இந்திரஜா பற்றி நாஞ்சில் விஜயன் வெளியிட்ட போஸ்ட்.. கண்ணீரோடு பதில் கொடுத்த ரோபோ சங்கர் மருமகன்
சென்னை: ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சங்கர் தான் கர்ப்பமாக இருப்பதை மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் விஜய் டிவியில் பிரபலமான நாஞ்சில் விஜயன் இந்திரஜா பற்றி திடீர் பதிவு ஒன்று வெளியிட்டிருந்த நிலையில் இந்திரஜாவின் கணவர் அந்த பதிவிற்கு இதை பார்க்கும்போது கண்ணீர் வருகிறது என்று பதில் கொடுத்திருக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து இப்போது வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜாவிற்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்திரஜா ஏற்கனவே பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார் அதுபோல நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தின் மூலமாக பாண்டியம்மா கேரக்டரில் பிரபலமடைந்திருந்தார்.

அதற்கு பிறகு தன்னுடைய பெயரை பாண்டியம்மாள் என்று செல்ல பெயராக மாற்றி இருக்கிறார். தன்னுடைய youtube சேனலில் கூட இந்திரஜா பாண்டியம்மா என்ற பெயரில் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்திரஜா அவருடைய மாமாவான கார்த்திக் என்பவரை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரோபோ சங்கர் சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த நேரத்தில் ரோபோ சங்கர் உடல்நிலை சரியான பிறகு தன்னுடைய மகளின் திருமணத்தை பற்றி அறிவித்திருந்தார். இந்திரஜா மற்றும் அவருடைய மாமா கார்த்திக்கின் திருமணம் பெரிய அளவில் விமர்சனங்களையும் சந்தித்தது. ஒரு தரப்பினர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தாலும் இவர்களுடைய பிரம்மாண்ட திருமணத்தை பற்றி பலர் கலாய்த்தும் வந்தனர்.

ஆனால் அதை எல்லாம் ரோபோ சங்கர் குடும்பம் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் கல்யாணத்திற்கு பிறகு இந்திரஜா மற்றும் அவருடைய கணவர் கார்த்திக் இருவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் இருவரும் தாங்கள் பெற்றோராக போகும் மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்து இருக்கின்றனர்.
அதோடு விஜய் டிவியில் இந்திரஜாவிற்கு சீமந்தமும் நடத்தி வைத்திருக்கின்றனர். அப்போது கெஸ்ட் ஆக ரோபோ சங்கர் அவருடைய மனைவியோடு கலந்து கொண்டார். அதுபோல கார்த்திக்கின் அம்மாவும் கலந்து கொண்டு என்னுடைய மகனை அவருடைய அப்பா இறந்த பிறகு நான் கஷ்டப்பட்டு தான் வளர்த்து வந்தேன். ஆனால் என்னுடைய மகன் ஆதரவு இல்லாத 27 குழந்தைகளுக்கு அப்பாவாக இருந்து அவர்களை வளர்த்து வருகிறார்.

இப்போது அவனுக்கு ஒரு வாரிசு வரப்போகுது என்று கண்கலங்கி இருந்தார். இந்த நிலையில் தாங்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போவதாகவும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் இந்திரஜாவும் அவருடைய கணவரும் அறிவித்திருந்தனர். அதோடு தாங்கள் அந்த நிகழ்ச்சியில் பெற்ற சாவி ஒன்றை நாஞ்சில் விஜயன் மற்றும் அவருடைய மனைவியிடம் கொடுத்துவிட்டு நீங்கள் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தையும் தெரிவித்து வந்திருந்தனர்.
இந்த நிலையில் நாஞ்சில் விஜயன் இந்திரஜா மற்றும் அவருடைய கணவர் குறித்து ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதில் பால்மணம் வாசம் உங்கள் வீடு எங்கும் வீசட்டும். சிவந்த இரண்டு பிஞ்சு பாதங்கள் உங்கள் இல்லத்தில் பதியட்டும். நீ கட்டி இருக்கும் சேலை உன் வீட்டில் தொட்டிலாய் தொங்கட்டும்.. இந்திரஜா பாப்பா, கார்த்திக் மாமா இந்த உலகத்திற்கு கூடிய சீக்கிரம் ஒரு புது பரிசு கொடுக்கப் போறீங்க. அதுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அது மட்டுமல்ல மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் இருந்து நீங்க போகும்போது உங்க கையில் இருந்த சாவியை எங்களுக்கு கொடுத்துட்டு போனீங்க. அது வரும் சாவி மட்டுமல்ல எங்கள் மீது நீங்கள் வைத்திருந்த அளவு கடந்த அன்பு... அதற்கு காலம் முழுவதும் உங்களுக்கு நன்றி கடன் பட்டவனாய் நானும் மரியாவும் இருப்போம். வாழ்த்துக்கள் மா கூடிய சீக்கிரம் தாய்மாமன் சீரோடு வரேன் என்று அந்தப் பதிவில் நாஞ்சில் விஜயன் கூறி இருக்கையில் இதற்கு இந்திரஜாவின் கணவர் கார்த்திக் ஒரு பதில் கொடுத்திருக்கிறார்.
அதாவது என்னையா வீடியோ போட்டு அழ வைக்கிறீங்க.. என் தங்கச்சி, என் மாப்பிள்ளை நீங்க... மிஸ் யூ ஆல்.. லவ் யூ என்று இதற்கு கார்த்திக்கு பதில் கொடுத்திருக்கிறார். அதுபோல இந்திரஜாவும் அழுவது போன்ற இமேஜும் மற்றும் ஹார்ட்டின் எமோஜிம் இந்த பதிவுக்கு கொடுத்திருக்கிறார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications