எத்தனை நாளைக்கு ஸ்டைலே பண்ணிக்கிட்டு இருப்பீங்க?
சென்னை: உலக நாயகன் பொங்கல் கொண்டாட்டம் சன் டிவியில் நேற்று ஒளிபரப்பாகியது. இன்றும் அதன் தொடர்ச்சி ஒளிபரப்பாகியது. ரஜினியுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது எத்தனை நாளைக்கு ஸ்டைலே பண்ணிக்கிட்டு இருப்பீங்க என்று தான் கேட்டதாக கமல் சொன்னார்.
பொங்கல் கொண்டாட்டத்தில் உலக நாயகன் கமல்ஹாசனோடு சாருஹாசன், அவரது மனைவி, சுஹாசினி, அனுஹாசன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
அத்துடன் திரையுலகை சார்ந்த இயக்குநர் மவுலி, சந்தான பாரதி, கவுதம் மேனன், பிரபு, குஷ்பூ உள்ளிட்டவர்களும் கலந்துக் கொண்டனர்.

புத்தாண்டு பொங்கல்
புத்தாண்டு பொங்கல் வந்துவிட்டால் உங்கள் பாடலை தவிர்க்க முடியலை சார். புத்தாண்டு வந்துவிட்டால் ஹேப்பி நியூ இயர் பாடல், பொங்கல் வந்துவிட்டால் தை பொங்கலும் வந்தது.. பாலும் பொங்குது பாடலை மறக்க முடியாது சார் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் பவித்ரா கேட்டார்.

இளையராஜா பெருமை
புத்தாண்டு பாடல் மற்றது எல்லாம் இளையராஜாவுக்கு செல்ல வேண்டிய பெருமை. தை பொங்கலுக்கு பாட்டு வேண்டும் என்று நான் கேட்டு வாங்கினேன். அப்படி வந்தது தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாடல். பொங்கலுக்கு சிறப்பு பாடல் வேண்டும் என்பது என் ஆசை என்று கமல் சொன்னார்.

ரெண்டு பேரிடம்
ரெண்டு பேரிடம் நான் உதவி இயக்குநராக வேலை பார்க்க ஆசைப்பட்டேன். அதில் ஒருத்தர் மணி சார். இன்னொருத்தர் கமல் சார் என்று இயக்குநர் கவுதம்மேனன் சொன்னார். மவுலி மாதிரி நகைச்சுவை எழுத வேண்டும் என்று கிரேசி மோகன் கூட ஆசைப்படுவார் என்று கமல் மவுலியைப் பார்த்து சொன்னார்.

தென்மேற்கு பருவக் காற்று
தென்மேற்கு பருவ காற்று என்று குஷ்பூவுக்கு செல்லமா பேர் வச்சு இருக்கேன் என்று கமல் குஷ்பூவைப் பார்த்து சொன்னார். அதாவது மைக்கேல் மதன காமராஜன் படத்தின் ஷூட்டிங்கின் போது செட்டுக்கு குஷ்பூ வந்துட்டா எல்லார் முகத்திலும் சிரிப்பு வரும். அதற்காக அவருக்கு தென்மேற்கு பருவ காற்று என்று பேர் வச்சேன்னு சொன்னார்.

எத்தனை நாளைக்கு
ஏவிஎம் ஸ்டுடியோவில் நானும் ரஜினியும் வேப்ப மரத்தடியில் பேசிக்கொண்டு இருந்தோம்.அப்போ அடுத்த படத்துக்கான ஸ்டைல் பத்தி யோசித்துக் கொண்டு இருந்தார். எத்தனை நாளைக்கு இப்படி ஸ்டைல் பண்ணிகிட்டே இருப்பீங்க என்று கேட்டேன். கதையை பார்க்க வேணாமா என்று கேட்டேன். அதை நீங்க பாருங்க என்று சொன்னார். அதுதான் இப்போ வரைக்கும் நடக்குது என்றும் சொன்னார் கமல்ஹாசன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications