ஜனநாயகன் தயாரிப்பாளருக்காக விஜய் எடுத்த பெரிய முடிவு.. மூன்று பேருக்குள் போட்டி! ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன்
சென்னை: நடிகர் விஜய் நடித்துவரும் ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான சர்ச்சைகள் தற்போது திரையுலகிலும், அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியிருந்த இந்த படம் வெளியீட்டிற்கு முன்பே இணையத்தில் லீக் ஆனது, படக்குழுவினருக்கு மட்டுமல்லாமல் முழு தென்னிந்திய திரைப்படத் துறைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் நஷ்டம் அடையாமல் இருப்பதற்காக விஜய் ஒரு முக்கிய முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது இந்த தகவல் காலையில் இருந்து பேசப்பட்டு வரும் நிலையில் இது குறித்து திரைப்பட விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறனும் ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார்.

ஜனநாயகன் பட சம்பவம்
ஜனநாயகன் படத்தை ஹெச் வினோத் தான் இயக்கி இருக்கிறார். தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் சாயலில் இருந்தாலும், தமிழ்நாட்டு அரசியல் சூழலுக்கும், நடிகர் விஜயின் திரைமாதிரிக்கும் ஏற்றவாறு கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படம் ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியது.
விஜயின் கடைசி படம்
முதலில் இந்த படம் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் வெளியீடு 2026 ஜனவரி மாதத்திற்கு மாற்றப்பட்டது. குறிப்பாக, இந்த படம் நடிகர் விஜயின் கடைசி திரைப்படமாக இருக்கும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்ததால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது. முன்பதிவு தொடங்கியவுடன் டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்தன.
ஜனநாயகன் படம் லீக்
ஆனால், வெளியீட்டிற்கு முன்பாகவே படம் முழுவதுமாக ஹெச்டி வடிவில் இணையத்தில் வெளியானது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இது சாதாரண கசிவு அல்ல, திட்டமிட்ட செயல் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு, சிலரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த லீக்கிற்கு பின்னால் யார் உள்ளனர் என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் வெளியாகவில்லை.
விவாதம்
ஒருபுறம், "படக்குழுவிலிருந்தே தகவல் வெளியேறியிருக்கலாம்" என்ற குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. மறுபுறம், அரசியல் காரணங்களும் இருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இதனால் இந்த விவகாரம் சினிமாவை தாண்டி அரசியல் விவாதமாக மாறியுள்ளது.
விஜய் எடுத்த முடிவு
இந்த நிலையில், பட தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய நடிகர் விஜய் ஒரு முக்கியமான முடிவு எடுத்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, ஜனநாயகன் படத்தை தயாரித்த நிறுவனத்திற்காக மேலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க அவர் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இது ஆரம்பத்தில் பரவிய வதந்தியாக இருந்தாலும், தற்போது பல தரப்பிலிருந்து இதே தகவல் வெளியாகுவதால் அதற்கு வலு சேர்ந்து வருகிறது.
இந்த புதிய திரைப்படத்தை அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகிய முன்னணி இயக்குநர்களில் ஒழுவர் இயக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகின்றன. இந்த படம் தான் நடிகர் விஜயின் இறுதி திரைப்படமாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், "விஜய் இனி சினிமாவில் நடிக்க மாட்டார்" என்று முன்பே அறிவித்திருந்த நிலையில், மீண்டும் ஒரு படத்தில் நடிப்பார் என்ற தகவல் வெளியாகியதும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவத் தொடங்கின. இதை முன்னிட்டு, பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதளத்தில் சிரிப்பை குறிக்கும் எமோஜியை பகிர்ந்து இரக்கிறார். அவர் நேரடியாக எதையும் கூறவில்லை என்றாலும், இந்த பதிவு இந்த விவகாரத்தை கலாய்க்கும் விதமாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் விஜயின் தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. தயாரிப்பு நிறுவனமும் புதிய படம் தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் இந்த தகவல்கள் உண்மையா அல்லது வதந்தியா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
மொத்தத்தில், ஜனநாயகன் திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே சந்தித்துள்ள இந்த லீக் பிரச்சனை, தமிழ் திரைப்படத் துறையில் பாதுகாப்பு மற்றும் காப்புரிமை குறித்த பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. அதே நேரத்தில், நடிகர் விஜயின் எதிர்கால முடிவுகள் பற்றிய ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையுலகமே தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
-
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
"புரோட்டோகால் முக்கியம்!" சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம் -
Z பாதுகாப்பை கூட நம்ப மாட்டார்? விஜய் நம்பும் ஒரே ஆள் நயீம் மூஸா! முதல்வரின் இடது கை! யார் இவர்? -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன?












Click it and Unblock the Notifications