எம்ஜிஆரின் மடியில் விழுந்து.. கோடிகளில் புரளும் ஐசரி கணேஷ்.. வியப்பூட்டும் "கோடம்பாக்கத்து அம்பானி"
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்ட்டரில் மே 9-ம் தேதி, ஐசரி கணேஷ் மகளின் திருமணம் நடைபெற உள்ளது. திருமண வரவேற்பு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாஷ்யம் பிரார்த்தனாவில் நடைபெற உள்ளது. இந்த திருமண ஏற்பாடுகள் குறித்த செய்திகள்தான் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதனிடையே, மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றில் ஐசரி கணேஷ் குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், கல்வியாளர், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் என்ற பன்முகம் கொண்டவர் ஐசரி கணேஷ்.. இவர் மறைந்த நடிகர் ஐசரி வேலனின் மகன் ஆவார். பல வெற்றிப் படங்களை தயாரித்து வருபவர் ஐசரி கணேஷ்..

இவரது மகளுக்கு விரைவில் திருமணம் செய்ய போகிறார்.. திருச்சியைப் பூர்விகமாகக் கொண்ட தொழிலதிபர் உமாசங்கர் - சித்திரா தம்பதியரின் மகனான லஷ்வின் குமார் ஐசரி குடும்பத்தின் மருமகனாகப் போகிறார்.
இந்நிலையில் ஐசரி கணேஷ் குறித்து Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "ஐசரி வேலன் என்பவர் எம்ஜிஆருக்கு நெருக்கமானவர். சந்திரபாபுவுடன் முரண் ஏற்பட்டதால்தான் நாகேஷை சினிமாவுக்கு கொண்டு வந்தார் எம்ஜிஆர்..
தேங்காய் சீனிவாசன் - ஐசரி வேலன்
ஒருகட்டத்தில் நாகேஷூக்கும் எம்ஜிஆருக்கும் முரண் வந்தது. அப்போது ஐசரி கணேஷ், தேங்காய் சீனிவாசன் இருவரையும் தேர்ந்தெடுத்தார்.. ஆனால், தேங்காய் சீனிவாசன் ரயில்வே பணியிலிருந்து வந்தாலும், சினிமாவில் ஜெய்சங்கர், சிவாஜி உள்ளிட்ட பலரது படங்களில் நடித்தார்.. ஆனால், ஐசரி வேலனுக்கு எம்ஜிஆர் என்ற 3 எழுத்து தவிர வேறு தெரியாது. கடைசிவரை எம்ஜிஆருடனேயே இருந்துவிட்டார்..
வடசென்னையை சேர்ந்த ஐசரி வேலனுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.. அதில் ஒருவர்தான் ஐசரி கணேஷ்.. இளம்பருவத்திலேயே தந்தையை இழந்த குடும்பத்தில் அதிகமாகவே கஷ்டப்படுவார்கள். தன்னுடைய கல்வியாலேயே படிப்படியாக வளர்ந்து இன்று கல்வியாளராகவே உயர்ந்துவிட்டார்.
கல்வித் தந்தைகள்
பெரும்பாலும், சாராய வியாபாரிகளும், மழைக்காக பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காதவர்கள்தான் இன்றைக்கு இந்தியாவில் கல்வித்தந்தைகளாக உள்ளார்கள்.. ஆனால், 6-க்கும் மேற்பட்ட பட்டங்களை பெற்றவர் ஐசரி கணேஷ்.. இப்படி படித்தவர்கள் கல்வித்தந்தையாக இருப்பவர்கள் மிகவும் குறைவு..
அந்தவகையில், கல்வியாளரே கல்வித்தந்தையாகவும் மாறி, கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேரின் வாழ்க்கையை புரட்டிப்போட்டவர் ஐசரி கணேஷ்.. கல்வி நிறுவனத்தின் மூலம் 8000 பேர் மாத ஊதியம் பெற்று வருகிறார்கள்.. மிகச்சிறந்த மனிதர்..
தயாள குணம் - சத்தமில்லாத உதவி
எம்ஜிஆர் மடியிலேயே வளர்ந்தவர் என்பது கொடுத்து வைத்த விஷயம்.. தயாள குணம் என்து இயல்பிலேயே ஐசரி கணேசனுக்கு உண்டு.. அதேசமயம், தான் கொடுப்பதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்.. யாருக்கும் சத்தமில்லாமல் பல உதவிகளை செய்பவர்.. அவரிடம் உதவிகளை பெற்றவர்கள் எத்தனையோ பேர் என்னிடமே இதை சொல்லியிருக்கிறார்கள்..
நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம், செய்யக்கூடிய பல காரியங்களை செய்ததே ஐசரி கணேஷ்தான்... சினிமா வட்டாரத்தில் ஏழைத் தொழிலாளர்களுக்கு பென்ஷன் தந்து வருகிறார்..
நலத்திட்ட உதவிகள்
ஏழை குழந்தைகளை என்ஜினியராக்கியிருக்கிறார்.. மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு உதவி கொண்டிருக்கிறார்.. இதெல்லாம் யாருக்கும் வெளியே தெரியாது.. மற்றவர்களும் இதை சொல்வதில்லை..
எம்ஜிஆர் மடியிலேயே வளர்ந்தவர்.. தயாள குணம் இயல்பிலேயே இவருக்கு உண்டு.. தான் கொடுப்பதை பிறருக்கு காட்டிக் கொள்ள மாட்டார்.. தமிழ் சினிமா வீழ்ந்து கிடந்த சமயத்தில், தான் சில நஷ்டங்கள் அடைந்தாலும், முதலீடுகளை செய்து, உயிர்ப்புடன் வைத்திருந்தார்.. அதனால்தான் கோலிவுட் அம்பானி என்று இவரை பாராட்டுகிறார்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications