ஐஸ்வர்யாவை நிம்மதியா ஐஸ்கிரீம் சாப்பிட விட்டாங்களா.. !
சென்னை: சந்தோசமாக ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கொண்டு இருந்த செம்பருத்தி ஐஸ்வர்யாவுக்கு இவ்வளவு பெரிய அதிர்ச்சியா என்று ரசிகர்கள் சோகமாகியுள்ளனர்.
சீரியல்களில் முதல் இடத்தில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் ஐஸ்வர்யாவாக கலக்கிக் கொண்டிருக்கும் ஜனனிக்கு வந்த ஃபோன் கால் அவர் மட்டுமல்ல அவருடைய ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
திடீரென்று இந்த மாதிரி ஒரு செய்தி வரும் என்று அவர் மட்டுமல்ல அவருடைய ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கவில்லை. சந்தோஷமாக ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு இருந்த ஜனனிக்கு இப்படி ஒரு இடியை தூக்கி போட்டு விட்டீர்களே.

செம்பருத்தி ஐஸ்வர்யா
செம்பருத்தி சீரியலில் கதிரின் ஜோடியாக ஐஸ்வர்யா கேரக்டரில் மூன்று வருடமாக ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்திருந்த ஜனனி தற்போது இந்த சீரியலில் இருந்து தூக்கி விட்டார்கள் என்று ஒரு அதிர்ச்சியை ரசிகர்களுக்கு வெளியிட்டிருக்கிறார். இந்த சீரியலில் ஆரம்பத்தில் பணக்கார திமிரோடு வில்லத்தனத்தை காட்டிக்கொண்டிருந்த ஜனனி அதன் பிறகு மனம் திருந்தி அந்த வீட்டின் மருமகள் ஆகவும் ரசிகர்களின் சின்ன மருமகள் ஆகவே வாழ்ந்து வருகிறார்.

குடும்ப விருது
இப்போ தான் ஜீ தமிழில் இந்த சீரியலுக்கு விருதுகள் எல்லாம் வழங்கி நடிகைகளை இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்கள். ஆனால் இந்த நிலையில் திடீரென்று இப்படி ஒரு செய்தியை சொல்வார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் இந்த சீரியலில் இப்போ ஆதி பார்வதிக்கு இருக்கும் ரசிகர்கள் தற்போது கதிருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் பெருகி வருகிறார்கள்.

கதிருக்கு ஜோடி
கதிருக்கு நல்ல ஜோடியாகவும் அவருக்கு கஷ்டத்தில் துணை நிற்கும் மனைவியாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதனால் இந்த சீரியல் ரசிகர்களின் மனதிலும் நல்ல ஒரு இடத்தை பிடித்து விட்டார். ஜனனி சீரியல்களில் மட்டுமல்லாமல் யூடியூப் சேனல் ஒன்றை ஓபன் செய்து ரசிகர்களிடம் தொடர்பில் இருக்கிறார். யூடியூப் மூலமாக பல மேக்கப் வீடியோக்களையும் மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். அதில் கொஞ்ச நாட்களாக எந்த வீடியோக்களையும் அப்லோட் பண்ண வில்லை.

அழகின் ரகசியம்
அதனால் நேற்று சூட்டிங் முடிந்து வந்து புதிதாக ஒரு வீடியோ ஒன்றை போடலாம் என்று வீடியோ ரெக்கார்ட் பண்ணி கொண்டிருந்தார். அப்போது தான் தனது நகங்களின் அழகின் ரகசியத்தை கூறிக்கொண்டிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் ஐஸ்கிரீமை நன்றாக சாப்பிட்டு கொண்டு தைராய்டு பிரச்சனைகளுக்கு தீர்வுகளையும் கூறிக்கொண்டிருந்தார். திடீரென்று அவருக்கு ஒரு போன் வந்ததும் வீடியோ கட்டாகிவிட்டது.

ஐஸ்கிரீம் சாப்பிடும்போது
பேசிவிட்டு வந்த ஜனனி அதுவரைக்கும் சந்தோஷமாக ஸ்கிரீன் சாப்பிட்டு கொண்டிருந்தவர் கண்களில் நீர் தழும்ப அழுதுவிட்டார். செம்பருத்தி சீரியலில் இருந்து எனக்கு போன் வந்திருந்தது .இந்த சீரியலில் இனி நான் ஐஸ்வர்யா கேரக்டரில் தொடரப் போவதில்லை என்று திடீரென்று என்னிடம் கூறியிருக்கிறார்கள் .என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை சிச்சுவேஷன் அப்படி தான் அமைந்திருக்கிறது என்று கதறி அழுதுவிட்டார்.

ஐஸ்வர்யா பிரபலம்
மூன்று வருடமாக நான் ரொம்பவும் மேக்கப் போட்டது ஐஸ்வர்யா வாக தான் வேற எந்த சீரியலும் எனக்கு கிடைக்காத பெயரும் புகழும் இந்த சீரியல் தான் கிடைத்தது. நான் இந்த பீல்டுக்கு வந்து நான்கு வருடங்களில் மூன்று வருடம் தொடர்ந்து இந்த சீரியலில் இருந்து வருகிறேன்.அதனால் என்னால் முடியவில்லை என்று கதறி அழுதுவிட்டார்.

எல்லோருக்கும் கொடுங்க
இனிமேல் ஐஸ்வர்யா கேரக்டரில் நடிக்க வருபவர்களுக்கும் ஆதரவை இதுவரைக்கும் தந்தது போல கொடுங்கள். அதோடு விடாமல் அழுது கொண்டு இந்த சீரியலில் கூட நடித்தவர்களையும் ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என்று அழுது தீர்த்து விட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது இனி செம்பருத்தி சீரியலில் தொடர்ந்து ஐஸ்வர்யா வாக யார் நடிக்கப் போகிறார் எனும் அறிவிப்பை இந்த சீரியலில் இருந்து வெளியிடப்படவில்லை.

அடுத்து வரப் போவது யாரோ
இருந்தாலும் தொடர்ந்து இவர் இனி நடிக்கப் போவதில்லை என்று கூறியதும் பல ரசிகர்களும் இவருக்கு ஆதரவாக கமெண்டுகளை போட்டு வருகிறார்கள் .தற்போது இவர் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் எனும் சீரியலிலும் நடித்து கொண்டிருந்தாலும் அவருக்கு இந்த சீரியல் தான் ரொம்பவும் பிடித்த தாம் அதனால்தான் எந்த அளவுக்கு பீலிங்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications