kodeeswari: மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்.. அச்சு அசல் ஜெயலலிதா.. வாவ் அனுஷ்யா!
சென்னை: என்னதான் சொல்லுங்க.. ஜெயலலிதா ஜெயலலிதாதான். மறைந்தாலும் அவரை மறக்காத மக்கள் இன்னும் லட்சக்கணக்கில் உள்ளனர். அதற்கு ஒரு அருமையான உதாரணத்தை கோடீஸ்வரி நிகழ்ச்சி கண்டுள்ளதுங்க.
ராதிகா சரத்குமார் நடத்தி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் டிவியில் கலக்கலாக போய்க் கொண்டுள்ளது. ஒரு கோடீஸ்வரியையும் கண்டு விட்டது இந்த நிகழ்ச்சி.
இந்த நிலையில் மக்கள் மனதில் வாழ்ந்து வரும் ஜெயலலிதா அம்மாவுக்கு ஒரு பெருமையைக் கொடுத்து விட்டது இந்த நிகழ்ச்சி. அதில் கலந்து கொண்ட அனுஷ்யாதான் அந்த பெருமையைக் கொடுத்தவர்.

சாம்ராஜ்ய ஜெயலலிதா
எல்லோருக்குமே ஒரு தலைவரைப் பிடிக்கும். அது அவரவர் கொள்கை, செயல்பாடுகள் உள்ளிட்டவற்றைப் பார்த்து வருவது இந்த பிடித்தம். அப்படிப்பட்ட தலைவர்களில் ஒருவர்தான் ஜெயலலிதா. அவரைப் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. காரணம், ஒரு பெண்ணாக இருந்து கொண்டு தனி சாம்ராஜ்ஜியமே நடத்தி விட்டுச் சென்றவர் ஜெயலலலிதா. அரசியலுக்கு வர விரும்பும் பெண்களுக்கு முன்னுதாரணமாக ஜெயலலிதா இருந்து வருகிறார்.

ஸ்ரீரங்கம் அனுஷ்யா
இந்த நிலையில் ஜெயலலிதா மீது கொண்ட அபிமானத்தை கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பெண் அச்சு அசலாக வெளிப்படுத்தி அசத்தி விட்டார். ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் அனுஷ்யா. இவர் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ராதிகா அவரிடம் சில கேள்விகளை கேஷுவலாக கேட்டார். அதில் ஒன்று என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.

ஜெயலலிதா ஆளுமை
அதற்கு அனுஷ்யா. நான் அரசியல்வாதியாக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார் ராதிகா. உடனே உங்களுக்குப் பிடித்த அரசியல்வாதி யார் என்று கேட்டார். அதற்கு அனுஷ்யா, ஜெயலலிதா என்று புன்னகையுடன் கூறினார். ஏன் என்று கேட்டபோது, அவரது பிரேவ், போல்ட்னஸ், ஆளுமை எல்லாமே பிடிக்கும் என்றார் அனுஷ்யா.
|
மக்களுக்காக நான்
அவங்களுடையே பேமஸ் டயலாக் இருக்குமே என்று ராதிகா கேட்டதும் மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று அப்படியே அச்சு அசலாக ஜெயலலிதா பேசுவது போலவே அப்பெண் கூறியபோது நமக்கு மெய் சிலிர்த்துப் போய் விட்டது. கைத்தட்டல் வானைப் பிளந்தது. உடனே ராதிகா, செய்வீர்களா என்று கேட்க அதைக் கேட்ட அனுஷ்யா நீங்கள் செய்வீர்களா கைவிரலை உசத்தி ஜெயலலிதா கேட்பது போல சிரித்தபடி கேட்டபோது அரங்கம் அதிர்ந்து போனது.
இப்பச் சொல்லுங்க.. வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகளில் தான் எத்தனை அர்த்தம் பொதிந்துள்ளது பாருங்க. ஜெயலலிதாம்மா ஜெயலலிதாம்மாதான்..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications