பெருமாளுடன் வலம் வந்த கமல்ஹாசன்.. தசாவதாரம் படத்தில் இவ்ளோ இருக்கா? கமல் நாத்திகரா: பிரபலம் சுளீர்
சென்னை: "நடிகர் கமல்ஹாசன் ஒரு பெரிய பக்திமான்.. தசாவதாரம் பற்றி கமலிடம், பக்தி படத்தை எடுத்திருக்கிறீர்களே? என்று அவரிடமே சொன்னேன்.. எனவே, கமலை நாத்திகராக என்னால் முழுமையாக ஏற்க முடியவில்லை" என்று மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் கூறியிருக்கிறார். இந்த பேட்டி தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
சமீபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் தன்னுடைய போஸ்ட்டில், "கடவுள் சக்தியை நம்புகிறேன். கடவுள் மீது நான் வைத்த நம்பிக்கைத்தான் வாழ்க்கையில் என்னை வலிமையாக்கியது. எனது வீடு ஒரு நாத்திக இல்லமாக இருந்தது.

கமல் நாத்திகவாதி
எனது தந்தை நாத்திகவாதி. இதனால் வளரும்போது கடவுள் என்ற கருத்து எங்களுக்கு இருந்தது இல்லை. ஒரு கட்டத்தில் கடவுள் நம்பிக்கையை எனக்குள் நானே கண்டுபிடித்தேன். நான் முதலில் கோவிலுக்கு சென்றது மிகவும் சிறந்த அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை இன்றுவரை விரும்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள டாக்டர் காந்தராஜ், "கமல் நாத்திகவாதி என்பதில் எனக்கு சில சந்தேகங்கள் உண்டு.. அவரது மகளுக்கு பெயர் ஸ்ருதி.. வேதங்களுக்கு இன்னொரு பெயர் ஸ்ருதி.. வேதம் என்ற பெயரை மகளுக்கு வைத்தவர் எப்படி நாத்திகராக இருக்க முடியும்?
தசாவதாரம் என்பது பக்தி படம்.. நீ எந்த மதமாக இருந்தாலும், பெருமாளை கும்பிட்டால் நீ காப்பாற்றப்படுவாய் என்பதே தசாவதாரம் படத்தின் சாராம்சம்.. கடவுள் இல்லைன்னு சொல்லல, இருந்திருந்தால் நல்லா இருக்கும் என்று ஒரு வசனத்தை கடைசியில் போட்டுக் கொண்டாரே தவிர படம் முழுவதுமே பக்தி படம்தான்.. அந்த சிலை யாரிடம் உள்ளதோ, எவ்வளவு பெரிய ஆபத்து வந்தாலும் அவர்கள் தப்பித்து கொள்வார்கள்..
படத்தின் சாராம்சம்
நான் அந்த படத்தில் நடித்திருந்தேன்.. அவதார்சிங் என்ற கேரக்டரில் நடித்த கமலுக்கு கேன்சர் பாதிப்பு வந்துவிடும். அவரை துப்பாக்கியால் சுடும்போது, அந்த பெருமாள் சிலை அவதார் சிங்கிடம் உள்ளது.. அந்த சிலை இருந்ததால்தான், துப்பாக்கி குண்டு கேன்சரையும் சரி செய்து கொண்டு போய்விட்டது..
இந்த வசனத்தை நான்தான் சொல்லியிருப்பேன்.. "புல்லட் கேன்சரையும் வழித்தெடுத்து கொண்டு போய்விட்டது. நாங்களே சர்ஜரி பண்ணியிருந்தாலும் இந்த அளவுக்கு துல்லியமாக நடந்திருக்காது" என்பதுதான் டயலாக்.. நான் ஒரு டாக்டர், இந்த டயலாக்கை எப்படி சொல்வது என தயங்கினேன்..
சொல்ல தயங்கிய டயலாக்
அதற்கு கமல், படத்தை பாருங்கள் உங்களுக்கு புரியும் என்று மட்டுமே சொன்னார்.. பிறகு தியேட்டரில் அந்த வசனத்துக்கு எல்லாரும் கேலி செய்து சிரித்தார்கள்.. என்னுடைய சொந்தக்காரர்கள் எல்லாம் அமெரிக்காவிலிருந்து போன் செய்து திட்டினார்கள்.. இந்த வசனத்தை எப்படி சம்மதித்தீர்கள்? ஏன் ஒப்புக் கொண்டீர்கள்? என்றெல்லாம் கேட்டார்கள்.
அதேபோல, உயரமான கமல் செல்லும் வண்டி, அப்படியே கவிழ்ந்து விழுகிறது. ஆனால் ஒருவரும் சாக மாட்டார்கள்.. ஏனென்றால் அந்த வண்டியில் பெருமாள் சிலை உள்ளது.. அவர்கள் வரும் வண்டியில் ராமஜெயம் என்ற பெயரும் உள்ளது.. பெருமாளால் இவர்கள் அனைவருமே காப்பாற்றப்படுகிறார்கள்.
பாடகர் கமல் சீக்கியர்
உயரமான கமல் முஸ்லிமாக வருகிறார்.. பாடகராக வரும் கமல் சீக்கியராக வருகிறார்.. ஜப்பானிலிருந்து கமல் வரும் பௌத்த மதத்தை சேர்ந்தவராக வருகிறார்.. ஆக முஸ்லிமாக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், பவுத்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், பெருமாள் சிலை இருந்தால் காப்பாற்றப்படுவார்கள் என்பதுதான், தசாவதாரம் படம்.
டெக்னாலஜியை பயன்படுத்தின பக்திப்படம்.. கமல்ஹாசன் ஒரு பெரிய பக்திமான்.. ஒரு பக்தி படத்தை எடுத்திருக்கிறீர்களே? என்று கமலிடமே நான் சொன்னேன்.. எனவே, கமலை நாத்திகராக ஏற்க முடியவில்லை" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
அத்துடன் தசாவதாரம் படம், மிராக்கிள் என்ற ஆங்கில படத்தினை தழுவி எடுக்கப்பட்டது என்று கூறியிருப்பதுடன், அந்த மிராக்கிள் படத்தின் கதையையும் விலாவரியாக அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் டாக்டர் காந்தராஜ்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications