Kalyana Veedu serial: டிக்டாக் விபரீதத்தை சொல்லப் போகிறாரா திருமுருகன்?
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் இயக்குநர் திருமுருகன் டிக்டாக் செய்யும் பெண்கள் குறித்து வரும் எபிசோட்களில் சொல்ல இருக்கிறார் போலும். எப்போதுமே சமூகத்தில் நடக்கும் பரபரப்பான விஷயத்தை இவர் டக்கென்று பிடித்துக்ண்டு தனது சீரியலில் யூஸ் செய்துக்கொள்வார்.
டிக்டாக் செய்து வீடியோ வெளியிடும் பெண்கள் விபரீதத்தில் மாட்டிக்கொள்வது தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தியாக பரவி, பலரையும் அலர்ட் செய்துள்ளது.
என்றாலும், புதிதாக டிக்டாக் செய்யும் பெண்கள் ஆண்கள் விரிக்கும் வலையில் வயது கோளாறு காரணமாக சிக்கிக் கொள்ளத்தான் செய்கிறார்கள். அந்த விஷயத்தை பிடித்துக்கொண்டு இருக்கிறார் திருமுருகன்.

சவீதா நாத்தனார்
கோபியின் தங்கை சவீதா... இவருடைய நாத்தனாரின் பெண் டிக்டாக் செய்ய, அவளை கண்டிக்கிறாள் சவீதா. போதாக்குறைக்கு நாத்தனாரும் தனது பெண்ணுடன் சேர்ந்து டிக்டாக் டான்ஸ் வீடியோ செய்கிறார். இதையும் சவீதா கண்டிக்க...வீடியோவுக்கு கிடைத்த லைக்ஸ், கமெண்ட்ஸ் அந்த சின்ன பெண்ணை இன்னும் தூண்டி விடுகிறது.

பெண் அம்மா
அம்மாவும் பெண்ணும் டிக்டாக் வீடியோவுக்கு கிடைத்த லைக்ஸ், கமெண்ட்ஸ் பற்றி பேசுகிறார்கள். அம்மாவுக்கு கொஞ்சம் பயம் வந்தாலும், பெண் சமாதானம் செய்து இது எல்லாம் ஒன்னும் தப்பு இல்லைமான்னு சொல்லி தேத்திடறா. அம்மா அந்தப் பக்கம் நகர்ந்துட்டாங்க. பெண்ணுக்கு கமெண்ட்ஸ் படித்து படித்து அவள் அந்த மாய வலையில் விழுந்து விடுகிறாள்.

விபரீதம் குறித்து
இன்னும் கல்யாண வீடு சீரியலில் டிக்டாக் விபரீதம் குறித்தும் அலசி அதன் படி காட்சிகள் எடுப்பார் திருமுருகன் என்று நம்பலாம். அவர் எப்போதும் சமூகத்தில் இருந்துதானே கதை எடுப்பதாக சொல்கிறார். அப்படி பார்த்தால் இது அல்வா மாதிரி அவர் கையில் கிடைத்து இருக்கிறது.

புள்ளி கிடைத்தால்
ஒரு மண் துகள் போல புள்ளி கிடைத்தால் கூட திருமுருகன் அதை வைத்து ரோடே போட்டு விடுவார். கலா, சகுந்தலா சிஸ்டர்ஸ் இவர் சீரியலுக்கு நல்ல உதாரணம். இப்போது ரோடு மாதிரி அண்மைய டிக்டாக் செய்திகள் கிடைத்து இருக்கிறது. சும்மா விடுவாரா திருமுருகன்?
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications