எங்கம்மா கூட இப்படித்தான் செஞ்சாங்க.. நடிகை கல்யாணி அதிர்ச்சித் தகவல்
சென்னை: டிப்ரஷனில் இருந்தால் நிச்சயம் அதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. சித்துவுக்கு மட்டுமல்ல.. எங்க அம்மாவுக்குக் கூட இப்படித்தான் நடந்தது என்று நடிகை கல்யாணி ரோஹித் தெரிவித்துள்ளார்.
சிறுமியாக நடிக்க வந்து பின்னர் ஹீரோயினாகவும் நடிக்கஆரம்பித்து வந்தவர் நடிகை கல்யாணி. பிரபு தேவாவுடன் இவர் நடித்து பிரபலமாகியுள்ளார்.
நடிகை சித்து குறித்து லிட்டில் டாக்ஸ் என்ற சானலுக்கு ஒரு பேட்டி கொடுத்துள்ளார் கல்யாணி .அதில் டிப்ரஷன் என்பது மிகவும் அபாயரமானது. அதிலிருந்து மீள்வதுதான் தற்கொலை போன்றவற்றை தடுக்க ஒரே வழி என்று கூறியுள்ளார் கல்யாணி.

கல்யாணி கொடுத்த பேட்டி
கல்யாணி கொடுத்த பேட்டியிலில் தனது அம்மாவுக்கும் கூட இதே போலத்தான் நடந்ததாக அவர் சொல்லியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கம்மா கூட இப்படித்தான் டிப்ரஷனில் இருந்தார் .அரை மணி நேரத்தில் தனது தற்கொலை முடிவை அவர் எடுத்தார் என்று கல்யாணி சொல்லியிருப்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.

நம்ப முடியவில்லை
கல்யாணி கூறுகையில், சித்து மரணம் குறித்து தகவல் வந்துதம் நான் நம்பவில்லை .சித்துவாக இருக்காது என்றுதான் நினைத்தேன் .எனக்கு அவருடன் பழக்கம் இல்லை, ஆனால் அவருடைய போஸ்ட்டிங்குகள் பார்த்துள்ளேன் . பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியாது. அப்படித்தான் இருக்கும் எல்லா போஸ்ட்டும். எனவே சித்துவா இப்படி முடிவெடுத்தார் என்று நம்ப முடியவில்லை.

என் அம்மாவும் தற்கொலை
ஆனால் என்னோட பார்வை வித்தியாசமானது .இப்படித்தான் எங்கம்மாவும் தற்கொலை செய்து கொண்டார் .எனவே தற்கொலை குறித்து எனக்குத் தெரியும் .என் அம்மா யாரையும் நம்ப மாட்டார். போல்டானவர். பயப்பட மாட்டாங்க. தைரியமானவர். ஆனால் அரை மணி நேரத்தில் தற்கொலை முடிவை எடுத்தார் .யாரும் நம்ப மாட்டாங்க.

அரை மணி நேர முடிவு
எல்லாப் பேரும் என்னையும், எங்க அப்பாவையும் குற்றம் சாட்டினாங்க .ஆனால் அவர் மரணத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வரை எங்க கூட சந்தோஷமாகத்தான் இருந்தார் .டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன்னு சொல்லி விட்டு போய் வந்த அரை மணி நேரத்தில் அவர் தறகொலை செய்து கொண்டார் .அதுக்குக் காரணம் டிப்ரஷன்.. அது எனக்கு பின்னர்தான் தெரிய வந்தது.

நிறைய அழுத்தம் ஏற்படும்
டிப்ரஷனில் யாராவது இருந்தா யாராலும் அதை கண்டுபிடிக்க முடியாது .நாங்கெல்லாம் நைட் கூட நல்லாதான் பேசினோம். அம்மாவும் ஹேப்பியாகத்தான் இருந்தார் .ஆனால் அவருக்குள் டிப்ரஷன் இருந்தது. அந்த நிலையில்தான் சித்துவும் இருந்திருக்க வேண்டும் .அவருக்குள் நிறைய அழுத்தம் இருந்திருக்கும்.

போட்டி பொறாமை
சினிமாத்துறை போட்டி பொறாமை இருந்தது .நம்ம காதுக்கு நிறைய வரும். உங்களைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் பேசுவாங்க .நீங்க ஸ்வீட்டா இருக்கீங்க.. அதான் இப்படி சீன்ஸ் வைக்கிறாங்க என்பாங்க .அது நமக்குள் பிரஷரைக் கொடுக்கும் .சித்துவுக்கும் நம்மை வீக்காக காட்டி விடக் கூடாது என்று கவனம் இருந்திருக்கலாம்.

நல்லா ஜாலியா இருப்பாரே
ரசிகர்களுடன் ஜாலியாக பேசுவார், சிரிப்பார், ஆண்களுக்கு நிகரானவர் என்றெல்லாம் சித்துவை சொல்கிறார்கள் .ஆனால் அதெல்லாம் உண்மையான சித்துவின் மன நிலையாக இருந்திருக்காது. மற்றவர்களை மகிழ்விக்க இப்படி அவர் டநடந்திருக்கலாம் .உள்ளுக்குள் அவர் வேறு மாதிரியாக இருந்திருப்பார். அவர் யாரிடமும் தன்னுடைய பிரச்சினைகளை ஷேர் செய்ததில்லை என்றும் சொல்கிறார்கள்.

விமர்சனம் செய்வார்கள்
கஷ்டப்பட்டு மேலே வருவோம் அவருக்கு என்னப்பா கார் இருக்கு வீடு இருக்கு என்பாங்க . நம்மளோட உழைப்பு அவர்களுக்குத் தெரியாது. நமக்குப் பின்னால் ஈகோ கிளாஷ் இருக்கும் .கேரக்டரை கூட விட மாட்டாங்கஅப்படி நடந்திருக்கலாம் இப்படி நடந்திருக்கலாம் என்று பேசுவார்கள். பெண்கள் ரொம்ப வீக்கானவர்கள், மனோரீதியாக பலவீனமானவர்கள்தான். டிப்ரஷனை விட்டு வெளியே வந்தால்தான் தற்கொலையைத் தடுக்க முடியும் என்று சொல்லியுள்ளார் கல்யாணி.

சொல்லியிருக்கலாம்
என்ன சொல்லி என்ன ஆகப் போகிறது .அத்தனை புழுக்கத்தை ஏன் மனசுக்குள் போட்டு அடைத்து வைத்திருந்தார் சித்து என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது .தன்னுடன் நடித்த நடிகர்களிடமாவது அவர் எதையாவது சொல்லியிருக்கலாம். சொல்லியிருந்தால் நிச்சயம் ஏதாவது ஒரு வகையில் அவருக்கு ஆறுதல் கிடைத்திருக்கும் என்றுதான் எல்லோரும் புலம்புகிறார்கள்.
Photos Credit: https://www.instagram.com/kalyanirohit/












Click it and Unblock the Notifications