இப்பத்தான் புடவை கட்டிவிட்டான்.. பாவம் அதுக்குள்ளே அம்மை போட்டுருச்சே!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் ஜனனியும், சந்தோஷும் இன்னும் மனமொத்து வாழ ஆரம்பிக்கல.
சந்தோஷ் திருமணத்துக்கு முன் சக்தின்னு ஒரு பொண்ணை காதலிச்சதா சொல்லி, அவ கூடத்தான் வாழணும்.. பாவம் என் சக்தின்னு என்னிக்கு கல்யாணத்து அன்னிக்கு முதலிரவுல ஜனனிகிட்ட சொன்னானோ, அன்னிலேர்ந்து ஜனனி ஒதுங்கிக்கறா.
அந்த சமயத்துலதான் ரெண்டு பேரும் டைவர்ஸ் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்து அது நடப்புல இருக்கு. இருந்தாலும் ஜனனிக்கு சந்தோஷை விட மனசில்லை. அதே மாதிரி சந்தோஷுக்கு ஜனனியை இழக்க மனசு இல்லை.

மனசு தவிக்குது
ஜனனிக்கு சந்தோஷ் மேல இருக்க ஆசையை சொல்ல முடியலை, சந்தோஷுக்கும் ஜனனி மேல இருக்க ஆசையை சொல்ல முடியலை. சொல்லாமத்தான் ரெண்டு மனசும் தவிக்குது.

அம்மை
ஆஸ்ரமத்துல காலையில எழுந்து உட்கார்ந்து இருக்கா ஜனனி. அப்போ டம்ளர் கீழ விழற சத்தம் கேட்டு முழிச்சுக்கறான் சந்தோஷ். என்னங்கன்னு கேட்க, தவறி விழுந்துருச்சுன்னு சொல்றான்.. ஆமாம் உங்க முகத்துல என்னனு பார்க்கறான். அம்மை மாதிரி தெரியுதுங்க.. பார்ப்போம்..நீங்க பச்சை தண்ணியில குளிச்சுட்டு வாங்கன்னு சொல்றான்.

புடவை
ஜனனி குளிச்சுட்டு வெளியில வர்றா.. நில்லுங்க ஜனனின்னு சொல்லி, அவள் புடவை மடிப்பை கீழே உட்கார்ந்து சரி செய்யறான். என்னங்க வேணாம் பிலீஸ்னு சொல்ல, அட இருக்கட்டும் இருங்க.. நீங்க நல்லாவே புடவை கட்டலைன்னு சொல்றான். ஆஸ்ரமத்துல ஒரு பாட்டியை அழைச்சுக்கிட்டு வந்து ஜனனியின் முகத்தை பார்த்து, தம்பி அம்மைதான் போட்டு இருக்குன்னு சொல்றாங்க..

தனி படுக்கை
ரெண்டு பேரும் ஜாக்கிரதையா இருக்கணும். வேப்பிலைக்காரி தானாவே 10 நாளில் போயிருவா. அதுவரைக்கும் தனி படுக்கைதான் புரியுதான்னு சொல்றாங்க. ரெண்டு பேரும் முழிக்க, புருஷனை பக்கத்துல அண்ட விடாதேன்னு சொல்றாங்க. ஏற்கனவே அப்படித்தான்னு ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கறாங்க.

சந்தோஷ்
ஜனனியை சந்தோஷ் தானே பார்த்துக்கறதா சொல்றான். வீட்டுல இருக்கறவங்களும் ஓகே சொல்ல, அம்மை வந்த பொண்ணு ஜனனியை எப்படி எல்லாம் ரொமான்ஸோட பார்த்துக்கறான்னு கவனிப்போம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications