கேவலப்படுத்தப்படும் ஜோதிகா.. கோவிலை தொட்டதால் வினை.. திடீர்னு பச்சைக்கொடியுடன் சப்போர்ட் சர்ப்ரைஸ்
சென்னை: கோயில் கட்டி செலவு செய்வதைவிட, மருத்துவமனை கட்டினால் மக்களுக்கு இன்னும் நன்மை கிடைக்குமே என்று ஜோதிகா சொன்னதில் என்ன தப்பு? ஜோதிகாவை அவ்ளோ கேவலப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? என்று மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.. அத்துடன், சிம்ரன் - ஜோதிகா விவகாரம் குறித்தும் பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார் காந்தராஜ்.
"கோவில்" என்று ஜோதிகா சொன்னதுதான் பிரச்சனை. கோவிலை தொட்டதால் வந்த கோபம் அது.. இருக்கிற கோயிலுக்கு போகாமல், புதிதாக கோயில்களை ஏன் கட்டணும் என்று ஜோதிகா சொன்னதுக்கு கோபத்தில் அவரை திட்டுகிறார்கள்.. சாமி கும்பிட வேண்டாம் என்று யார் சொன்னது? கோவிலுக்கு எதுக்கு இவ்வளவு பணம் என்றுதான் கேட்டார்.,.

இவ்வளவு பணம் ஏன்
இதற்கு ஔவையார் சொன்ன கதையைதான் இங்கு நினைவுபடுத்த வேண்டியிருக்கு.. கோவிலில் ஒருவர், கர்ப்பகிரகத்துக்கு நேராக கால் நீட்டி படுத்து கொண்டிருந்தார்.. அப்போது ஒரு அர்ச்சகர் வருகிறார்.. "சாமி இருக்கும் பக்கம் நோக்கி காலை நீட்டி படுத்து கொண்டிருக்கிறாயே? சாமிக்கு அவமரியாதை செய்கிறாரா? இது நியாயமா?" என்று கேட்டார்.
ஜோதிகா கேட்ட கேள்வி
இதை கவனித்த அவ்வையார், "கடவுள் இல்லாத பக்கம் எதுவென்று காட்டு, அங்கே கால் நீட்டி கொள்ளட்டும்" என்று அர்ச்சகரிடம் சொன்னார்.. இதைத்தான் ஜோதிகாவும் கேட்டார்.. கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று சொல்லும் நீங்கள் எதுக்காக கோயிலை கட்டுகிறீர்கள்? அப்படியானால் உங்கள் வாதத்தை நீங்களே ஏற்கவில்லையென்றால் எப்படி?
ஏழைகளுக்கு கல்வி முக்கியம் என்பதால் ஜோதிகா அப்படி சொன்னார்..தொழிற்சாலைகளை கட்டாமல், கல்விச்சாலைகளை கட்டாமல், ஆராய்ச்சி நிறுவனங்களை கட்டாமல், ராமருக்கு மட்டும் கோயில் கட்டுவது ஏன்? என்று மோடியை பார்த்து கிண்டல் செய்துவிட்டதாக நினைத்து, ஜோதிகா மீது கோபத்தை கொட்டுகிறார்கள்.
அவரவர் மத நம்பிக்கை
அந்த ராமர் கோயில் அர்ச்சகர் இறந்துவிட்டார்.. ராமர் கோயில் பக்கத்திலேயே ஒரு ஆஸ்பத்திரியையும் கட்டி வைத்திருந்தால், அந்த அர்ச்சகரை காப்பாற்றியிருக்கலாமே? எனவே, அவரவர் மத நம்பிக்கையை வீட்டில் வைத்துக் கொள்ளலாம்., தெருவுக்கு கொண்டு வரக்கூடாது.
அந்த காலத்தில் கோயில்கள் அதிகமாக கட்டியதற்கு காரணம், மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்காகத்தான்.. அந்தவகையில் ராஜராஜ சோழன் கோயில் இன்றுவரை கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.. கரிகாலன் கல்லணையை கட்டினானே தவிர கோயிலை கட்டவில்லை. வீணாண பாறைகளை கொண்டு சிற்பங்களை செதுக்கி கலைகளை அன்று வளர்த்தனர். அதைவிட்டுவிட்டு மாமல்லபுரத்தில் அர்ச்சுனன் தபசு கிட்ட உட்கார்ந்து யாரும் அர்ச்சனை செய்து அபிஷேகம் செய்யவில்லை.
டப்பா விமர்சனம்
கோயில் கட்டி செலவு செய்வதைவிட, மருத்துவமனை கட்டினால் மக்களுக்கு இன்னும் நன்மை கிடைக்குமே என்று ஜோதிகா சொன்னதில் என்ன தப்பு? ஜோதிகாவை அவ்ளோ கேவலப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?இன்று சிம்ரன், ஜோதிகாவைதான் டப்பா என விமர்சித்தார்களா? என்று கேட்கிறீர்கள்.. விமர்சித்துவிட்டு போகட்டுமே.. 2 பேருக்குமே இன்று மார்க்கெட் இல்லை.. சினிமாவே மொத்தமாக வீழ்ந்துவிட்டது. செய்திகளுக்காக, பரபரப்புகளுக்காக இப்படியெல்லாம் பேச வேண்டியதாயிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications