டி.எம் கிருஷ்ணாவிற்கு உயரிய விருது.. இது சங்கீத உலகத்தை இரண்டாக பிரிக்கிறது! ஜேம்ஸ் வசந்தன் பதிவு
சென்னை: இசையமைப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பலருக்கும் பரிச்சயமான ஜேம்ஸ் வசந்தன் பாடகர் டி.எம் கிருஷ்ணாவிற்கு சங்கீத உலகின் உயரிய விருதான 'சங்கீத கலாநிதி' என்ற விருது கொடுத்திருக்கும் நிலையில் அது குறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
டி.எம் கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது கொடுத்ததை எதிர்த்து கர்நாடக இசை சகோதரிகளான ரஞ்சனி- காயத்ரி கடுமையாக விமர்சித்து இருக்கும் நிலையில் அது பற்றியும் அந்த பதிவில் ஜேம்ஸ் வசந்தன் குறிப்பிட்டு இருக்கிறார்.

அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபல இசை அமைப்பாளராக மாறிய ஜேம்ஸ் வசந்தன் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வரும் ஜேம்ஸ் வசந்தன் அரசியல், சினிமா, மதங்களை வைத்து பேசுபவர்களையும் அடிக்கடி விமர்சித்து வருகிறார். சமீபத்தில் கூட நடிகர் விஜய் தமிழக மக்கள் வெற்றிக் கழகம் தொடங்கியது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார்.
அதுபோல கிறிஸ்தவ மத போதகர்கள் குறித்தும் அடிக்கடி வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் தற்போது பாடகர் டி.எம் கிருஷ்ணா பற்றி வெளியிட்ட பதிவு இணையத்தில் அதிகமான லைக்குகளை பெற்று பகிரப்பட்டு வருகிறது. அதில்,கர்நாடக சங்கீத இசை உலகின் உயரிய விருதான 'சங்கீத கலாநிதி' இந்த ஆண்டு பாடகர் டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பு சங்கீத உலகத்தை இரண்டாகப் பிரித்திருக்கிறது. கிருஷ்ணா "மிகப்பெரிய ஞானஸ்தன்; அபாரமான கலைஞர்" என ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்கிற சங்கீத உலகம் இந்த விருது விஷயத்தில் இரண்டாகப் பிரிகிறதென்றால் அது இசையின் அடிப்படையில் அல்ல என்பது தெளிவாகிறதுதானே?
வேறென்ன பிரச்சனை? அவருடைய சமூகநீதிப் பார்வையும், அதைப் பளீரென்று உரத்த குரலில் அஞ்சாமல் சொல்லும் இயல்புந்தான். கடந்த சில ஆண்டுகளாக அவர் முன்னெடுத்து வரும் சில கோட்பாடுகள்தான் காரணம்."சபாக்களில் பிராமண ஆதிக்கம் இருக்கிறது. அதைக்களைய வேண்டும். சாஸ்திரீய சங்கீதத்தை வெகுஜனத்துக்கும் எடுத்துச்செல்ல வேண்டும்." என்று அவர் வெளிப்படையாகக் சொன்னதுதான் இசை உலகத்தில் பெரிய பூதத்தைக் கிளப்பிவிட்டு, பாரம்பரியத்தை உலுக்கி, பலரது சினத்தைத் தூண்டியது.
யாரை மேல்மட்டச் சமூகம் தீண்டாமல் ஒதுக்கிவைத்ததோ அவர்களோடு சேர்ந்து ஆல்காட் குப்பத்திலும், சேரிகளிலும் கர்நாடக இசையை எளிமைப்படுத்திப் பாடினார். மூன்றாம் பாலினத்தவரோடு சேர்ந்து ஒரு கச்சேரி நடத்தினார். இதைப்போல பல கலை-கலாச்சாரப் புரட்சிகளைத் தொடர்ந்து செய்கிறார். 21-ம் நூற்றாண்டு பாரதியைப் பார்ப்பது போல் இருக்கிறதா?
இவரும் பிராமணர்தான்! ஆனால் பிராமணியத்தின் தவறான சில பகுதிகளைக் களைய முயற்சிக்கிறவர். இன்றைய சங்கீத உலகின் முன்னணி நட்சத்திரங்களான ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் டி.எம். கிருஷ்ணா தலைமையில் இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கிற இசை விழாவைப் புறக்கணிப்பதாக நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.
அந்த அறிக்கையில் இப்படிச் சொல்கின்றனர் - "He has caused immense damage to the Carnatic music world, wilfully and happily stomped over the sentiments of this community and insulted most respected icons like Tyagaraja and MS Subbulakshmi."'Sentiments of this community' என்பது என்னவாக இருக்கும்? அடுத்து அவர்கள் சொல்கிறார்கள் -
"It is dangerous to overlook Mr TM Krishna's glorification of a figure like EVR aka Periyar who
1. Openly proposed a genocide of 'brahmins'
2. Repeatedly called/abused every woman of this community with vile profanity
3. Relentlessly worked to normalize filthy language in social discourse..
டி.எம். கிருஷ்ணா பெரியாரைப் புகழ்ந்து பேசியிருக்கிறாராம். அதனால் அவர் ரொம்ப ஆபத்தானவராம்.
பாடகி சின்மயி இவர்களது அறிக்கைக்கு எதிர் அறிக்கை விட்டிருக்கிறார். "ஆன்மீகத்தின், சங்கீத உலகத்தின் புனிதம் கெட்டுவிட்டது என்று இப்போது கொதிக்கிறீர்களே... இதே சங்கீத உலகில் பல பெரிய மனிதர்கள், வித்வான்கள் தங்களிடம் இசை பயில வரும் பல குழந்தைகளின் கற்பை சூறையாடுகிறார்கள், காப்பாற்றுங்கள் என்று 'Me Too' இயக்கத்தில் நாங்கள் குரலெழுப்பி கூக்குரலிட்டபோது எதுவுமே நடக்காதது போல அமைதி காத்தீர்களே. அப்போது உங்கள் பொறுப்பும், அக்கறையும் எங்கே போனது?" என்று கேட்டிருக்கிறார் என ஜேம்ஸ் வசந்தன் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications