Kalaimamani Awards: கலைமாமணி விருது பெரும் சின்னத்திரை பிரபலங்கள்! யாரெல்லாம்னு பாருங்க! இந்த நடிகரும் இருக்கிறாரே!
சென்னை: தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் உயரிய அங்கீகாரங்களில் ஒன்று கலைமாமணி விருது. இயல், இசை, நாடகம், சினிமா எனப் பல கலைத்துறைகளில் சிறந்த பங்களிப்பை அளித்த கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2021, 2022, மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த விருது, திரைத்துறையைத் தாண்டி, சின்னத்திரை கலைஞர்களின் கடின உழைப்பையும் அங்கீகரித்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி.

எதிர்நீச்சல் கமலேஷ்
சின்னத்திரையில் தற்போது டிஆர்பியில் கலக்கி வரும் சீரியல்களில் எதிர்நீச்சல்முக்கிய இடத்தில் இருக்கிறது. இந்த சீரியலில் குணசேகரனின் தம்பியாக, ஞானம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகர் பி.கே. கமலேஷ். எதிர்நீச்சல் தொடரின் இரு சீசன்களிலும் ஞானசேகரன் என்ற ரோலில் தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த கமலேஷுக்கு, 2021 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் தொடரின் மூலமாகப் பிரபலமான கமலேஷ், பல ஆண்டுகளாகச் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு நடிகனாக தனது திறமையை நிரூபிக்க அவர் தொடர்ந்து உழைத்து வந்திருக்கிறார். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு அழகான கதை உண்டு. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் செலிப்ரட்டி என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றபோது, அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற சிந்துஜா என்றவரை காதலித்து, 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நீண்ட காலமாகத் தொடர்ந்து உழைத்து வரும் கமலேஷுக்கு, இந்த விருது ஒரு உரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது.
மெட்டி ஒலி காயத்ரி
2022 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மற்றொரு சின்னத்திரை கலைஞர், நடிகை காயத்ரி. இவரைப் பற்றிப் பேசும்போது, ரசிகர்களுக்கு மெட்டி ஒலி சீரியல் நினைவுக்கு வருவது இயல்பு. திருமுருகன் இயக்கிய இந்தத் தொடர், கணவன் மனைவி உறவு, குடும்பப் பிணைப்பு, சகோதரத்துவம் போன்ற உணர்வுகளை மிகவும் யதார்த்தமாகப் படம்பிடித்துக் காட்டி, தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியது. இன்றும் அதன் டைட்டில் பாடல், டிஆர்பி சாதனைகள் மற்றும் தாழ்வு மனப்பான்மை கொண்ட கதாநாயகியின் கதாபாத்திரம் ஆகியவை பலரால் பேசப்படுகின்றன. அந்த சீரியலில் சரோ கேரக்டர் மூலமாக காயத்ரி நீங்காத இடம்பிடித்தார். பல ஆண்டுகளாகச் சின்னத்திரையில் நடித்து வரும் காயத்ரியின் நடிப்பின் ஆழத்தையும், அவரது அர்ப்பணிப்பையும் இந்த விருது அங்கீகரித்துள்ளது.
சின்னத்திரைக்கு மரியாதை
கமலேஷ், காயத்ரி மட்டுமல்லாமல், சின்னத்திரையின் வேறு பல துறைகளைச் சார்ந்த கலைஞர்களும் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டிற்காக எம்.பி. உமாசங்கர் பாபு, சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் தமிழ் மணி, மற்றும் ஒரு சின்னத்திரை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது, சின்னத்திரையில் நடிகர்கள் மட்டுமல்லாமல், நிகழ்ச்சியைத் தொகுப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போன்ற படைப்பாளிகளுக்கும் இந்த விருது கிடைப்பது, ஒட்டுமொத்த சின்னத்திரை உலகிற்கும் பெருமையான விஷயம்.
விருது வழங்கும் விழா
இந்த கலைமாமணி விருதுகள், அடுத்த மாதம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். விருது அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கையால் இந்த விருதுகளை வழங்கவுள்ளார். விருதுப் பட்டயம் மற்றும் மூன்று சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு வழங்கப்படும்.
திரைத்துறையில், நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, மணிகண்டன், விக்ரம் பிரபு ஆகியோருக்கும், இயக்குநர் லிங்குசாமி, நடிகை சாய் பல்லவி, பாடகி ஸ்வேதா மேனன், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்டோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறப்பு விருது பிரிவில் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், எம்.எஸ். சுப்புலட்சுமி மற்றும் மக்கள் தொடர்பு பிரிவில் நிகில் முருகன், டைமண்ட் பாபு உள்ளிட்டோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், இந்த கலைமாமணி விருதுகள், கலைகளுக்கு எல்லை இல்லை என்பதையும், அனைத்துத் துறைகளிலும் உள்ள கலைஞர்களின் உழைப்பும், சேவையும் மதிக்கப்படும் என்பதையும் உணர்த்துகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications