ஜோதிகா சூப்பர்ல.. சம்பள விஷயத்தில் நடிகர் ஜெய்சங்கர் மாஸ்.. மேஜர் சுந்தரராஜன் கேட்ட கேள்வி: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகைகளுக்கு நடிகர்களை போல அதிக சம்பளம் தரப்படுவதில்லை என்று சமந்தா சமீபத்தில் கூறியிருந்தார்.. கேரள சினிமாவில் ஓரளவுக்கு பாகுபாடின்றி சம்பளம் வழங்கப்படும்போது, இங்கு மட்டும் பாரபட்சம் காட்டப்படுவதாக வாதங்கள் கிளம்பி உள்ளன. இந்நிலையில், மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில் பல்வேறு விஷயங்களை பேசியிருக்கிறார்.

90 காலகட்டத்தில், தான் நடித்த படங்கள் தோல்வியடைந்துவிட்டால், அந்த படத்தயாரிப்பாளரை அழைத்து, பணத்தை பாதியாக தந்து, அவர்களது சுமையை குறைத்தாராம் ஜோதிகா.. இந்த குணம் திரையுலகில் வேறு எந்த நடிகைக்கும் கிடையாது என்று ஒருமுறை தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியிருந்தார்.

Television Jyothika Major major sundarrajan

ஜோதிகா சம்பளம்

இப்படிப்பட்ட சூழலில், நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் தரப்படுவதில்லை என்ற புகாரை கூறியிருக்கிறார் சமந்தா.. பிவி நந்தினி ரெட்டி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் சமந்தா நடிக்க உள்ளார். இந்த படத்தை சமந்தா தனது திரிலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க போகிறார்.. எனவே, இந்த படத்தில் நடிக்கும் அனைவருக்கும் ஆண் பெண் பாலின பாகுபாடு இன்றி சம்பளம் வழங்க போகிறாராம் சமந்தா.

அதாவது, நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வரும்நிலையில், ஒரு தயாரிப்பாளராக சமந்தா முன்னெடுத்துள்ள இந்த விஷயம் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. அதேசமயம், நடிகர், நடிகைகளின் சம்பளத்தில் பாகுபாடு குறித்தும் அவர் எழுப்பியிருக்கும் வினா, திரையுலகில் விவாதத்தை கிளப்பி வருகிறது.


மேஜர் சுந்தரராஜன்

இந்நிலையில், BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருக்கும் டாக்டர காந்தராஜ், "மேஜர் சந்திரகாந்த் படத்தில் ஹீரோ, சுந்தரராஜன்.. அதற்கு பிறகுதான் அவரது பெயர் மேஜர் சுந்தர்ராஜன் என்று மாறியது.. அவருக்கு அந்த படத்தில் தந்த சம்பளத்தை கேள்விப்பட்டால ஆச்சரியப்படுவீர்கள்.. பிச்சைக்காரனுக்கு தருவதைவிட மோசமான சம்பளம் தரப்பட்டது.

"நான்தானே இந்த படத்துக்கு முக்கியம்" என்று மேஜர் சுந்தர்ராஜன் கேட்டார். உன் பெயர் சொன்னால், எந்த விநியோகஸ்தர்கள் படத்தை வாங்குவார்கள்? என்று அவருக்கு பதில் தரப்பட்டது இப்படி கஷ்டப்பட்டுதான் அந்த படத்தை விற்றார்கள்.. நாகேஷ் கூட அப்போது பெரிய அளவுக்கு ஹீரோவாக உயரவில்லை.. ஆனால், படம் சூப்பராக ஓடியது..

ஜனரஞ்சகமான காட்சிகள்

சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்றோர் நடித்திருந்தால் படம் வியாபாரமாகும்.. இந்த நடிகர்களுக்கே அப்பாவாக, தாத்தாவாக நடிப்பவரை ஹீரோவாக போட்டால் யார் படத்தை வாங்குவார்கள்? மேஜர் சந்திரகாந்த் என்பது பிரபலமான நாடகம்.. அந்த நாடகத்தை படமாக்குகிறார்கள்.. ஆனால், அதில் ஜனரஞ்சகமான காட்சிகள் எதுவுமே இல்லை என்றார்கள்.. ஆனாலும், படம் ரிலீஸாகி நன்றாக ஓடிவிட்டது.

அந்த காலத்தில் பானுமதி மட்டுமே ஹீரோக்களுக்கு நிகரான சம்பளத்தை வாங்கினார். பிறகு கேபி சுந்தரம்பாள் அதிக சம்பளம் வாங்கினார்.. நந்தனார் என்ற ஆண் வேடத்தை ஏற்று நடித்தார் கேபி சுந்தரம்பாள்..

நடிகைகள் கேபிஎஸ், பானுமதி

அந்தவகையில் 1940களில் 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினார் கேபிஎஸ்.. உடனே எம்ஆர் ராதா, கேபி சுந்தராம்பாளை விட 1 ரூபாய் அதிகமாக தந்தால்தான் நடிப்பேன் என்றார். அதன்படியே அவருக்கு சம்பளம் தரப்பட்டது.

ஆனால், படம் தோல்வியடைந்துவிட்டால், அந்த பணத்தை திருப்பி தரக்கூடியவர்களில் நடிகர் ஜெய்சங்கர் முக்கியமானவர்.. எத்தனையோ தயாரிப்பாளருக்கு உதவி செய்தவர்.. அந்த மனிதாபிமானம்தான், ஜெயசங்கரை நிறைய படங்களில் நடிக்க வைத்தது.. படம் ஓடாவிட்டால், பணத்தை திருப்பி தருவார், அல்லது சம்பளத்தில் குறைத்து கொள்வார், அல்லது சம்பளமே இல்லாமல் அடுத்த முறை வாங்கி கொள்வதாக சொல்லிவிடுவார்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+