உல்லாச வாழ்க்கை.. கரையான்சாவடி பங்களாவில் நடிகை ரிஹானா பேகம்.. 20 லட்சம் செலவு செய்தாரா தொழிலதிபர்?
சென்னை: சீரியல் நடிகை ரிஹானா பேகம் மற்றும் தொழிலதிபர் ராஜ் கண்ணன் இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி போலீஸில் மோசடி புகார் தந்துள்ளனர்.. இதையடுத்து இருவரையும் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் சம்மன் தந்துள்ளனர்.. இன்று இருவரும் ஆஜர் ஆவார்களா என்பதைப் பொறுத்தே இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்பது தெரிய வரும்.
"ஆனந்த ராகம்', 'மீனாட்சி பொண்ணுங்க' 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' 'பொன்னி' உள்ளிட்ட சீரியலில் நடித்தவர் ரெஹானா. இவர் தன்னை மோசடி செய்ததாக ராஜ் கண்ணன் என்பவர் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை தந்திருந்தார்.

ராஜ் கண்ணன் புகார்
சென்னை கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் ராஜ் கண்ணன் (47) தந்திருக்கும் அந்த புகாரில், "தன்னுடன் நட்பாகப் பழகி வந்த ரிஹானா பேகம் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரிடம் விவாகரத்து ஆனதாக சொன்னதால், நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.
பிறகு ரிஹானாவுக்குப் பண உதவியாக அவ்வப்போது கேட்டதால் 20 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்தேன். .அவரது வீட்டிற்கு சென்ற போது கணவருடன் விவாகரத்து ஆகாமலேயே தன்னைத் திருமணம் செய்து மோசடி செய்தது தெரியவந்தது, எனவே, ரிஹானா மீது நடவடிக்கை வேண்டும் என்று பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் ராஜ் கண்ணன் புகார் தந்துள்ளார்.
பதில் புகார் தந்த நடிகை
இதையடுத்து, ராஜ் கண்ணன் மீது ரெஹானா பதிலுக்கு அளித்திருக்கும் புகாரில், தன்னிடமிருந்து சுமார் 15 லட்சத்துக்கு மேல் பிசினஸை டெவலப் செய்ய வாங்கினார்' என்று கூறியிருக்கிறார். இருவருமே மாறி மாறி புகார் தெரிவித்துள்ள நிலையில்., போலீசார் இருவருக்குமே சம்மன் அனுப்பியிருக்கிறார்கள். இன்று இருவருமே ஆஜராக உள்ளனர்.
கரையான்சாவடி பங்களா
இந்நிலையில், King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "ரிஹானா பேகம் தனக்கு விவாகரத்து நடந்ததா? இல்லையா? என்பதை தொழிலதிபரிடம் மூடி மறைத்துவிட்டதாக தெரிகிறது. ரிஹானா பேகத்தின் கரையான்சாவடி பங்களாவுக்கு மட்டும் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
அடிக்கடி ஷூட்டிங் செல்வதாக சொல்லிவிட்டு வெளியூர் சென்றதால், இருவருக்கும் தகராறுகள் வந்துள்ளன.. இதற்கு பிறகுதான், ரிஹானா பேகம் தன்னுடைய முதல் கணவரை விவாகரத்து செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை தொழிலதிபர் தெரிவித்துள்ளார்..
18 லட்சம் அபகரிப்பு?
இதற்கு ஆடியோ மூலம் பதிலளித்த ரிஹானா, என்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி தொழிலதிபர் ஏமாற்றிவிட்டார், 18 லட்சம் என்னிடம் அபகரித்து கொண்டார், என் கழுத்தில் கத்தியை வைத்து, மிரட்டினார், பணத்தை திருப்பி கேட்டால், அதை தர மறுக்கிறார்..
தங்க செயினை என் கழுத்தில் போட்டார்.. பிறகுதான் அதை பார்த்தபோது, இந்துக்கள் அணியும் தாலி போல தெரிந்தது, உடனே கழட்டி வைத்துவிட்டேன்.. என்னிடம் மோசடி செய்து வாங்கிய 18 லட்சம் பணத்தை திருப்பி தர வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
ஆனால், ரிஹானாவுக்கு 20 லட்சம் செலவு செய்ததாக ராஜ்கண்ணன் சொல்கிறார்.. அதிலும் ஜி-பே மூலம் லட்சக்கணக்கில் அனுப்பியதாக சொல்கிறார்.
தன்னுடைய வீட்டுக்கு பலர் வருவார்கள், போவார்கள், கண்டுகொள்ளாதே என்று ரிஹானா சொன்னாராம்.. இதை எப்படி ராஜ் கண்ணனால் ஏற்க முடியும்? தன்னுடைய வீட்டில் ரிஹானாவை குழந்தைகளுடன் வர சொன்னால், ரிஹானா அதற்கு மறுத்துள்ளார்.. ராஜ் கண்ணனுடன் ஒரே வீட்டில் வாழ்ந்திருந்தால் பிரச்சனையே வந்திருக்காது.
சிவில் வழக்கு
2 குழந்தைகள் உள்ள நபரை ஏமாற்றி தாலி கட்டி திருமணம் செய்ய முடியாது.. எனினும், இரு தரப்பிலுமே ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள்.. இந்த வழக்கு கிரிமினல் வழக்கு கிடையாது.. கொடுக்கல் வாங்கல் என்பதால், சிவில் வழக்கில் சேரும்..
எனவே காவல்துறை இருவரிடமுள்ள கொடுக்கல், வாங்கல் ஆதாரங்களை ஆய்வு செய்யும். பிறகு இருவரிடமும் பேசி எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பலாம். அல்லது சிவில் கோர்ட்டுக்கு சென்று, கொடுக்கல் வாங்கல் விவகாரங்களை மேற்கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தலாம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications