மாதம்பட்டி ரங்கராஜன் குழந்தை என்னுடையது என்று ஏற்றுக்கொண்டார்! ஆதாரத்தை வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா
சென்னை: சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா ஆகியோருக்கு இடையே நடக்கும் குடும்பப் பிரச்சனை நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்துக்கொண்டிருக்கிறது! ரங்கராஜ் DNA பரிசோதனைக் கோரிக்கை வைத்த நிலையில், ஜாய் இன்று (நவ.14, 2025) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய போஸ்ட் போட்டு, இந்த விவகாரத்தை மேலும் உலுக்கியுள்ளார்!
மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்ருதியை திருமணம் செய்திருந்த நிலையில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவையும் காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. முதல் மனைவியைத் விவாகரத்து செய்யாமலும், ஜாய் உடனானத் திருமணத்தைப் பதிவு செய்யாமலும் சில காலம் கழித்து, ரங்கராஜ் ஒரு கட்டத்தில் ஜாயை விட்டு விலக முடிவெடுத்தார். இதனால் கோபமடைந்த ஜாய் கிரிஸில்டா, இந்த விஷயத்தை வீதிக்குக் கொண்டு வந்துவிட்டார். காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்த சமயத்தில்தான், கிரிஸில்டாவுக்கு ரங்கராஜ் மூலம் ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது.

ஜாய் கிரிஸில்டாவின் புதிய பதிவு
மாதம்பட்டி ரங்கராஜ் தனது இரண்டாவது திருமணத்தை மறுத்து வரும் நிலையில், ஜாய்இன்று வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ரங்கராஜ் குறித்துக் கடுமையானக் கேள்விகளை எழுப்பியுள்ளார்: அவரே குழந்தை தன்னுடையது என்று ஒப்புக்கொண்டிருந்தும் உலகத்திற்காக டிஎன்ஏ செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் எதை நிரூபிக்க முயன்றார்! டிஎன்ஏ செய்ய வேண்டும் என்று கேட்டபோது உலகம் தயக்கம் இன்றி அந்த பெண்ணின் குண நலனையே குறை சொல்ல தொடங்கியது. ஆனால் இப்போது டிஎன்ஏற்கு வரவே தயங்கிக் கொண்டிருக்கும் அந்த ஆணை குறித்து யாரும் கேள்வி கேட்கவில்லை. அவர் வழக்கை இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறார்.
இப்படியான சூழலில் உலகம் அவரைப் பற்றி எப்படி பார்க்கும்? குளிர் அறையில் வசதியாக அமர்ந்து ஒரு பெண்ணின் குணநலனை கேள்வி கேட்கும் பலருக்கு அந்த ஆண் ஏன் இப்படி செய்கிறார் என்று கேள்வியை எழுப்பக்கூட தெரியவில்லை என்பதுதான் மிகப்பெரிய விந்தை என்று மாதம்பட்டி ரங்கராஜனை டேக் செய்திருக்கிறார். அதோடு மாதம்பட்டி ரங்கராஜன் தனக்கு அனுப்பிய வாட்ஸ் அப் சாட்டிடை அந்த ஸ்கிரீன்ஷாட்டில் பகிர்ந்து இருக்கிறார். அதில் "திஸ் இஸ் மை பேபி டு எனக்கு ரெஸ்பான்சிபிலிட்டி இருக்கு" என்று மாதம்பட்டி ரங்கராஜன் அனுப்பியதாக அந்த ஸ்கிரீன்ஷாட் இல் இருக்கிறது. இது என்னுடைய குழந்தை ஐந்து மாதமாக என் வயிற்றில் இருக்கும் போது அவர் எனக்காக அனுப்பியது என்று ஜாய் அந்த பதிவில் கூறி இருக்கிறார்.
மிரட்டிய திருமணம்
டிஎன்ஏ டெஸ்ட் செய்து அந்த குழந்தை என்னுடையது என்று நிரூபணம் ஆனால் அந்த குழந்தையை வாழ்நாள் முழுக்க நான் கவனித்துக் கொள்ளும் செலவை ஏற்றுக் கொள்கிறேன் என்று மாதம்பட்டி ரங்கராஜன் சொல்லியிருந்தார் ஆனால் அவர் அதற்கான டெஸ்டுக்கும் வழக்கும் வரவில்லை என்று தொடர்ச்சியாக சில தினங்களாகவே ஜாய் போஸ்ட் போட்டுக் கொண்டே இருக்கிறார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications