இதழும் இதழும் நெருங்கும்போது சக்தி போன்... என்ன செய்வா ஜனனி....!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் சந்தோஷ் ஜனனியை முத்தமிடும் நேரம் காதலி சக்தியின் போன் வந்துருது. சந்தோஷ் போனை பார்க்கிறான்... ஜனனியை பார்க்கிறான்.
ஜனனி போனை எடுத்து பேசுங்கன்னு சொல்றா. பேசிட்டு வரேன்னு கட்டின பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டு காதலி சக்தியிடம் பேசப்போகிறான் சந்தோஷ்.
காதலியுடன் கணவன் போன் பேச தனியாக போக பொண்டாட்டி ஜனனி மனசு என்ன பாடுபடும். இதெல்லாம் காலக் கொடுமை. இப்படித்தானே இவர்கள் கல்யாணமும் நடந்திருக்கிறது.

சந்தோஷின் வாசனையை ஜனனி
ஜனனி இரவு படுத்து இருக்க, அவளின் தூக்கம் கலையாமல் இருக்க வேண்டும் என்று மெதுவாக நடக்கிறான். ஜனனி விருட்டென்று எழுந்து வந்துட்டீங்களா என்று கேட்கிறாள். மெதுவாதானே நடந்து வந்தேன்.. எப்படி ஜனனி கண்டு பிடிச்சீங்கன்னு கேட்கிறான் சந்தோஷ்.

வருதே உங்க வாசனை
இல்லை உங்க வாசனை வந்துச்சு.. அதன் கண்டுபிடிச்சேன்னு ஜனனி சொல்ல, என் பெர்ஃபியூம் வாசனையான்னு கேட்கறான் சந்தோஷ்...இல்லைங்க உங்க வாசனையை சொன்னேன்னு சொல்றா... எனக்கு என்னங்க வாசனை இருக்குன்னு சந்தோஷ் கேட்கிறான்.

நமக்கானவங்க பிடிச்ச வாசனை
நமக்கு பிடிச்சவங்க வாசனை எப்படிங்க நமக்கு தெரியாம போகும். உங்க வாசனை எனக்கு தெரியும்னு சொல்லிட்டு எழுந்து வந்து ஜன்னலைத் திறக்கறா.வெளியில இவள் பார்த்துக்கிட்டு நிக்க, அவனும் அவள் அருகில் வந்து நிக்கறான்.

மெதுவாக ஜனனியின் கை பிடிச்சு
மெதுவாக ஜனனியின் கையை பிடிச்சு, தன் விரல்களோடு கோர்த்துக் கொள்கிறான். அவள் மெதுவாக இவன் மார்பில் முகம் சாய்க்கிறாள். அவன் என்ன ஜனனி என்று கேட்க, ரொம்ப சந்தோஷமா இருக்குங்கன்னு சொல்றா. இந்த நிமிஷமே கூட் நான் செத்து போயிருவேன்னு சொல்ல, இவன் அப்படி சொல்லாதீங்க ஜனனி.. சந்தோஷமா நிறைய வருஷங்கள் வாழணும்னு சொல்லி வாயை பொத்துகிறான்.

ஜனனியின் முகத்தை நெருங்கி
சந்தோஷ் மெதுவாக ஜனனியின் முகத்தை நிமிர்த்தி, தன் முகத்தை அவள் முகத்தருகில் கொண்டு சென்று இதழ்களை நெருங்கி முத்தமிட எத்தனிக்கையில், சந்தோஷின் காதலி சக்தியிடம் இருந்து போன். அவன் ஜனனியின் முகத்தை பார்க்கிறான்..போனைப் பார்க்கிறான்..

என்னதான் செய்வா பாவம் ஜனனி
ஜனனி எடுத்து பேசுங்கன்னு சொல்ல..இல்லை வெளியில போயி பேசறேன்னு .போறான்.. கட்டிக்கிட்ட மனைவி..டைவர்ஸ் பன்றேன்னு சொல்ற கணவன்.. இப்போது மனசு மாறி தன்னை நெருங்குகையில் மீண்டும் காதலியின் நினைவு சந்தோஷுக்கு. பாவம் ஜனனி இப்போ என்ன செய்யறதுன்னு நீங்களே சொல்லுங்க...
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications