பிரியங்காவை பொளந்து கட்டிய மணிமேகலை.. மீண்டும் விஜய் டிவிக்கு வர்றாரா? மாறி மாறி வந்த கலவை விமர்சனம்
சென்னை: மணிமேகலை வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு, விஜய் டிவி ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இதில் பெரும்பாலும் மணிமேகலையை மீண்டும் நிகழ்ச்சிக்கு வரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
விஜய் டிவி தொகுப்பாளினி மணிமேகலையின் அறிக்கையானது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மிகவும் துணிச்சலான அறிக்கையை மணிமேகலை வெளியிட்டுள்ள நிலையில், "சீனியர் தொகுப்பாளினி, மிகப்பெரிய டிவி நிறுவனம்" என்றெல்லாம் எதற்குமே பயப்படாமல், தன்னுடைய கருத்துக்களை கூறி, அதில் தன்னுடைய சுயமரியாதையின் காட்டத்தை பதிவு செய்துள்ளார்.

மணிமேகலை குறிப்பிடுவது பிரியங்கா தேஷ்பாண்டேவை தான் என நெட்டிசன்கள் கூறிவருவதுடன், இதற்கான கமெண்ட்களையும், வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்கள்.
அந்தவகையில், பிரியங்கா மீது மணிமேகலை வெளிப்படுத்தியிருக்கும் குற்றச்சாட்டு, பலராலும் ஆமோதிக்கப்பட்டு வருகிறது. பிரியங்காவை அட்ஜஸ்ட் செய்தால் மட்டுமே அங்கு நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்க முடியும் என்ற குற்றச்சாட்டு, விஜய் டிவிக்கே எதிராக திரும்பியிருக்கிறது..
குற்றச்சாட்டுகள்: அதேசமயம், வேறொரு பிரபல சேனலுக்கு செல்வதற்காகத்தான் மணிமேகலை இந்த குற்றச்சாட்டை பிரியங்கா மீது வீசியிருப்பதாக சிலர் சொல்கிறார்கள். மேலும் சிலரோ, பிரியங்காவுக்கு சமீபத்தில் விருது வழங்கப்பட்டிருந்தது மணிமேகலையின் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள்.
இப்படி இரு தரப்பிலுமே மாறி மாறி ஆதரவுகளும், எதிர்ர்ப்புகளும் சோஷியல் மீடியாவில் பதிவாகி வருகிறது. இதற்கு நடுவில் விஜய் டிவியின் பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மணிமேகலை: இதில், மணிமேலைக்கு ஆதரவானவர்கள், நிகழ்ச்சிகளில் பிரியங்காவின் "அதிகப்பிரசங்கித்தனம்" என்று வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்கள்.. அதில், குக் வித் கோமாளியின் நடுவர் செஃப் தாமு, ஒருமுறை பிரியங்காவை லேசாக கண்டிப்பது போன்ற வீடியோயும் பதிவிட்டு வருகிறார்கள். ஒரு எபிசோடில், போட்டியாளர்களுக்கு அந்த வாரத்துக்கான டாஸ்க் என்ன என்பதை செப் தாமு சொல்லி கொண்டிருந்தபோது, பிரியங்கா குறுக்கே புகுந்து ஏதோ துடுக்குத்தனமாக பேசிவிட்டார்.
உடனே சுதாரித்து கொண்ட செஃப் தாமு, "இது ஸ்டார்ட் மியூசிக் இல்லை.. குக் வித் கோமாளி" என்று சொல்லிவிட்டார்.. தாமு சிரித்துக்கொண்டே இதை சொன்னாலும், பிரியங்காவின் முகம் லேசாக மாறிவிட்டது. நடுவரையே இப்படி அத்துமீறுபவர், உடனிருக்கும் தொகுப்பாளரை எப்படியெல்லாம் டாமினேட் செய்திருப்பார்? என்று மணிமேகலையின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தொகுப்பாளர்கள்: இதில் நடுநிலையானவர்கள், செப் தாமு பிரியாங்காவை கண்டித்தபோதே, விஜய் டிவி சுதாரித்திருந்தால், இன்று 2 பெண் தொகுப்பாளர்களுமே விமர்சனத்துக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள் என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ஆனால், பிரியங்கா தரப்போ, நிகழ்ச்சி தரப்போ மணிமேகலையின் குற்றச்சாட்டுக்கு இதுவரை விளக்கம் தரவில்லை.. இத்தகைய சூழலில், மீண்டும் மணிமேகலை குக் வித் கோமாளிக்கு செல்ல வேண்டும் என கோரிக்கையை குக் வித் கோமாளி ரசிகர்கள் விடுத்து வருகிறார்கள்.
இன்னும் சிலரோ, மணிமேகலை இதுகுறித்து நேரடியாகவே பிரியங்காவிடம் பேசி சரிசெய்திருக்கலாம், அதை விடுத்து சமூக வலைதளங்களில் இப்படி செய்திருக்க வேண்டியதில்லை என்றும் கூறுகின்றனர்.
அட்வைஸ்: இதனிடையே, மணிமேகலைக்கு சிலர் அட்வைஸ் தந்துவருகிறார்கள்.. ஒரு ரியாலிட்டி ஷோவில், யார் கண்டண்ட் நன்றாக உள்ளதோ, அதைதான் ஒளிபரப்ப வேண்டி வரும்.. இது பிரியங்காவுக்கு என்றில்லை..
பாலா, புகழ் போன்றோர், தங்கள் இருப்பை காட்டிக் கொள்ள கண்டண்ட்களை அள்ளி வழங்குவார்கள். அதுக்காக, சரத், தங்கதுரை, சுனிதா போன்றோர்கள் கோபித்து கொண்டார்களா? ஒரு ரியாரிட்டி ஷோவில் இயல்பாக நடக்கும் விஷயத்தை, மணிமேகலை பெரிதாக்கி விட்டார் என்கிறார்கள் நடுநிலையாளர்கள். இப்படி மாறி மாறி கலவையான விமர்சனங்கள் எழுந்து வருவதால், இந்த விவகாரத்தின் பரபரப்பு இன்னும் ஓயவில்லை.












Click it and Unblock the Notifications