இனிமே சமையல் தான்! தாளிச்சிடலாம் அவங்கள! கடும் கோபத்தில் கமல்.. மிரட்டும் பிக்பாஸ் புரமோ!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் கோபமாக பேசும் புரமோ வெளியாகியுள்ளது.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் கோபமாக பேசும் புரமோ வெளியாகியுள்ளது.
விஜய்டிவியில் பிக்பாஸ் சீசன் 2 கடந்த 2 மாதங்களாக ஒளிப்பரப்பாகி வருகிறது. வாரத்தில் 5 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் களேபரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர்களையும் ரசிகர்களையும் சந்தித்து வருகிறார்.

குட்டு வைக்கும் கமல்
அப்போது கடந்த 5 நாட்களில் பிக்பாஸ் வீட்டில் நடந்த அடாவடித்தனங்கள், அத்துமீறல்களை கேட்டு குட்டு வைப்பதும் நல்லவற்றை பாராட்டுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் கமல்.

கமல் மீது குற்றச்சாட்டு
ஆனால் கடந்த சீசனில் காட்டிய கெடுபிடியை கமல் தற்போது காட்டவில்லை என்றும் அவர் ஸ்ட்ரிக்ட்டான பாஸாக இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக மஹத், ஐஸ்வர்யா, யாஷிகாவை கமல் எதுவும் கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஆவேசமான கமல்
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள புரமோவில் , பார்வையாளர் பகுதிக்கு செல்லும் கமல், நான் கண்டிச்சா கேக்கனும்ல்ல, கேட்க மாட்டேங்குறாங்க, இதுக்குமேல நான் என்ன செய்ய வேண்டும் என ஆவேசமாக கேட்கிறார் கமல்.

அதிரும் அரங்கம்
அப்போது நீங்கள் கேட்க வேண்டும் கண்டிக்க வேண்டும் என பார்வையாளர்கள். அப்போது யாரை கேட்கவேண்டும் என கமல் கேட்க, மகத், ஐஸ்வர்யா, யாஷிகா என அதிர்கிறது அரங்கம்.

தாளிச்சிடலாம்
இதனைக்கேட்ட கமல் மெனு கொடுத்துட்டீங்கள்ள.. இனி சமையல்தான்... தாளிச்சிடலாம் அவங்கள.. என்று கோபமாக கூறுகிறார் கமல். இந்த புரமோ எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் என்ன நடக்கிறது என்பதை இன்று இரவு பொறுத்திருந்து பார்ப்போம்...
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications