அமீரின் கல்யாணம் செல்லுபடியாகாதா? உருகி உருகி காதலித்த பாவனி - அமீர்.. இந்த பிரபலம் இப்ப சொல்வதென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவி அமீர் - பாவ்னி திருமணம் நடந்துள்ளது.. பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே அமீர் மற்றும் பாவ்னிக்கு நெருங்கிய உறவாக இருந்தவர் பிரியங்கா. இப்போது இவர்களுடைய திருமணத்தையும் பிரியங்கா தான் முன்னின்று நடத்தி வைத்திருக்கிறார். இது தொடர்பான போட்டோக்கள், இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் அமீர் - பாவ்னி காதல் குறித்து பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார்.

"பாவ்னி ஏற்கனவே திருமணமாகி, கணவரை இழந்தவர்.. கன்னடத்தில் டிவி சீரியரில் ஆரம்பத்தில் நடித்து கொண்டிருந்தார் பாவ்னி.. அப்போது பிரதீப் குமார் என்ற நடிகரை காதலித்தார்.. இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.. சந்தோஷமாகவே வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. எந்த கிசுகிசுக்களும், எந்த கருத்து வேறுபாடும் இருவருக்குள்ளும் இருந்ததே இல்லை.

Television Ameer Pavni

என்னாச்சு கணவருக்கு

திடீரென ஒருநாள் தன்னுடைய அறையில் மர்மமான முறையில் பாவ்னியின் கணவர் இறந்து கிடந்தார்.. பக்கத்து ரூமிலேயே பாவ்னி தங்கியிருந்தார். இதையடுத்து, பிரதீப் குமார் எதற்காக தனியாக ரூமில் தற்கொலை செய்து கொண்டார்? அப்போது பாவ்னி வேறு யாருடனாவது ரூமில் தங்கியிருந்தாங்களா? என்றெல்லாம் அப்போது கன்னட பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

ஆனால், பாவ்னி மிகவும் நல்ல பெண்.. கிறிஸ்தவ பெண்.. உண்மையான பெண் என்பதால், பாவ்னி மீது எந்த புகாரும், குற்றச்சாட்டும் யாருமே தரவில்லை. கணவரின் இழப்பிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு, தமிழ் சீரியல்களில் பாவ்னி கவனம் செலுத்தினார் .. பாவ்னியின் தோற்றம் அனைவருக்குமே பிடிக்கும்.. அனைவரையும் வசப்படுத்தும் தோற்றத்தை கொண்டவர்..

பாவ்னி மிகவும் நல்ல பெண்

அப்போது விஜய் டிவியில் நடந்த நடன நிகழ்ச்சியில் அமீர் - பாவ்னி இருவருமே கலந்துகொண்டார்கள். அப்போதே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது.. இவர்கள் 2 பேரின் நடனமும் ரசிகர்களை அதிகமாகவே கவர்ந்தது. இதற்கு பிறகுதான், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இருவருமே சென்றார்கள்.. இவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நேயர்களே வற்புறுத்தினார்கள். அந்த அடிப்படையில் இருவருமே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். அப்போது ஒரு சிக்கல் கிளம்பியது..
பாவ்னி கிறிஸ்தவர், அமீர் ஒரு இஸ்லாமியர்.. இதனால் 2 குடும்பத்தினரும் சம்மதிக்கவில்லை.. தான் கிறிஸ்தவ மதத்துக்கு மாற வேண்டுமா என்று அமீரும், தான் இஸ்லாமிய மதத்துக்கு மாற வேண்டுமா என்று பாவ்னியும் ஒருவரையொருவர் கலந்து பேசினார்கள்.. எப்போதுமே மத விஷயம் யாரையுமே திருப்திப்படுத்தாது..

மதங்களை கடந்து..

ஆனால், அமீர் பாவ்னியிடம், நீ கிறிஸ்தவ பெண்ணாகவே இருந்து கொள் என்றார். உடனே பாவ்னியும், நீயும் இஸ்லாமியனாகவே வாழு என்று சொல்லிவிட்டார்.

சமீபத்தில் கிறிஸ்துமஸ், ரம்ஜான் என இரு விழாவையும் இருவருமே சேர்ந்து சிறப்பாக கொண்டாடினார்கள.. அதாவது அவரவர் மதத்திலேயே தொடர்ந்து வாழ்வது என முடிவானது.. எனினும், இந்த திருமணம் சட்டப்படி செல்லுமா? எந்த மதத்தில் சென்று பதிவு செய்து கொள்வார்கள்? என்று தெரியவில்லை" என தெரிவித்துள்ளார்.

கிடைத்த கிஃப்ட்

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் பாவ்னி ஒரு பிரபல பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அதில், "நாங்கள் 2 பேரும் பொங்கல் கொண்டாடுகிறோம். அமீர் நோன்பு வைக்கும்போது அவருக்கு உதவியாக இருக்கிறேன். அவரை தொந்தரவு செய்வதில்லை.. ரமலான் பண்டிகையையும் சேர்ந்தே கொண்டாடுகிறோம். இதுவரை அமீர் என்னை மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதில்லை... அவர் என்னை காதலிக்கிறார் மதத்தை கிடையாது.. அமீர் மாதிரி ஒரு அற்புதமான மனிதரை நான் பார்த்தது இல்லை. என் வாழ்வில் கிடைத்த கிஃப்ட் ஆக பார்க்கிறேன்" என்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் பேசும்போது, இந்த திருமணம நிச்சயம் செல்லாது.. அமீர் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து ஞானஸ்தானம் பெற வேண்டும்.பிறகு 15 நாட்கள் கழித்து கிறிஸ்துவ முறைப்படி சர்ச்சில் திருமணம் செய்யலாம் அல்லது பாவனி இஸ்லாமியராக மாற வேண்டும். தர்காவில் ரிஜிஸ்தர் செய்ய வேண்டும். பிறகு 15 நாட்கள் கழித்து இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்ய வேண்டும். இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்தால் இந்த திருமணம் செல்லும். ஆனால், தன்னை இஸ்லாமியராக மாற சொல்ல கூடாது என்று ஏற்கனவே பாவனி, அமீரிடம் சொல்லி உள்ளார்.. அப்படியிருக்கும்போது, இப்போதைக்கு இந்த கல்யாணம் எந்த ரூட்டில் செல்கிறது என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+