத்தில் விஜய்க்கு ஜோடி இந்திரஜா தான்.

சமீபத்தில் பேட்டியில் ராஜாவின் பார்வையிலே திரைப்பட அனுபவங்கள் பற்றி பல விஷயங்களை இந்திரஜா பகிர்ந்து இருக்கிறார். அதில் நான் விஜய்க்கு ஜோடியாக ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் நடித்திருந்தேன். அந்த திரைப்படத்தில் நடித்த போது நானும் சினிமாவிற்கு அறிமுகம் தான். அதுபோல விஜய்யும் அறிமுகம்தான். ஆரம்பத்தில் விஜய் அதிகமாக பேசவில்லை என்றாலும் போகப்போக பேச தொடங்கி இருந்தார்.
அதிலும் திரைப்பட காட்சி குறித்து அதிகமாக பேசிக் கொண்டே இருப்போம். அப்போது சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்பவும் ஜாலியாக இருக்கும். அந்த திரைப்படத்திற்கு பிறகு நான் விஜயை சந்திக்கவே இல்லை. விஜய் இப்போது பெரிய ஹீரோவாக வளர்ந்து விட்டார். ஆனாலும் அப்போது இருந்த மாதிரி தான் எப்போதும் இருக்கிறார்.
அந்த சீரியல் நடிகர் தான் என் கணவர்.. விஜயகாந்த் எனக்காக சொன்ன வார்த்தை! நெகிழ்ந்த விஜய் பட கதாநாயகி
நான் சில வருடங்களுக்கு முன்பு விஜயை திடீரென்று ஏர்போர்ட்டில் பார்த்தேன். அவர் என்னை ஞாபகம் வைத்திருப்பாரா? என்று எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் விஜய் என்னை பார்த்ததும் என்னிடம் பேசினார். எப்படி இருக்க என்று கேட்டார். அதோடு இப்போ படம் எல்லாம் நடிக்கிறீங்களா? தமிழில் உங்களை காணவில்லையே என்று கேட்டார்.
அதற்குப் பிறகு குடும்பத்தை பற்றி பேசிக்கொண்டோம். ஆனால் விஜய்யிடம் பெரிதாக எந்த மாற்றமும் தெரியவில்லை. அவர் அப்போது பேசுனது போல தான் இப்போதும் பேசினார். அதிகமாக பேசவே மாட்டார். ஆனால் நம்மை நினைவு வைத்து பழைய விஷயங்களை பேசியது எனக்கு வியப்பாக இருந்தது என்று இந்திரஜா கூறி இருக்கிறார்.

அதோடு விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து பேசி இருந்தார், விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பது சந்தோஷம் தான். விஜய் ஏதாவது மாற்றம் கொண்டு வருவார் என்று நினைக்கிறேன். அவருக்கு தகுந்த சிறந்த உதவியாளர்களும், ஆலோசகர்களும் துணையாக இருக்க வேண்டும். ரசிகர்கள் எல்லோரும் ஓட்டு போடுவார்கள் என்று சொல்ல முடியாது.
இந்திரஜா பற்றி நாஞ்சில் விஜயன் வெளியிட்ட போஸ்ட்.. கண்ணீரோடு பதில் கொடுத்த ரோபோ சங்கர் மருமகன்
விஜய் நல்லதே செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தாலும் அவருக்காக கூடும் ரசிகர்கள் வாக்குகளாக மாறுமா? என்பது சந்தேகம்தான் அதற்கு விஜய்க்கு சிறந்த ஆலோசகர்கள் தேவை என்று எனக்கு தோன்றுகிறது என்று கூறியிருக்கிறார். நடிகை இந்திரஜாவின் கணவர் சீரியல் நடிகர் முகமது அப்சர் தான். முகமது அப்சர் சன் டிவியில் பல சீரியல் நடித்திருக்கிறார். அதிலும் நிம்மதி உங்கள் சாய்ஸ், பாண்டவர் இல்லம் போன்ற சீரியல் அவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications