அந்த நடிகை மோசம்.. வனிதா அப்பாவோடு சண்டை போட்டு பிரபலம் ஆனாங்க! கே.ராஜன் பேச்சு.. வெடித்த பிரச்சனை
சென்னை: இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய "தில் ராஜா" எனும் திரைப்படத்திற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது வனிதா மற்றும் நடிகை ஷெரின், சம்யுக்தா பற்றி கே ராஜன் பேசியதை தொடர்ந்து வனிதா தன்னுடைய கருத்தை கூறி இருக்கிறார்.
சாக்லேட், பகவதி, ஏய், கில்லாடி, மாஞ்சா வேலு, மலைமலை போன்ற வெற்றி படங்களில் இயக்கிய இயக்குனர் வெங்கடேஷ் "தில் ராஜா" எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சத்யா, ஷெரின், சம்யுக்தா, வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, கே பி ஒய் பாலா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. திரைப்படத்திற்கான இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த சம்யுக்தா மற்றும் இருவரும் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து கே ராஜன் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் பேசுகையில் இந்த திரைப்படத்தில் நடிக்கிறேன் என்று சம்பளம் வாங்கிக்கொண்டு நடித்த இந்த இரண்டு நடிகைகளும் இதன் இசை வெளியீட்டு விழாவிற்கு வராமல் போய்விட்டார்கள்.
இவர்களை எல்லாம் எதற்காக படத்தில் நடிக்க வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. தயவு செய்து தமிழில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இப்படிப்பட்ட நடிகைகளை தமிழ் சினிமாவில் இனி நடிக்க வைக்காதீர்கள். நீங்கள் உண்மையான தமிழர்களாக இருந்தால் கண்டிப்பாக இவர்களுக்கெல்லாம் வாய்ப்பு கொடுக்காதீர்கள். வாங்கிய சம்பளத்திற்கு உண்மையாக இந்த விழாவில் மட்டும் வந்து கலந்து கொண்டால் என்னவாக போகிறது.
அவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றால் எதுவும் நடக்கப்போவது கிடையாது. ஆனால் இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை விழா வெளியீட்டு விழாவில் எல்லோரும் கலந்து கொண்டு தங்களுடைய அனுபவங்கள் பற்றி பேசும்போது தானே அது மக்களிடம் சென்று சேரும். அதில் 10 பேர் பார்த்தால் ஐந்து பேராவது அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆசை ஏற்படும்.
ஆனால் சம்பளம் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என்று ஏன் நினைக்கவில்லை என்று தெரியவில்லை. இந்த மேடையில் இருக்கும் நடிகை வனிதா ஏற்கனவே எல்லோருக்கும் தெரியும். அவர் நடிகையாக பிரபலமாகி இருந்தாலும் அவருடைய அப்பாவோடு சண்டை போட்டு தான் ரொம்ப பிரபலம் ஆகி இருந்தார். அவர் கூட இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறார்.
அதுபோல மற்ற நடிகைகள் இந்த நிகழ்ச்சிக்கு வருவது எனக்கு சந்தோசம் என்றும் கூறியிருக்கிறார். அதைத்தொடர்ந்து பேசிய வனிதா நான்கு உதவி இயக்குனராக ஒரு சில திரைப்படங்களில் ஆரம்பத்தில் வேலை செய்தேன். அப்போது எனக்கு பெரிய லெவலில் எதுவும் தெரியவில்லை. அது ஒரு ஃபேஷனாக இருந்தது. அவ்வளவுதான் அதற்குப் பிறகு கதாநாயகியாக நடித்த பிறகு சினிமாவை விட்டு விலகி விட்டேன்.
அதற்குப் பிறகு எனக்கு பிரபலம் தந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி, பிக் பாஸ் நிகழ்ச்சி என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பே நான் எங்க அப்பாவோடு சண்டை போட்டு பிரபலமாகிவிட்டேன். அதற்கு பிறகு தான் எனக்கு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும் இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய ஒரு படத்தில் நான் நடித்திருந்தேன். அந்த படத்திற்கு பிறகு தான் தொடர்ச்சியாக எனக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது என்று வனிதா பேசியிருக்கிறார். கே ராஜன் சம்யுக்தா மற்றும் ஷெரின் பற்றி பேசியது இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications