OTT App: இயக்குநர் கவுதம் மேனனா? நம்பவே முடியலையே...!
சென்னை: கார்த்திக் டயல் செய்த எண்... இந்த குறும்படத்தையா கவுதம் மேனன் இயக்கினார்? நிஜமா நம்ப முடியாமல் பலரும் இதே கேள்வியை கேட்கிறார்கள். ரொம்ப பெரிய விஷயத்தை ஜஸ்ட் லைக் தட்னு சொல்லிட்டாங்களே என்பதுதான் பலரின் எண்ணமாக இருக்கிறது.
என்னதான் கோவிட் 19 தொற்று லாக்டவுன் நேரத்தில் எடுத்த குறும்படம் என்றாலும், இதற்கும் மேக்கிங் வீடியோ போட்டு அசத்தி இருக்கிறார்கள். மேக்கிங் வீடியோ...இது நல்லாருக்கு பயமின்றி இதை பார்க்கலாம்.
கல்யாணமாகிய பெண்ணை நீ வேணும்னு கேட்கறது... இதுவா கவுதம்மேனன் இயக்கிய குறும்படம்.? இது சிம்பு த்ரிஷாவுக்காக எடுக்கப்பட்ட படமா? எனில் சிம்பு ரசிகர்கள் த்ரிஷா ரசிகர்கள் இதில் இன்ஸபிரேஷன் ஆனால், பரவாயில்லையா உங்களுக்கு?

அவர் குழந்தை மாதிரி
என் புருஷன் குழந்தை மாதிரின்னு சொல்ற மாதிரி, அவரை நான் ரொம்ப லவ் பண்றேன் கார்த்திக். அவர் எனக்கு மூன்றாவது குழந்தை என்கிறார் த்ரிஷா. ஏற்கனேவே ட்வீன்ஸ் இருக்கிறார்கள். எந்த வெளிநாடு என்பதை குறிப்பிடாமல் த்ரிஷா சொல்கிறார், அந்த நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் சரியாக கடைப்பிடிக்கப் படவில்லை..அதனால கிளம்பி வந்துட்டோம்னு.எந்த ஊரில் ஃபிளைட் விட்டாங்க?

ஒரு பெண்ணாக வேணும்
ஒரு பெண்ணாக நீ எனக்கு வேணும் ஜெர்சி...உன் தோளில் நான் வேணும் என்று காதல் வசனம் பேசுகிறார் சிம்பு. ஓகேதான்.. இது லவ்...ஆனால், கல்யாணமாகி செட்டில் ஆகிவிட்ட ஜெர்சியிடம் எதற்கு இந்த அக்காதல் வசனம்? ஐ லவ் யூ சொல்லு ஜெர்சின்னு இவர் கேட்க, உனக்காக மட்டும் சொல்றேன்னு அவரும் ஐ லவ் யூ சொல்றார். ஐயோ முடியலீங்க...!

சும்மா இருக்க கஷ்டம்
வீட்டில் சும்மா இருக்க கஷ்டமா இருக்குன்னு கவுதம் மேனன் சிம்பு கூட போனில் பேசி, இந்த ஸ்க்ரிப்டை சொல்கிறார். சிம்புவும் ஓகே சொல்லி, காமிரா மேன் இருக்கார்..கலக்கிடலாம் புரோன்னு சொல்லி எடுக்கப்பட்ட படம் இது. இவ்வளவுதான் சொல்ல முடியும்...வெறுப்பா இருக்கு.

அமிதாப் லாக்டவுன் படம்
அகில் இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப், நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி, மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி உள்ளிட்ட பல முக்கிய நடிகர் நடிகைகளுடன் ரன்வீர் கபூர் நடித்த குறும்படம் சும்மா அப்படி இருந்துச்சு..சிம்பிள் கான்செப்ட் கலக்கி இருந்தாங்க. அதுவும் நம்ம ரஜினி கண்ணாடியை தூக்கிப்போட்டு இந்த கண்ணாடியா பாருன்னு சொல்ல, அதற்குள் அந்த கண்ணாடியே வந்து ரஜினியின் கண்களில் உட்காரும் அதிசயத்தை வியந்து பார்ப்பார் ரன்வீர்...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications