Pandian Stores Serial: எங்க வீட்டில் என்னை எப்படி அனுப்பி வச்சாங்க... குமுறும் ஜீவா
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மாமனார் வீட்டுக்கு போன ஜீவா, எங்க வீட்டில் என்னை எப்படி அனுப்பி வச்சாங்க.. நீங்க என்னை இப்படி நகைக்கடை மாதிரி ஆக்கிட்டேங்களேன்னு சலிச்சுக்கறான். ஒன்னும் இல்லை மாமனார் செயின், பிரேஸ்லெட் போட சொன்னதுக்குத்தான் இப்படி சொல்றான் ஜீவா.
மீனாவை காதலிச்சு கல்யாணம் செய்துக்கொண்ட பின், மாமனார் வீட்டில் மீனாவை ஒதுக்கி வச்சு இருந்தாங்க. இப்போ மீனா உண்டாகி இருக்கான்னு தெரிஞ்சு புதுசா சொந்தம் கொண்டாட ஆரம்பிச்சு இருக்காங்க. அப்படி மாமனார் வீட்டுக்கு ஜீவா விருந்துக்கு வந்து இருக்கும் போதுதான் நிறைய நகையை கொடுத்து போட சொல்றார்.
ஜீவா அண்ணன் தம்பி, அண்ணி என்று குடும்பத்தை பிரிந்து மாமனார் வீட்டுக்கு வந்து ரெண்டு நாளாகியும் போன் பண்ணலைன்னு குடும்பமே சோகத்தில் மூழ்கி இருக்க, இங்கு ஜீவாவை அப்படி இப்படி என்று கொண்டாடிகிட்டு இருக்காங்க. மாப்பிள்ளையை மூத்த மகன் என்று வேறு சொல்லி பெருமை பீத்திக்கறார் மாமனார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரதர்ஸ்
மனைவி மீனா கொடுத்த நகைகையைப் போடாமல் இருக்கும் ஜீவாவிடம், குல தெய்வம் கோயிலுக்கு போறோம். நீங்க இப்போ பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரதர் இல்லை.கோதண்டம் வீட்டு மாப்பிள்ளை.. அப்படி வர வேனாமா கோயிலுக்கு என்று சொல்கிறார் மாமனார். இந்த நகையை போட்டுகிட்டேன்னா மட்டும்நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரதர்ஸ் இல்லைன்னு ஆகிடுமா என்று கேட்கிறான் ஜீவா.யாரு இல்லேன்னு சொன்னா.. இப்போ நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளைன்னு சொல்றார் மாமனார்.

எப்படி அனுப்பி வச்சாக
இங்கே என்ன பட்டிமன்றமா நடக்குது? ஜீவா இதை கையில போட்டுக்கோ என்று மீனா பிரேஸ்லெட்டை குடுக்கறா. வாங்கிப் போட்டுக்கொண்ட ஜீவா, கழுத்தில் இருக்கும் செயினையும் கையில் இருக்கும் பிரேஸ்லெட்டையும் பார்த்துட்டு, எங்க வீட்டில் என்னை எப்படி அனுப்பி வச்சாங்க.. அதுக்குள்ளே என்னை இப்படி நகைக்கடை மாதிரி மாத்திட்டியன்னு சலிச்சுக்கறான். ஜீவா செயினை உள்ளே ஏண்டா போட்டு இருக்கே...எடுத்து வெளியில போடுன்னு எடுத்து சட்டைக்கு வெளியில் போட்டுவிடறா மீனா.

கொஞ்சம் கொஞ்சமா
ஜீவா மாமனார் வீட்டுக்கு போனவன் வீட்டோடு மாப்பிள்ளையாகி விடுவானோ என்கிற அளவுக்கு காட்சிகளை கொண்டு போறாங்க. இங்கே அண்ணனும், தனம் அண்ணியும் என்னடா ஜீவா போயி ரெண்டு நாளாச்சு. ஒரு போன் கூட பண்ணலையேன்னு வருத்தத்துல இருக்காங்க. அதுக்கு ஏற்றாற்போல ஜீவாவும் போன் பண்ணலை. மாமனாரும் முதலில் மூத்த பையன் பரிவட்டம், மாலை மரியாதை ஜீவாவுக்குத்தான் என்கிறார்.இப்போது நகைகளை போட்டு அழகு பார்த்து மாப்பிள்ளையை வெளியில் அழைச்சுக்கிட்டு போறார்.

எதிர்பாராமல் திருப்பம்
இப்படி பார்ப்பவர்களை குழம்ப விட்டுவிட்டு, எதிர்பாராத திருப்பமாக ஜீவா, மாமனார் சொல் பேச்சைக் கேட்காமல் வீட்டுக்கு வந்துவிடுவது போன்ற காட்சிகளை வைத்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தப்பித்தது. இல்லாவிட்டால், பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களின் சாபத்துக்குத்தான் ஆளாக நேரிடும். அப்படி ஒரு நேயர் விருப்பத்தில்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட் ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பாகி வருது.சீரியல் குழுவுக்குக் நல்ல தெளிவுடன்தான் இருக்கிறார்கள். பார்க்கலாம்...
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications