Sembaruthi Serial: தூதுவளை ரசத்துக்கு பிரச்சனையா? அடடா...!
சென்னை: செம்பருத்தி சீரியலில் குட்வில் அம்பாசிடர் ஆகிவிட்ட பார்வதியின் கையால் தூதுவளை ரசம் வாங்கி குடிக்க மாட்டேன்னு சொல்லி அடம் பிடிக்கறாங்க அகிலாண்டேஸ்வரி அம்மா.
ஜலதோஷம், தலைவலி.. ஒரே அவஸ்தை...கம்பெனி குட்வில் அம்பாசிடர் ஆகிவிட்ட பார்வதி இனி சமையல் கட்டில் வேலை செய்ய கூடாது என்பது அகிலாண்டேஸ்வரி அம்மாவின் கட்டளை.
கட்டளையை மீற மாட்டாள் பார்வதி. பார்வதி எதிர்த்து நின்று ஜெயித்தது அகிலாண்டேஸ்வரி அம்மாவின் கேண்டிடேட் மித்ராவை என்றாலும் அந்த கோபத்தை எல்லாம் அகிலா காண்பிக்க மாட்டாங்க.

தூதுவளை ரசம்
காலையில் இருந்து ஜலதோஷம் தலைவலின்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். யாரும் இன்னும் தூதுவளை ரசம் வச்சு தர மாட்டேன்றாங்கன்னு புலம்பிகிட்டே லேப்டாப் பார்த்துகிட்டு இருக்காங்க அகிலாண்டேஸ்வரி அம்மா. அப்போதுதான் ஒரு சமையல்கார அம்மா வந்து அம்மான்னு கையில் டிரேயுடன் வந்து நிக்கறாங்க.

கையை அசைத்து
அகிலாண்டேஸ்வரி ம்ம்.. வா என்று கையை அசைத்து உள்ளே வர அனுமதி அளிக்கறாங்க. பிரியா ராமனின் இந்த நடிப்பு ஸ்டைலே தனி அழகாக இருக்கிறது இந்த சீரியலில். அந்த அம்மா உள்ளே வர.. என்னது இது என்று கேட்கறாங்க. தூதுவளை ரசம்மா.. என்று அந்த அம்மா சொல்ல எடுத்த வாயில் வச்சுட்டு..

தூதுவளை ரசமா?
இதுவா தூதுவளை ரசம்? நான் எத்தனை தடவை பார்வதி கையால தூதுவளை ரசம் வச்சு குடிச்சு இருக்கேன்? அவள் சமையல் கட்டில் இருக்கும்போது சமையலை கத்துக்கறதில்லை. வெறும் வெங்காயம் தக்காளி நறுக்கிக் குடுத்து பொழுதை போக்கி இருக்கீங்க. சமையல் கத்துக்கலை . வேணாம் எடுத்துட்டு போன்னு வச்சுடறாங்க.

இன்னொரு கப்
இன்னொரு கப் ரசம் வருது. அதை குடிச்சு பார்த்துட்டு.. ம்ம் இதுதான் தூதுவளை ரசம்.. பார்வதி கையால நான் எத்தனை தடவை குடிச்சு இருக்கேன். இப்படித்தான் இருக்கும். அப்படின்னு பார்த்தால் அங்கே பார்வதி நிக்கறா . பார்த்துட்டு ஷாக்காகி.. பார்வதி உன்னை எத்தனை தடவை சமையல் கட்டுக்கு போக கூடாதுன்னு சொல்லி இருக்கேன். நான் இந்த ரசத்தை குடிக்க மாட்டேன்.என் பேச்சை நீ மீறி இருக்கேன்னு சொல்றாங்க,

பேச்சை மீறலை
இல்லைம்மா உங்க பேச்சை நான் மீறலை. இது அவுட் ஹவுஸ்ல வச்ச ரசம். இப்போ உங்க பேச்சை நான் கேட்க மாட்டேன். உங்க ஆரோக்கியம் எனக்கு முக்கியம் அம்மான்னு சொல்றா. அதுக்குள்ளே அகிலா அம்மாவின் கணவர் வந்து அகிலா உன் ஆரோக்கியம் முக்கியம்னுதானே பார்வதி தூதுவளை ரசம் வச்சு கொண்டுவந்து குடுத்து இருக்கா. குடி அகிலான்னு சொல்றார்.
இப்படி போகுது காட்சிகள்..
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications