அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிட்டாங்க.. அறந்தாங்கி நிஷா பிரபலம் ஆனது இப்படித்தான்- kpy பிரபலம் குற்றசாட்டு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பல போட்டியாளர்கள் பிரபலங்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சசிகலா இந்த நிகழ்ச்சி குறித்து பரபரப்பாக பல குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.

அத்தோடு நடிகையாகவும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் வெற்றியாளராகவும் இருக்கும் அறந்தாங்கி நிஷா குறித்து சசிகலா பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சின்ன திரையில் அழுகாச்சி சீரியல்களுக்கு மாற்றாக பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வெற்றி பெற்று வருகிறது. அதுவும் காமெடி நிகழ்ச்சிகள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வரிசையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பலருக்கும் பேவரைட் நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் தற்போது வெள்ளித்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியளராக உள்ளே நுழைந்த சசிகலா தற்போது இந்த நிகழ்ச்சி குறித்தும் இதில் கலந்து கொண்ட பிரபலங்கள் குறித்தும் பல்வேறு தகவல்களை கூறி இருக்கிறார். அதே நேரத்தில் சசிகலா கலந்து கொண்ட சீசனில் தான் அறந்தாங்கி நிஷா, பழனி, நவீன் போன்றோர் கலந்து கொண்டு பிரபலம் அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் சசிகலாவின் பெர்பார்மன்ஸ் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு பெற்று இருந்தாலும் சசிகலா நிகழ்ச்சியில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டார். அதற்கான காரணத்தை பற்றி தற்போது பேட்டியில் சசிகலா பேசியிருக்கிறார். அதாவது பழனியும் சசிகலாவும் புது புது ஜோக்குகள் சொல்லிக் கொண்டிருக்கும் போது நிஷா மட்டும் பழைய ஜோக்குகளை சொல்லி ரசிகர்களை கவர்ந்தார் என்றும் அதுபோல நடுவர்களிடமும் அறந்தாங்கி நிஷா சரிசமமாக நிற்பார்.
ஆனால் நான் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவள். மேலும் அந்த பழைய ஜோக்குகளை இப்போது உள்ள ட்ரெண்டிற்கு ஏற்றவாறு அறந்தாங்கி நிஷா சொல்லி சொல்லியே மக்களின் மத்தியில் பிரபலமாகி விட்டார். இருந்தாலும் நான் விஜய் டிவியில் இருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்ற காரணத்தை இப்ப வரைக்கும் நான் ஆராய்ச்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன். உண்மையான காரணம் என்னவென்று எனக்கு இன்னமும் தெரியவில்லை. அது போல நான் பல பட்டிமன்றங்களில் பேச்சாளராகவும் இப்போது இருக்கிறேன் என்று சசிகலா கூறி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் சில சமயங்களில் இவர் நடுவராகவும் பட்டிமன்றத்தை நடத்தி இருக்கிறாராம். இந்த நிலையில் சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் இவர் நடிக்கவும் செய்திருக்கிறார். அது தொடர்ந்து சில திரைப்படங்களில் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் கூடவே அட்ஜஸ்ட்மென்ட் கேட்டும் சிலர் தொந்தரவு செய்கிறார்களாம். அட்ஜஸ்மென்ட் செய்தால் நடிக்க வாய்ப்பு கன்ஃபார்ம் என்று அவர்கள் கூறுகிறார்களாம். அதற்கு உன்கூட படுத்து தான் நான் வாய்ப்பு வாங்கணும் என்று எனக்கு தேவையில்லை.
உன் கூட படுக்குறதுக்கு நாலு வீட்டுல பத்து பாத்திரம் தேய்த்து நான் என் குடும்பத்தை ஓட்டிடுவேன் என்று இவர் அதை தட்டி கழித்து விட்டாராம். அதுபோல ஆரம்ப காலங்களில் கணவனால் பல கொடுமைகளுக்கு ஆளான சசிகலா இப்போது டிவி நிகழ்ச்சி, பட்டிமன்ற நிகழ்ச்சி என்று பிசியாக தன்னுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு போயி குடும்பத்தையும் குழந்தைகளையும் வளர்த்து வருவதாக அந்த பேட்டியில் சசிகலா பேசியிருக்கிறார்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications