Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிரில் உட்கார்ந்து.. பாதத்தை உள்ளங்கையில் தாங்கி.. நிமிர்ந்து பார்த்தாள் ஜனனி.. பேரானந்தம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் சந்தோஷ் குடும்பம் ஆஸ்ரமத்துக்கு வந்திருக்கு. முந்தின நாள் இரவு முழுவதும் சந்தோஷின் தங்கைக்காக விழிச்சிருந்த ஜனனி. காரில் வரும்போது அசந்து தூங்கி கார் ஜன்னல் கண்ணாடியில் சாஞ்சுக்கறா.

சந்தோஷ் ஜனனியின் முகத்தைத் திருப்பி தனது தோளில் சாச்சுக்கறான். ஜனனி தூங்கறான்னு காரில் யாரும் பேசலை, பாட்டும் போடக் கூடாதுன்னு மாமனார் சொல்லிடறாங்க.

இதை எல்லாம் பார்க்கும் பெரிய மருமகள் மாயாவுக்கு கோபம் பொத்துகிட்டு வருது.ஆனாலும் நமக்கு வீரியம் முக்கியமில்லை காரியம்தான் முக்கியம். இங்கிருந்து வீட்டுக்கு போகும்போது ஆர்த்திக்கு, நவீனுக்கும் கல்யாணம்னு முடிவு பண்ணிட்டு போகணும்னு நினைச்சுக்கறா.

உண்மையா?

உண்மையா?

குருஜி, ஜனனி நீ வந்து இந்த குத்து விளக்கை ஏத்துமான்னு சொல்றார். ஜனனி எழுந்து போயி விளக்கேத்தி, குருஜி சொல்லும் மந்திரத்தை திருப்பி சொல்றா. சொல்லிக்கிட்டு இருக்கும்போதே திடீர்னு விளக்கு அணையுது.. மத்த எல்லா விளக்கும் எரியுது, ஆனா, ஜனனி ஏத்திய குத்துவிளக்கு மட்டும் அணைஞ்சுருது.

குருஜி

குருஜி

மறுபடியும் குருஜி, இன்னொரு தடவை விளக்கை ஏத்துமான்னு சொல்றார். ஜனனி ஏத்திவைக்க இப்போது விளக்கே கவுந்துடுது.உடனே இந்த பொண்ணை வெளியில் போக சொல்லுங்க.. இந்த பொண்ணு இன்னும் ஒரு நிமிஷம் இங்க இருந்துச்சு புருஷனோட உயிருக்கு ஆபத்துன்னு சொல்றார் குருஜி.

அவர் நல்லாருக்கணும்

அவர் நல்லாருக்கணும்

நான் போயிடறேன்.. அவர் நல்லாருக்கணும்..நான் போயிடுறேன் அவர் நல்லா இருக்கணும்னு ஜனனி கதறி அழ... விசுக்குன்னு எழுந்துக்கறான் சந்தோஷ். தூங்கிகிட்டே கதறி அழும் ஜனனியை எழுப்பி என்னங்க என்னாச்சுன்னு கேட்கறான். அப்போதான் கனவுன்னு தெரியுது. கெட்ட கனவு, மறுபடியும் என்னை என் வீட்டுக்கே அனுப்பற மாதிரின்னு அழறா.

நடக்காதுங்க

நடக்காதுங்க

அதெல்லாம் நடக்காதுங்க.. கனவுதானே.. கவலைப்படாம தூங்குக்குங்கன்னு சொல்லி படுக்க வைக்கறான். காலையில் எழுந்து அவன் குளிச்சுட்டு வர, பின் இவளும் குளிச்சுட்டு வந்து கழட்டி வைத்த நகைகளை போட்டுக்கிட்டு கொலுசை போடறா.

எங்கே மெட்டி

எங்கே மெட்டி

காலில் கொலுசு போடும்போது கவனிருக்கறா ஒரு கால் விரலில் மெட்டியை காணோம். பக்குன்னு ஆகுது அவளுக்கு.. எழுந்து தேடறா.. எங்கேயும் காணலை. சத்தமிட்டு அழறா. பதறி வந்த சந்தோஷ் என்னாச்சுன்னு கேட்க. மெட்டியை காணலை.. எப்பவும் நான் இப்படித்தான் அதிர்ஷ்டம் கெட்டவ.. என்னவோ நடக்க போவுதுன்னு சொல்லி அழறா.

காரில்

காரில்

அழாதீங்க.. கடைசியா அந்த மெட்டியை எப்போ பார்த்தேங்கன்னு கேட்கறான். காரில் பார்த்தேன் இருந்துச்சுங்கன்னு சொல்றா. இருங்க காரில் இருக்கான்னு பார்த்துட்டு வரேன்னு சொல்லிட்டு போறான்.. அங்கியும் இல்லை. ஜனனி நம்பிக்கை இழந்து குத்துக்கால் வச்சு பெட்டில் உட்கார்ந்து முகத்தை கால்களுக்கு இடையில் புதைச்சு அழறா..

தங்க மோதிரம்

தங்க மோதிரம்

சந்தோஷ் ஜனனி அழுவதை சகிச்சுக்க முடியாம தன் விரலில் இருக்கும் மோதிரத்தை பார்க்கறான். அங்கிருக்கும் சுவாமி படத்தின் முன் தனது மோதிரத்தை கழட்டி வைக்கறான். கொஞ்ச நேரம் கழிச்சு மோதிரத்தை எடுத்து, ஜனனியின் எதிரில் உட்கார்ந்து அவள் பாதத்தை மென்மையாக தனது உள்ளங்கையில் பிடிக்கறான்.

ஜனனி சந்தோஷை

ஜனனி சந்தோஷை

முகத்தை நிமிர்த்தி சந்தோஷை பார்க்கறா ஜனனி. அவன் தனது மோதிரத்தை மெதுவாக ஜனனியின் கால் விரலில் மெட்டியாக போட்டு விடறான். ஜனனி முகத்தில் பரவசம்.. ஆனந்தம்.. பேரானந்தம்.என்ன சொல்ல இந்த உணர்வை..இது பெண்களுக்கு கிடைக்கும் வரம்தானே...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+