ஐபோன் வாங்குன முதல் இந்தியன் நான் தான்.. ஆனால்! திடீர்னு பிடுங்கிட்டு போயிட்டாங்க.. ஜெயம் ரவி ஓபன்
சென்னை: நடிகர் ஜெயம் ரவி பேட்டி ஒன்றில் தான் முதல் முதலாக iphone வாங்கிய இந்தியன், ஆனால் அந்த போனை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் வந்து என்னுடைய போனை பிடுங்கிக் கொண்டு போய் விட்டார் என்று சில சம்பவங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் ஜெயம் ரவி பற்றிய செய்திகள் அடிக்கடி அடிபட்டுக் கொண்டிருக்கிறது. ஜெயம் ரவி சினிமாவிற்கு வந்து 20 வருடங்களுக்கு மேலே ஆகிவிட்டாலும் அவர் எந்த நடிகையோடும் கிசுகிசுவில் சிக்காமல் இருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அவரும் அவருடைய மனைவியும் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் பரவி வந்தது.

அதற்கு பிறகு ஜெயம் ரவி அதை உறுதி செய்தார். ஆனால் ஒரு பாடகியோடு ஜெயம் ரவிக்கு தொடர்பு என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அதை ஜெயம் ரவி மறுத்து இருந்தார். அதைத்தொடர்ந்து அவர் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் பிரதர் திரைப்படத்தினை ப்ரோமோஷன் செய்யும் விதமாக தொடர்ச்சியாக பல youtube சேனல்களில் பேசிக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு பேட்டியில் எங்கேயும் காதல் திரைப்படத்தில் ஹன்சிகாவுடன் நடிக்கும்போது ஏற்பட்ட அனுபவம் குறித்து பேசி இருக்கிறார்.
எங்கேயும் காதல் திரைப்படம் நடிகர் ஜெயம் ரவியின் வித்தியாசமான நடிப்பில் அமைந்தது. இதில் காதல், கோபம், குழந்தைத்தனம் என எல்லா கேரக்டரையும் ஜெயம் ரவி காட்டி இருப்பார். அதுபோல ஹன்சிகாவும் அந்த திரைப்படத்தில் க்யூட்டாக நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களுமே செம ஹிட் ஆனது. படம் வெளியாவதற்கு முன்பே அந்த பாடல்கள் பலராலும் ரசிக்கப்பட்டது. இப்ப வரைக்கும் பலருடைய ஃபேவரைட் ஆக இருக்கிறது.
இந்த திரைப்படத்திற்காக வெளிநாட்டில் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தான் iphone அறிமுகம் செய்யப்பட்டதாம். அப்போது iphone-ஐ முதல் முதலில் வாங்கிய இந்தியன் நான்தான் என்று சந்தோஷத்தில் போனை கையில் பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று ஒரு உருவம் ஓடி வந்து என் கையில் இருந்த போனை பிடிங்கி கொண்டு சென்று விட்டது.
எனக்கு ஒரு நிமிடம் இதயம் நின்று போய்விடும் போல இருந்தது. நான் எவ்வளவு ஆசையாக இதற்காக எத்தனை நாள் காத்திருந்து இந்த போனை வாங்கினேன். ஆனால் இந்த போனை யார் பிடுங்கிக் கொண்டு செல்வது என்று என்னுடைய மண்டைக்குள் ஒரு நிமிடம் சிந்தனை வந்து என்னை ஏதோ செய்து கொண்டிருக்கிறது. பிறகு திரும்பிப் பார்க்கிறேன் அது ஹன்சிகா தான்.

இந்த மாதிரி தான் ஹன்சிகா சூட்டிங் ஸ்பாட்டில் நிறைய சேட்டைகள் செய்வாங்க. அந்த படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போதும் சரி, அதற்கு பிறகும் சரி அவருடைய காதல் விஷயங்களை கூட என்னிடம் ஷேர் பண்ணி இருக்காங்க. ரொம்பவும் குழந்தைத்தனமாகத்தான் இருப்பாங்க. எங்கேயும் காதல் திரைப்படத்தில் அவருடைய கேரக்டர் 90% ரியலாகவே பொருந்தி இருந்தது என்று அந்த பேட்டியில் ஹன்சிகா குறித்து ஜெயம் ரவி பேசி இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications