சூப்பர் சிங்கர் மேடையில் குழப்பம் ஏற்படுத்திய கமல்ஹாசன்.. கதறி அழுத காயத்ரி குடும்பம்.. எதிர்பார்க்காத சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த நடிகர் கமல்ஹாசன் தான் யார் டைட்டில் வின்னர் என்பதை அறிவித்திருந்தார். அப்போது அவர் செய்த தில்லாலங்கடி வேலையால் அங்கிருந்து அனைவரும் பதட்டத்தில் இருந்தனர். கடைசியில் கமல்ஹாசன் சொன்ன வார்த்தையை கேட்டு டைட்டில் வின்னரான காயத்ரியின் குடும்பத்தினர் கண்கலங்கி அழுது இருக்கின்றனர்.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு விதமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சமீபத்தில் சில மாதங்களாகவே ஜூனியர்களுக்கான பத்தாவது சீசன் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் அனைவரும் எதிர்பார்த்தபடி நேற்றைக்கு கிராண்ட் பினாலே நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்
இந்த நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் மற்றும் ஏ ஆர் ரகுமான் உட்பட சிலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் இறுதி டைட்டில் வின்னராக காயத்ரி தேர்வு செய்யப்பட்டார். காயத்ரி ஆரம்பத்திலிருந்து தன்னுடைய தனித்துவமான குரலால் ரசிகர்களின் மனதை கவர்ந்து வந்தார். நேற்று கிராண்ட் பினாலேவில் "தொட்டு தொட்டு பேசும் தில்லானா" என்ற பாடலை பாடி இருந்தார்.
சூப்பர் சிங்கர் ஃபைனல் நிகழ்ச்சி
குழந்தைகளின் பேவரைட் பாடகர்களில் கிருத்திகாவும் ஒருவர். அதே நேரத்தில் இரண்டாவது இடத்தில் வந்த நஸ்ரின் தான் வெற்றி பெறவில்லை என்று தெரிந்ததும் கண்கலங்கி அழுதிருந்தார். அது பார்ப்பவரையும் வருத்தப்பட வைத்திருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சின்னத்திரையில் பிரபலமான கமல்ஹாசனுக்கு நேற்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு போனதும் இது பிக் பாஸ் நிகழ்ச்சி என்று நினைத்து விட்டார் போல, மேடையில் யார் வெற்றியாளர் என்று சொல்வதற்கு முன்பு பிக்பாஸ் பைனல் நாளில் எப்படி போட்டியாளர்களை மட்டுமல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களின் மனதையும் தித்... திக்.. அடைய செய்வாரோ அதேபோல குழந்தைகளிடமும் விளையாட்டு காட்டி இருந்தார்.

கமல்ஹாசன் செய்த செயல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரியவர்கள் இருப்பார்கள் அவர்களிடம் கமல்ஹாசன் இதுபோல விளையாட்டு காட்டும்போதே அவர்கள் மனநிலை ரொம்பவும் பதட்டமாக இருக்கும். ஆனால் இப்போது குழந்தைகளிடமும் அதே மாதிரி விளையாடிக் கொண்டிருந்தது பார்ப்பவர்களை வருத்தமடைய செய்ததாக மீடியாவில் கமெண்ட்கள் வந்து கொண்டே இருக்கிறது.

ஏமாற்றத்தில் நஸ்ரின்
கடைசியில் கமல்ஹாசன் காயத்ரி கையை தூக்கியதும் நஸ்ரின் அதனால் தான் அழுதுவிட்டார். ஆனாலும் நஸ்ரின் அழுவதை பார்த்ததும் ஏஆர் ரகுமான் தன்னுடைய இசை பள்ளியில் சேருவதற்கு விருப்பமா என்று கேட்டிருந்தார். அதற்கு நஸ்ரினும் சோகமாக சரி என்று சொல்லி இருந்தார். ஏமாற்றத்தில் இருந்த நஸ்ரினுக்கு இது சிறிய ஆறுதலாக இருந்திருக்கும் ஆனால் காயத்ரி வெற்றியை அறிவித்ததும் அவருடைய குடும்பத்தினர் கண்கலங்கி அழுதிருந்தனர்.
தாத்தாவின் கண்ணீர்
காயத்ரியின் தாத்தா கையெடுத்து கும்பிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தார். ஆரம்பத்திலிருந்து காயத்ரிக்கு அவருடைய தாத்தா தான் முழு சப்போர்ட் செய்து கொண்டிருந்தார். தன்னுடைய பேத்தி வெற்றி பெற்றது குறித்து அவர் பேசும்போது "எங்களுடைய குடும்பத்திற்கு என் பேத்தி பெருமை சேர்த்து விட்டாள்" என்று நெகிழ்ந்து பேசி இருந்தார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications