Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுபாஷினிக்கு அழுகையே வரல! காதல் சந்தியாக்கள் எங்கே? சீவப்படும் கவின்களின் தலை! சுயசாதி பெருமை ஆபத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: "யாராக இருந்தாலும், சுயசாதி பெருமை பேசுவது இங்கு ஆபத்துதான்.. காதல் திருமணமும் தோல்வியடைகிறது, வீட்டில் செய்து வைக்கப்படும் திருமணமும் தோல்வியடைகிறது.. பார்த்து பார்த்து திருமணம் செய்த, ரிதன்யா அநியாயமாக சாகவில்லையா? இங்கே கவின் மட்டுமல்ல, சுர்ஜித் குடும்பமும் இன்று காலியாகிவிட்டது.. சுபாஷினியால் நிம்மதியாக தூங்க முடியுமா?" என்று குற்றவியல் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன், "பள்ளிகளில் செக்ஸ் கல்வி நடத்தும் அளவுக்கு நாகரீகமாக வளர்ந்துவிட்டோம், ஆனால், நம்மை அடக்கி வைத்திருக்கும் ஜாதி என்ற சாத்தான் பற்றி அறியாமல் உள்ளனர். .

Television Kaadhal Sandhya Subhashini

ரோட்டில் அரிவாளால் கேக் வெட்டுபவர்களை தூக்கி ஜெயிலில் வைக்கிறார்கள்.. ஆனால், இன்ஸ்டாவில் அரிவாளுடன் போஸ்ட் போட்ட சுர்ஜித் பற்றி ஒருத்தரும் கண்டுக்கல..

ஒரு பிரபல சினிமா நடிகர், அரிவாளால் கேக் வெட்டியிருந்தபோது நான் அவர் மீது வழக்கு தொடுத்தேன்.. ஆனால், கடைசியில் அதனை அட்டைக்கத்தி என்று சொல்லிவிட்டார்கள்.. அதற்கு பிறகு குன்றத்தூரில் ஒரு ரவுடி, பட்டாக்கத்தியில் கேக் வெட்டினார்.. இதுதான் மிகப்பெரிய வழக்காக அன்றைய தினம் மாறியது..

பட்டாக்கத்தியில் வெட்டுவது குற்றமாகும், அதேபோல, பட்டாக்கத்திகளுக்கு பூஜை போடுவதும் தவறு.. ஆனால், சுர்ஜித் பட்டாக்கத்திகளுடன் போஸ்ட் போடும்போதே, கைது செய்திருந்தால், இந்த அளவுக்கு போயிருக்காது..

பிள்ளையை இப்படி வளர்த்திருக்காங்களே

பெற்றோர் இருவரும் காவல்துறையில் இருக்கும்போது, மகனை கன்னத்திலேயே நாலு அறை அறைந்திருக்க கூடாதா? பிள்ளையை இப்படி வளர்த்திருக்காங்களே? காவல்துறையில் இருக்கும் பெற்றோருக்கு இப்படி பதிவிடுவது, தவறு என்றும் தெரியும். மற்ற போலீஸ்காரர்களாவது இதுகுறித்து, பெற்றோருக்கு அலர்ட் செய்திருக்கலாமே?

பெற்றோர் ஏற்கனவே காவல்துறையில் இருக்கும்போது, தடகள வீரரான சுர்ஜித், தேர்வுகளை எழுதி பெற்றோர்போல போலீஸாக வந்திருக்கலாம்.. அப்படித்தானே முன்னுதாரணமாக பெற்றோரை எடுத்துக் கொள்ள வேண்டும்? தற்காப்புக்காக துப்பாக்கியை போலீசார் வைத்திருந்தாலும்கூட, யாரையும் எளிதில் சுட்டுவிட மாட்டார்கள். பேச்சுவார்த்தையிலேயே சரி செய்வார்கள்.

தன்னுடைய அக்காவை காதலித்ததால், கவினை கொன்றதாக சுர்ஜித் சொல்வதும் பொய்யானது.. காதலி சுபாஷினி சொல்வதும் பொய்யானது.

ஆண்கள்தான் செத்து போறாங்க

இந்த காவல் விவகாரங்களில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது ஆண்கள்தான்.. ஆனால், பெண்கள் பாதிக்கப்பட்டதுபோல கட்டமைக்கப்பட்டுள்ளது..

கோகுல்ராஜ் இறந்தபிறகு, சுவாதியும் இறந்துவிட்டாரா? இளவரசன் இறந்ததுமே, திவ்யா இறந்துவிட்டாரா? சங்கர் இறந்ததுமே கௌசல்யா இறந்துவிட்டாரா? கோகுல்ராஜை பார்த்ததே இல்லை என்று கோர்ட்டில் சுவாதி சொன்னாரே? அப்ப கோயிலுக்குள் கைகோர்த்துட்டு போவது யார் என்று நீதிபதி வீடியோவை காட்டி சுவாதியிடம் கேட்கலியா? செத்து போனவர்கள் எல்லாம் ஆணாகவே இருக்கிறார்களே ஏன்? இதை கேட்டால் என்னை ஆணாதிக்க மனப்பான்மையில் பேசுவதாக சொல்கிறார்கள்.

காதல் சந்தியாக்கள் எங்கே

கவின் செத்துப்போயாச்சு.. 9 வருடம் காதலித்துவிட்டு, சுபாஷினிக்கு மனசாட்சி உறுத்தவில்லை.. காதல் பரத்கள்தான் இங்குண்டு, காதல் சந்தியா எங்கே இருக்கிறார்கள் இந்த நாட்டில்? தேவதாஸ்-கள்தான் இந்த நாட்டில் உண்டு..

யாராக இருந்தாலும், சுயசாதி பெருமை பேசுவது இங்கு ஆபத்துதான்.. காதல் திருமணமும் தோல்வியடைகிறது, அரேஞ்சுடு திருமணமும் தோல்வியடைகிறது.. பார்த்து பார்த்து திருமணம் செய்த, ரிதன்யா சாகவில்லையா?

சுபாஷினிக்கு அழுகைகூட வரலயே

இங்கே கவின் மட்டுமல்ல, சுர்ஜித் குடும்பமா இன்று காலியாகிவிட்டது.. சுபாஷினியால் நிம்மதியாக தூங்க முடியுமா?

குறைந்தபட்சம் கருணையோ, அறமோ இல்லாமல் அந்த பெண் இருக்கிறார்.. அழுகைகூட இல்லையே. எனவே, சுபாஷினியையும் கிடுக்கிப்பிடி விசாரணைக்குள் கொண்டு வர வேண்டும். கவினை காதலித்தது உண்மை என்று கோர்ட்டில் நிரூபித்தால்தான், ஆவண கொலை என்றே இந்த வகைப்படுத்த முடியும்.. ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். சுர்ஜித்தின் அம்மாவையும் கைது செய்வோம் என்று உறுதி தரப்பட்டுள்ளது.

ஒரு வார்த்தைகூட தப்பா பேசல

ஆனால், கவினின் அப்பா அழுது அழுது மரத்து போயிருக்கிறார்.. அவரது பேச்சில் இரும்புத்தன்மை உள்ளது.. போராட்ட குணம் நிறைந்தவர்.. பழிக்குப்பழி வாங்குவோம் என்று எந்த இடத்திலுமே அவர் பேசவில்லை. அப்படி பேசியிருந்தால், அவருக்கும் சாதி முத்திரை குத்தியிருப்பார்கள்..

அந்தம்மாவை கைது செய்ய வேண்டும் என்று மரியாதையாகவே சொல்லி வருகிறார்... சுபாஷினியை மனதளவில் தன்னுடைய மருமகளாகவே நினைத்துள்ளார்.. ஒருவார்த்தைகூட அந்த பெண்ணை திட்டவில்லை. சுர்ஜித் அம்மாவை கைது செய்வதால், பல சிக்கல்களை தவிர்க்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+