இன்ஸ்டா பிரபலம் ராஜியின் கடைசி ஆசை இதுதான்! கணவரை பற்றி இப்படி சொன்னாரு.. தோழி சொன்ன அதிர்ச்சி விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நங்கநல்லூரில் நடந்த நாகலட்சுமி கொலை சம்பவம், ஒரு சாதாரண குற்றச்செய்தியாக பார்க்க முடியாத அளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னால் தானே வாழ்க்கையை கட்டியெழுப்பி, சமூக வலைதளங்களில் தனக்கென ஒரு அடையாளம் உருவாக்கிய பெண், தனது கணவராலேயே கொலை செய்யப்பட்டிருப்பது பலரையும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் நாகலட்சுமி என்ற ராஜி குறித்து அவருடைய தோழி பேசியது வைரல் ஆகிவருகிறது.

Raji Nagalakshmi Crime Instagram

இன்ஸ்டா பிரபலம் நாகலட்சுமி

நாகலட்சுமி ஆரம்ப காலத்தில் பல கஷ்டங்களை சந்தித்தவர். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற தீவிர எண்ணத்துடன் "Ready to Wear Saree" என்ற ஐடியாவை எடுத்துக்கொண்டு அதை ஒரு வெற்றிகரமான பிசினஸாக மாற்றியவர்.

அவருடைய கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் எளிமையாக பழகுவது, குறைந்த விலையில் தரமான சேலைகளை வழங்குவது, அவரின் தனிப்பட்ட அணுகுமுறை - இவை அனைத்தும் அவரை விரைவில் பிரபலமாக்கியது. சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்கள் பகிர்ந்து, தனது பிசினஸையும் வளர்த்துக் கொண்டார். இதனால், பல பெண்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்தது.

ஆனால், இந்த வெற்றியின் பின்னால் குடும்பத்தில் ஓர் அமைதியான புயல் வீசிக்கொண்டே இருந்தது. கணவர்-மனைவி இடையிலான கருத்து வேறுபாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து, அது இறுதியில் கொடூரமான முடிவாக மாறியிருக்கிறது. ராஜியை அவருடைய கணவரே வெட்டி கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

நான்சி உருக்கமான பேட்டி

நாகலட்சுமியுடன் நெருங்கிப் பழகிய மாடலும் நடிகையுமான நான்சி, அளித்த பேட்டியில் பகிர்ந்த தகவல்கள் இந்த சம்பவத்தின் வேதனையை இன்னும் அதிகப்படுத்துகின்றன.

"எனக்கு நாகலட்சுமி என்ற ராஜியை நான்கு வருடங்களாக தெரியும். அவருடைய உண்மையான பெயர் நாகலட்சுமி தான்... ஆனாலும் நாங்கள் எல்லாரும் அவரை 'ராஜி'ன்னு தான் அழைப்போம். ரொம்ப இயல்பான குணம் கொண்டவர். யாரிடமாவது பேச ஆரம்பிச்சா, இரண்டு நிமிஷத்துலே அவர்களோட நெருக்கமாகி விடுவார்," என்று நான்சி தொடங்கினார்.

அவர் தொடர்ந்து, "ராஜி ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த நிலைக்கு வந்தவர். வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறணும் என்பதுதான் அவருடைய ஒரே கனவு. அதுக்காக அவர் எவ்வளவு உழைத்தார் என்பதை நெருக்கமாக பார்த்தவங்க தான் புரியும். இன்று அவர் இந்த உலகத்தில் இல்லைன்னு சொல்வதை நம்ப முடியல... இது ஒரு கனவாக இருந்தா நல்லா இருக்கும் போல தோணுது," என்று கண்ணீர் மல்க கூறினார்.

நாகலட்சுமியின் தினசரி வாழ்க்கை முறையை நினைவுகூர்ந்த நான்சி, "அவர் ரொம்ப disciplined-ஆ இருப்பார். காலையில் எழுந்தவுடன் டயட் புட் சாப்பிடுவார். அதுக்கப்புறம் உடனே சோசியல் மீடியாவில் வீடியோ போடுவது, பிசினஸை எப்படி வளர்த்துக்கலாம் என்று யோசிப்பது - இதுதான் அவருடைய தினசரி வாழ்க்கை. எப்போதும் வேலை பற்றிதான் யோசிப்பார். இன்னும் எப்படி முன்னேறலாம், இன்னும் எத்தனை பேருக்கு வேலை கொடுக்கலாம் என்று தான் அவருடைய மனசு வேலை செய்துகொண்டே இருக்கும்," என்றார்.

"யாருக்கும் கெடுதல் நினைக்காதவர். மிகவும் நல்ல மனசுக்காரர். அதே நேரத்தில் அவருடைய குழந்தைகள் மீது அளவில்லா பாசம் வைத்திருந்தார். அவர்களுக்காகவே இன்னும் உழைக்கணும், இன்னும் உயரணும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது," என்று அவர் கூறினார்.

கணவர் பற்றி குறை சொல்லாதவர்

நான்சி பேட்டியில் கூறிய மிக முக்கியமான விஷயம் - நாகலட்சுமி ஒருபோதும் தனது கணவரை பற்றி வெளியில் குறை கூறவில்லை என்பதே. "ஒரு தடவை நான் அவருடைய கணவர் பற்றி கேட்டேன். அப்போதுதான் சில விஷயங்களை சொன்னார். அவருடைய கணவர் ஹோட்டல் பிசினஸ் பண்ணியவர். அந்த வேலை காரணமாக அவருக்கு உடல்நல பிரச்சனைகள் வந்துவிட்டது. அவருக்கும் ராஜிக்கும் 10 வயது வித்தியாசம் இருக்கிறது," என்று நான்சி கூறினார்.

"ஒரு கட்டத்தில் அவருடைய கணவர் நடக்க முடியாத நிலைக்கு வந்தபோது, 'இனி குடும்பத்தை நான் பார்த்துக்கறேன்' என்று ராஜி பொறுப்பை எடுத்துக்கொண்டார். அவருக்கான ட்ரீட்மெண்ட் நடந்து கொண்டே தான் இருந்தது," என்றும் அவர் கூறினார்.

"நான் கூட 'உங்களுடைய பிசினஸ்க்கு அவர் ஹெல்ப் பண்ணுவாரா?' என்று கேட்டபோது, 'அவருக்கு அதில் இன்ட்ரஸ்ட் இல்லை' என்று மட்டும் தான் சொன்னார். அதற்கப்புறம் அவர் பற்றி எந்த இடத்திலும் குறை சொல்லவே இல்லை. அந்த அளவுக்கு அவர் கணவரை ரெஸ்பெக்ட் பண்ணுவார்," என்று நான்சி நினைவுகூர்ந்தார்.

உறவு முறியவில்லை

நாகலட்சுமி மற்றும் அவரது கணவர் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வாழ்ந்தாலும், அவர்கள் விவாகரத்து செய்யவில்லை என்று நான்சி கூறியுள்ளார். "அவர்கள் பிரிந்து இருந்தாங்க... ஆனா completely பிரிந்து போயிட்டாங்கன்னு சொல்ல முடியாது. பல முக்கியமான நிகழ்ச்சிகளில் அவருடைய கணவர் இருந்ததை பார்த்திருக்கோம். அவருடைய சோசியல் மீடியால கூட அவர் வர்றது இருக்கும்," என்று அவர் கூறினார்.

"அந்த மாதிரி ஒரு மனிதர் இப்படியொரு முடிவை எடுப்பார் என்று நாங்கள் நினைத்ததே இல்லை. அவரைப் பார்த்தால் யாராலும் நம்ப முடியாது," என்று நான்சி அதிர்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும் ராஜிக்கு ஒரு ஆசை இருந்தது அது கடைசியாக நிறைவேறாமலே போய்விட்டது. ராஜி ரெண்டு ஸ்டோர் வைத்திருந்தார் மூன்றாவதாக அவருடைய ஜுவல்ஸ் வைத்தே ஒரு ஷோரூம் திறக்க வேண்டும் என்று நினைத்தாரு. புதியதாக ஜுவல்ஸ் ஷோரும் திறந்தால் நீங்க வந்து பிரமோஷன் பண்ணி தரணும் என்று என்கிட்ட சொல்லி இருந்தாரு. அதுபோல நாம பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து ஒரு டூர் போக வேண்டும் அதற்கு அரேஞ்ச் பண்ணுங்க என்று மார்ச் மாத தொடக்கத்தில் தான் பேசி இருந்தாரு என்று கண்கலங்க நான்சி பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+