Iniya Iru Malargal: இனிய இரு மலர்கள்.. இப்படியும் டைட் குளோசப்பா?
சென்னை: இனிய இரு மலர்கள் இது ஜீ தமிழ் டிவியின் இரவு நேர 10:30 மணி சீரியல். இதில் ஒரு விஷயம் என்னன்னா இது இந்தி டப்பிங் சீரியல். கதைக்காகவும், காட்சிகளை ஷூட் செய்து இருக்கும் புதுமைக்காகவும் இந்த சீரியலை பார்க்கலாம்.
காதலர்கள் பிரிஞ்சுடறாங்க. அபி தனத்தையும், அபியின் காதலி கிங் என்பவரையும் மணந்துக்கறாங்க. இருந்தாலும், அபியால் முதல் காதலை மறக்க முடியவில்லை.
இருவருமே இருவருக்கும் தெரிந்தவர்களை கல்யாணம் செய்துக்கறதுனால, மீண்டும் இதுத் தொடர்பா என்னென்ன பிரச்சனை வருது என்பதுதான் கதை.

நல்ல வேளை!
நல்ல வேளை தமிழ் சீரியல்களில் இது போல கதைகள் இப்போதைக்கு எதுவும் இல்லை. காதலியின் புருஷன் பொண்டாட்டி மேல நம்பிக்கை வைத்து இருப்பதும், காதலனான அவனின் மனைவி தனம் இவனையும் காதலியையும் கண்காணிப்பதும் என்று கதை போகிறது.

காதலி நினைவு
கல்யாணம் ஆகியும் காதலியை சந்திக்கும் போது எல்லாம் அவள் மீது தனது பழைய காதலை வீசுகிறான் அபி. ஆனால், கிங்கை கல்யாணம் செய்துகொண்ட பிரக்யா அபியை விரும்பியும் விரும்பாமலிருப்பது போல காண்பிப்பது, இதை தனம் சந்தேகப்பட்டு அவளை துரத்தி துரத்தி திட்டுவது என்று கதையின் போக்கு இருக்கிறது.

தெரிந்த சொந்தம்
காதலர்களுக்கு தெரிந்த பொதுவான சொந்தத்தில் இருவருக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருக்கும் வேளையில், அழகிய இளம் பெண்கள் அனைவரும் விதம் விதமான பார்ட்டி வேர் அணிந்து பங்களாவில் உலா வருவது கண்களுக்கு குளிர்ச்சியாகத்தானே இருக்கும். இந்தி சீரியல்களில் இந்த மாதிரி விழாக்கள், பார்ட்டி என்றால் ரிச்சாக ஷூட் செய்து கலக்கி விடுவார்கள்.

சண்டையில் இருவர்
பிரக்யா, தனம் இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். என் புருஷனுடன் உனக்கு உறவு இருக்கிறது என்று அபியின் மனைவி கண்டபடி பேசி, இந்த ரிலேஷன்ஷிப்பை உன் புருஷன் கிங்கிடம் சொல்ல போகிறேன் என்று மிரட்டுகிறாள். இந்த சண்டையில் இரு பெண்களையும் ரொம்ப ரொம்ப டைட் குளோசப்பில் வைத்து.. ஸ்க்ரீனில் இந்த பக்கம் ஒரு முகத்தை வரைந்தது போலவும்,அந்த பக்கம் ஒரு முகத்தை லைன் டிராயிங் வரைந்தது போலவும் காண்பித்து காமிராவில் அசத்தி புதிய முயற்சி செய்து இருப்பதை பாராட்டலாம்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications