புது கார் வாங்கிய இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி.. ரசிகர்கள் கேட்பது இதுதான்! என்னம்மா யோசிக்கிறாங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைத்தளத்தில் பிரபலமான பிறகு சினிமாவுக்குள் நுழைவது இப்போது ஒன்றும் புதியது இல்லை. ஆனால் சினிமாவில் கால் வைக்கும் நேரத்தில் அவரை சுற்றி வரும் கவனமும், அதற்குப் பிறகு கிடைக்கும் வசதிகளும் ரசிகர்களிடம் எப்போதும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும். அப்படித்தான் இன்ஸ்டாகிராம் பிரபலமான அமலா ஷாஜி புதிய கார் வாங்கி இருப்பதாக வெளியிட்ட புகைப்படமும் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

அமலா ஷாஜி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய காருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து "Grateful for every step that brought me here " என்று பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவுக்கு ஆயிரம் கணக்கில் லைக்குகள் குவிந்து இருப்பதுடன் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் வழக்கம் போல எல்லாரும் வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிவிட்டு போகவில்லை. இப்போதான? படத்துல கமிட்டாகி இருக்கீங்க அதுக்குள்ள காரா என்ற ரேஞ்சில் சிலர் கேள்வி எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

Amala Shaji New Car Instagram

புது கார் வாங்கிய அமலா ஷாஜி

இன்னும் சிலரோ சோசியல் மீடியாவில் ரிலீஸ் போட்டு பிரபலமாகிட்டா போதும் உடனே கார், அடுத்தது சினிமா... என்று கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர். சில கமெண்ட்களை பார்த்தால் அவருடைய வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுகிறார்களா? அல்லது உண்மையிலேயே கேள்வி கேட்கிறார்களா? என்பதே புரியாத அளவுக்கு இருக்கிறது. ஆனால் அமலா ஷாஜியை பொறுத்தவரை இந்த கார் அவருடைய சினிமா வாய்ப்பால் மட்டும் வாங்கியது என்று சொல்லிவிட முடியாது.

Amala Shaji New Car Instagram

சோசியல் மீடியா பிரபலம்

கேரளாவை சேர்ந்த இவர் டிக் டாக் காலத்திலேயே தன்னுடைய டான்ஸ் மற்றும் எக்ஸ்பிரஷன் வீடியோக்கள் மூலம் பிரபலம் பெற்றார். பின்னர் டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டாளத்தை உருவாக்கி விட்டார். இதனால் கடந்த சில வருடங்களில் அவரது பாலோவர்ஸ் எண்ணிக்கை பல மில்லியனை தாண்டியது.

என்னை செருப்பால அடிப்பியா? இன்ஸ்டா பிரபலம் மீது புகார் கொடுக்க போறேன்.. நடிகை விஜயலட்சுமி வீடியோ
அவருடைய சகோதரி அம்ருதா சாஜியும் சோசியல் மீடியாவில் பிரபலமானவர்தான். இருவரும் இளம் வயதிலேயே ரில்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு பெரிய அளவில் பிரபலமாகி விட்டார்கள். இதற்கு இடையே அமலா ஏற்கனவே புதிய வீடு மற்றும் கார் வாங்கி இருப்பதாக பதிவுகள் வெளியிட்டிருந்தார். அதனால் இப்போது மீண்டும் புதிய காருடன் வெளியிட்டு இருக்கும் போட்டோவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

Amala Shaji New Car Instagram

அமலா ஷாஜி நடிக்கும் படம்

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய தமிழ் திரைப்படமான சிட்டி ஆப் கோல்டு படத்தில் முக்கிய கேரக்டரில் அமலா ஷாஜி ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார். படத்தை அறிமுக இயக்குனர் சித்தாத் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் தங்க கடத்தலை மையமாகக் கொண்ட ஆக்சன் திரில்லர் கதை என்பதை காட்டுகிறது.

மீண்டும் புதிய கார்

இதனால் அமலா ஷாஜியின் ரசிகர்களுக்கு இப்போது இரண்டு விஷயங்கள் ஒன்றாக கிடைத்திருக்கிறது. சினிமாவில் அறிமுகமாக நேரத்திலேயே அமலா ஷாஜி இப்படி ஒரு கவனத்தை பெறுவது அவருடைய சோசியல் மீடியா பாப்புலாரிட்டியின் தாக்கம் என்று தான் சொல்ல வேண்டும். அதே நேரத்தில் இவருடைய வளர்ச்சியை பார்த்து கடுப்பாகியும் சிலர் கமெண்ட்ஸ் போட்டு இருக்கின்றனர்.

Amala Shaji New Car Instagram

ரசிகர்களின் கேள்விகள்

இவர்களையெல்லாம் பார்க்கும் போது கஷ்டப்பட்டு படித்து வேலைக்கு போக வேண்டும் என்று உழைப்பதெல்லாம் வேஸ்ட்டா? இவங்கள மாதிரி நாமும் ரீல்ஸ் போட்டா போதுமா? என்றும் சிலர் கமெண்ட் கொடுத்து இருக்கிறார்கள். சோஷியல் மீடியா புகழ் எப்போது வேண்டுமென்றாலும் மாறி போகும், ஆனால் படிப்பால் கிடைக்கும் அனுபவம் அவ்வளவு எளிதாக எல்லாராலும் பெற்று விட முடியாது. என்னதான் சோசியல் மீடியா பிரபலங்கள் இன்று பிரபலங்களாக இருந்தாலும் அடுத்து இவர்களை விட இன்னொருவர் அழகாக வரும்போது காணாமல் போய்விடுவார்கள். அதனால படிப்ப மட்டும் விட்டுறாதீங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+