ஒரு கை இல்ல..அதனால் தந்தை தப்பான முடிவு! கண்கலங்க வைத்த கதை! டான்ஸால் சாதித்த ஆதிரை! நெகிழ்ந்த ரம்பா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் ஆதிரை என்ற பெண் போட்டியாளர் கலந்து கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய சோகக் கதையை சொன்னதை கேட்டு பலரும் ஃபீல் பண்ணி இருந்தாலும், பலருக்கும் தன்னம்பிக்கை கொடுக்கும் கதையாகவும் இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக பலருக்கு உடலில் எந்த பிரச்சனைகளும் இருக்காது. ஆனாலும் நம்முடைய வாழ்க்கை அவர்களைப் போலவே இல்லையே, இவர்களைப் போலவே இல்லையே என்று புலம்பி கொண்டிருப்பது வாடிக்கையாக இருக்கிறது. ஆனால் ஒரு சிலர் சில குறைபாடுகள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி தங்களுடைய திறமை மற்றும் தன்னம்பிக்கையால் பலரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளின் கஷ்டம்
மாற்று திறனாளிகள் இந்த உலகத்தில் எவ்வளவு அவமானங்களையும் கஷ்டங்களையும் சந்திக்கிறார்கள் என்பதை நம் அருகில் இருக்கும் மாற்று திறனாளிகளிடம் மனம் விட்டு பேசும்போது தான் தெரியும். அவர்களுடைய கண்ணீர் கதையை கேட்டாலே நம்முடைய வாழ்க்கை எவ்வளவோ மேலாக இருக்கிறதே என்ற எண்ணத் தோன்றும்.
தன்னம்பிக்கை வேண்டும்
எப்போதும் நம்முடைய வாழ்க்கையில் அது சரி இல்லை இது சரி இல்லை என்று குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு இருக்கிறதை வைத்து சாதிக்க வேண்டும் என்று நம் மனதை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுபோலத்தான் மாற்றுத்திறனாளி ஆன ஆதிரை என்ற பெண் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இன்று சின்னத்திரை ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்.

ஜோடி ஆர் யூ ரெடி நடுவர்கள்
ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகை மீனா, சங்கீதா, ஸ்ரீதேவி போன்றோர் முதல் சீசனில் நடுவர்களாக இருந்தனர். இரண்டாவது சீசன் தற்போது தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் இதில் நடிகை ஸ்ரீதேவி, ரம்பா, லைலா போன்றோர் நடுவர்களாக கலந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆதிரை டான்ஸ்
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில், "என் சுவாசம் காற்றே" திரைப்படத்தில் இடம் பெற்ற பிரபுதேவா டான்ஸ் ஆடிய "ஜும்பலக்கா ஜும்பலக்கா" என்ற பாடலுக்கு ஆதிரை டான்ஸ் ஆடி இருக்கிறார். அவர் டான்ஸ் ஆடிய பிறகு பேசிய லைலா உங்க டான்ஸ் ஸ்டார்ட் ஆகி 30 நொடிக்கு பிறகு தான் நான் ஒன்னு ரியலைஸ் பண்ணுனேன்.

லைலா வியப்பு
ஓ இவங்களுக்கு ஒரு கை இல்லை என்று ஆனா உங்களுடைய டான்ஸ் ரொம்ப பியூட்டிஃபுல்லா இருந்துச்சு. எந்த குறையும் சொல்லுற மாதிரி இல்லை என்று லைலா சொல்கிறார். அதைத் தொடர்ந்து ஆதிரை பேசுகையில் இன்னைக்கு ஆதிரை ஒரு ஆளா இந்த ஸ்டேஜ்ல நிக்கணும்னா அதற்கு இந்த இரண்டு பேரும் தான் காரணம். இது என்னுடைய அம்மா. இது என்னுடைய தாய் மாமா.
தந்தை தற்கொலை
நான் பிறந்து ஒன்பது மாசத்தில் என்னுடைய அப்பா தற்கொலை செஞ்சுக்கிட்டாங்க. அவங்களுக்கு நான் ஒரு கை இல்லாததை அக்செப்ட் பண்ணிக்க முடியல. அந்த டைம்ல எங்களுக்கு சப்போர்ட்டாக இருந்தது இந்த மாமன் தான். அவங்க சகோதரியின் வாழ்க்கைக்காகவே இன்னைக்கு வரைக்கும் அவங்க கல்யாணம் பண்ணிக்கல.

வெற்றிகள் பல வேண்டும்
அவங்க எனக்கு அப்பா மாதிரின்னு சொல்லிக்கலாம் என்று எமோஷனலாக ஆதிரை பேசி இருக்கிறார். அவர் பேசுவதை கேட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியின் நடுவர்களும் பீல் பண்ணி இருக்கிறார்கள். ஆதிரை இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல அவர்களுடைய சொந்த வாழ்க்கையிலும் பல வெற்றிகளை சூட வேண்டும் என்று நாமும் வாழ்த்துக் சொல்லிகொள்ளலாம்.













Click it and Unblock the Notifications