ஜெயலலிதா போல திரிஷா.. விஜய் வீட்டிற்கு போனது இதற்காகத்தானா? நடிகை வனிதா சொன்னதுதான் நடக்கிறதா?
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரசியல் மட்டுமல்லாமல் சினிமா வட்டாரங்களும் கவனத்தின் மையமாக மாறியுள்ளன. குறிப்பாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது, இந்த தேர்தலை மிகவும் விசேஷமாக மாற்றியுள்ளது.
இந்த சூழலில், சில நாட்களுக்கு முன்பு நடிகை வனிதா விஜயகுமார் அளித்த பேட்டி மீண்டும் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட காரணம் நடிகை திரிஷா தான் என கூறியிருந்தார். மேலும், விஜய் வெற்றி பெற்றால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்து, அதில் திரிஷாவை அரசியலுக்கு கொண்டு வர வாய்ப்பு உள்ளதாகவும், அவர் அரசியலுக்கு தகுதியானவர் என்றும் வனிதா தெரிவித்திருந்தார்.

வனிதா பேட்டி
மேலும் வனிதா பேசும் போது, திரிஷா அரசியலுக்கு வர தகுதியில்லாதவர் என்று யாரும் சொல்ல முடியாது. அவர் நன்றாக கல்வி கற்றவர். ஆங்கிலத்தில் சரளமாக பேசுவார். நல்ல நன்னடத்தை கொண்டவர். புத்திசாலி. மரியாதை தெரிந்தவர். அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அரசியலில் இருக்க வேண்டிய பல குணாதிசயங்கள் அவரிடம் இருக்கின்றன.
ஜெயலலிதா போல படித்தவர்
அவர் ஜெயலலிதா போல சர்ச் பார்க் பள்ளியில் படித்தவர். அது ஒரு ஒழுக்கம், கட்டுப்பாடு, சமூக புரிதலை கொடுக்கும். அந்த அளவிற்கு அவருக்கு அடிப்படை வலிமை இருக்கிறது. அதனால் அவர் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக நிலைத்து நிற்பார்.
திரிஷா போன்ற பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். ஒருவரை ஒரு நடிகையின் அடையாளத்தில் மட்டும் பார்க்கக்கூடாது. 'யாரோ ஒருவரின் காதலி, மனைவி' என்ற அடையாளத்தில் பெண்களை குறைத்து பேசுவது தவறு. அவர்களுக்கும் தனிப்பட்ட அடையாளம் இருக்கிறது. அறிவு இருக்கிறது. திறமை இருக்கிறது.
விஜய் மற்றும் திரிஷா உறவு
விஜய் மற்றும் திரிஷா பற்றிய உறவை வைத்து பேசுவது தேவையில்லை. அவர்கள் இருவரும் தனித்தனியாக திறமையானவர்கள். அந்த திறமையை வைத்து மதிப்பிட வேண்டும். அவர்களை பற்றி சமூக வலைதளங்களில் சிலர் மிகவும் கீழ்த்தரமாக பேசுவது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அது முற்றிலும் தவறு" என அவர் தெரிவித்துள்ளார். இந்த கருத்து அப்போது சர்ச்சையையும், விவாதங்களையும் கிளப்பியது.

2026 தேர்தல் முடிவுகள்
இந்நிலையில், இன்று தேர்தல் முடிவுகள் விஜய்க்கு சாதகமாக நகரும் தருணத்தில், திரிஷா எடுத்துள்ள ஒரு நடவடிக்கை அந்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. தனது பிறந்தநாளான இன்று காலை, அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ரசிகர்கள் பலர், "இது தவெக வெற்றிக்காக செய்த பிரார்த்தனையா?" என கேள்வி எழுப்பியும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் வீட்டிற்கு சென்ற திரிஷா
இதற்குப் பிறகு, சென்னை நீலாங்கரையில் உள்ள விஜயின் இல்லத்திற்கே நேரடியாக சென்றுள்ளார் திரிஷா. தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் இந்த முக்கிய தருணத்தில், அந்த பகுதி முழுவதும் கட்சி தொண்டர்கள், ரசிகர்கள், மற்றும் ஊடகத்தினரால் சூழப்பட்டிருந்தது. போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது. இப்படியான சூழலில் திரிஷா ரேஞ்ச் ரோவர் காரில் வந்து நேராக வீட்டிற்குள் சென்றது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஏற்கனவே விஜய்-திரிஷா குறித்து பல வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், இந்த நேரத்தில் அவர் விஜயின் வீட்டிற்கு சென்றது, "வனிதா கூறியது போல ஏதேனும் நடக்கிறதா?" என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. சிலர் இதை சாதாரண நட்பு விஜயம் எனக் கருதினாலும், மற்றவர்கள் அரசியல் மற்றும் தனிப்பட்ட உறவுகளை இணைத்து பல்வேறு கோணங்களில் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
அதே நேரத்தில், தேர்தல் நிலவரங்கள் தொடர்ந்து பரபரப்பை கூட்டிக் கொண்டே செல்கின்றன. பல முக்கிய தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதால், "முதல் முறையே ஆட்சியா?" என்ற கேள்வி அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் இளைஞர் வாக்குகள் அதிகமாக விஜய்க்கு சென்றிருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.
இந்த சூழலில், திரிஷாவின் இந்த வருகை ஒரு சாதாரண சம்பவமா? அல்லது அரசியல் ரீதியாக ஏதாவது சிக்னலா? என்பது குறித்து சமூக வலைதளங்களில் சூடான விவாதம் நடைபெற்று வருகிறது. வனிதா விஜயகுமார் முன்வைத்த கருத்து, திரிஷாவின் கோவில் தரிசனம், அதற்குப் பிறகு விஜயின் இல்லத்திற்கு நேரடி வருகை இந்த மூன்று சம்பவங்களும் இணைந்து தற்போது ஒரு பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள்












Click it and Unblock the Notifications