கல்பனா பெட்ரூமில் நிலைகுலைந்து.. எதுக்காக இப்படியொரு முடிவு? இப்ப எப்படி இருக்காங்க? வெளியான அப்டேட்
சென்னை: கல்பனாவின் தற்கொலை முயற்சி குறித்த விசாரணையை போலீசார் விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.. அத்துடன் கல்பனா விரைந்து குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்... இதனிடையே, கல்பனாவின் உடல்நிலை குறித்த புதிய அப்டேட் வெளியாகியிருக்கிறது.
பிரபல குணச்சித்திர நடிகரும், இசையமைப்பாளரும், பாடகருமான ராகவேந்திரா என்கிற விஜயரமணியின் மகள் கல்பனா ஆவார்.. இவருக்கு ஷகிலா ஷான் என்ற தங்கையும் உள்ளார். இவரது அம்மா சுலோச்சனா, மெல்லிசைக் கச்சேரிகளில் பாடியவர். அந்தவகையில், இவர்கள் அனைவருமே பாடக்கூடியவர்கள். கல்பனா இதுவரை 1,500 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.

பி.சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி
டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இசை கச்சேரிகளில் பி.சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களின் பாடல்களை அச்சு அசல் அவர்களை போலவே பாடக்கூடியவர் கல்பனா. கடந்த 2010ம் ஆண்டு நடந்த ஸ்டார் சிங்கர் மலையாளம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார் கல்பனா. ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கிய தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டார்.
இவரது அப்பா பிராமணராக இருந்தாலும், கல்பனாவும், அவரது சகோதரியும், கிறிஸ்துவ மதத்துக்கு 2005-ல் மாறிவிட்டதாகவும், ஞானஸ்தானம் பெற்றுவிட்டதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.. இந்து மதத்தை சார்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், நாளடைவில் தம்பதிக்குள் கருத்தொற்றுமை நிலவவில்லை என்பதால் இருவரும் விவாகரத்து செய்துகொண்டதாகவும் கூறப்பட்டது.
அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டி
அதற்கு பிறகு கல்பனாவின் கணவர் சென்னையில் வசித்து வருகிறாராம். கல்பனா ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்பேட் பகுதியில் தனித்து வாழ்ந்து வருகிறார்.. நேற்று முன்தினம், கல்பனா அதிக அளவு தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டன.
2 நாட்களாக கதவை திறக்காததால், அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டிக்கு சந்தேகம் வந்து, போலீசுக்கு தகவல் தந்துள்ளார்.. போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, கல்பனா மயங்கிய நிலையில் கிடந்தார்.
எப்படி இருக்கிறது கல்பனா உடல்நிலை
கல்பனா உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டதால், அவர் மயக்க நிலையில் இருந்ததாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது...
இந்நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதால், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. கல்பனாவின் உடல்நிலை நிலைகுலைந்திருந்தாலும், அவர் வென்டிலேட்டரில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டு, சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும், கல்பனாவின் உடல்நிலை சற்று தேறி வருவதாகவும் மருத்துவ தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
சொந்த பிரச்சனை - மன உளைச்சல்
இதனிடையே, போலீசார் இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தியிருக்கிறார்கள்.. கல்பனாவின் தற்கொலை முயற்சிக்கான சரியான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், சொந்த பிரச்சனை காரணமாக, மன உளைச்சலால் இப்படி முடிவை எடுத்திருக்கலாம் என்கிறார்கள்..
கல்பனாவின் கணவர் மீது சில சந்தேகங்கள் நிறைய உள்ளதால், அவரது செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இந்த சம்பவம் நடந்த நேரத்தில், அவரது கணவர் சென்னையில் இருந்ததாக சொல்கிறார்கள்.. விஷயத்தை கேள்விப்பட்டதும், உடனடியாக ஹைதராபாத் சென்றதாக கூறப்படுகிறது.
எனினும், கல்பனா தற்கொலை முயற்சி தொடர்பாக போலீசார் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. தற்கொலை முயற்சிக்கு முன்பு கல்பனா ஏதேனும் கடிதம் எழுதி வைத்தாரா என்ற ஆய்வும் நடந்து கொண்டிருக்கிறதாம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications