உங்கள பொண்ணு பார்க்க வரட்டா.. ஜோதிகாவை லவ் பண்ற கதிர் யாருடா? சூர்யா சார் கேட்டதுமே திக்திக்: கமலேஷ்
சென்னை: 'ராட்சசி' படத்தில் எண்ணெய் வைத்து வாரிய தலையுடன் "உங்களைப் பொண்ணு பார்க்க வரட்டா" என்று ஜோதிகாவிடம் கேட்டு க்யூட்டாக சிரித்து நடித்திருந்த மாணவன் கதிர்.. கமலேஷ் என்பது இவரது ஒரிஜினல் பெயர்.. தற்போது டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்து, அசாத்திய நடிப்பால் பலரது பாராட்டை பெற்று வருகிறார். சோஷியல் மீடியாவில் எங்கு திரும்பினாலும் கமலேஷ் பேட்டிகளாகவே உள்ளன. அந்தவகையில், அவரது பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
சென்னையில் 2015.ல் பிறந்த கமலேஷ், குழந்தையிலேயே நன்றாக பாடக்கூடியவர்.. ஜீ தமிழில் சா ரே கா மா பா லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 2 ஜூனியரில் போட்டியாளராக கலந்து கொண்டு, பலரது கவனத்தையும், பாராட்டையும் பெற்றவர்.

அறிமுகம் ராட்சசி
கடந்த 2019-ல் ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி படத்தில் கதிர் என்ற மாணவனாக திரையுலகில் அறிமுகமானார்.. பிறகு 2020ல் சந்தானத்தின் ஜூனியராக, பிஸ்கோத் என்ற படத்தில் நடித்தார். 2022ல் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் ராம்போவின் ஜூனியராகவும் நடித்திருந்தார்.
அசத்திய முள்ளி கேரக்டர்
இப்போது டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் முள்ளி என்ற கேரக்டரில் நடித்து அசத்தியிருக்கிறார் கமலேஷ்.. பட்டிதொட்டியெங்கும், இந்த 10 வயதிலேயே புகழின் உச்சிக்கும் சென்றுள்ளார் கமலேஷ்.. பல யூடியூப் சேனல்கள், டிவிக்களில் எல்லாம் கமலேஷ் பேட்டிகள்தான் வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்தவகையில், சமீபத்தில் கமலேஷ் தந்திருந்த பேட்டி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
அந்த பேட்டியில், ஜோதிகா மற்றும் சிம்ரன் இருவரை பற்றி கமலேஷ் பூரித்து போய் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது:
கதிர் எங்கே
"ராட்சசி படத்தில் கதிர் என்ற கேரக்டரில் நான் நடித்திருந்தேன்.. அப்போது ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, சூர்யா சார் திடீரென ஸ்பாட்டுக்கு வந்தார். யார் இங்கே கதிர்?, அவனை கூப்பிடுங்க என்று சத்தம் போட்டார்..
உடனே நான் பயந்துகொண்டு, அவர் முன்னாடி போய் நின்றேன்.. என்னை பார்த்த சூர்யா சார், "என்ன என்னுடைய பொண்டாட்டியை சைட் அடிக்கிறியாமே? லவ் பண்றியாமே? எப்ப பார்த்தாலும் உன்னை பற்றி தான் வீட்டில் வந்து பேசுறாங்க" என்று சொன்னதுமே எனக்கு தூக்கி வாரிப்போட்டுருச்சு..
பயந்துட்டியா சும்மா
உடனே நான், "இல்ல சார் அப்படி நடிக்க சொன்னாங்க, நானும் நடிச்சேன்" என்றேன்.. அதற்கு சூர்யா சார், "சும்மாடா உன்ன மிரட்டினேன், நீ பயந்துட்டியா? என்று கேட்டு சிரித்தார். செம ஜாலியான சார். அதேபோல் ஜோதிகாவும் என்னுடைய பிறந்தநாளுக்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லாருக்குமே பிரியாணி போட்டார். என் மீது ரொம்ப மிகவும் பாசமாக இருப்பார்" என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல, காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங் முடியும்போது, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா 2 பேருமே, கமலேஷை அழைத்து பேசியுள்ளார்கள்.. இதுகுறித்து கமலேஷ் சொல்லும்போது, "விக்னேஷ் சிவன் சாரும், நயன்தாரா மேடம் தான் எனக்கு பீஸ் கட்டுறாங்க. ஷூட்டிங்கின் கடைசி நாளில் என்னை கூப்பிட்டு இதை பற்றி பேசினார்கள்" என்றார்.
டூரிஸ்ட் ஃபேமிலி பட வெற்றிக்கு பிறகு, விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிவரும் அவருடைய முதல் படத்தில் கமலேஷ் நடித்து வருகிறாராம்.,. அதேபோல, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் காஞ்சனா 4 படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications