சிவக்குமார் தலையிலே அடிச்சிக்கிட்டாரு.. "காட்டுக்கத்தல்" கங்குவா! ஜோதிகாவிடம் 2 கேள்வி கேட்ட பிரபலம்
சென்னை: கங்குவா படத்தில் காட்டுக்கத்தல் கத்துறாங்க.. கேட்கவே நாராசமாக இருந்தது.. என்று விமர்சகர்கள் நாங்கள் அனைவருமே சுட்டிக் காட்டினோம் என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளதுடன், நடிகை ஜோதிகாவிடம் 2 கேள்விகளையும் எழுப்பியிருக்கிறார்.
AG Modern Media என்ற யூடியூப் சேனலுக்கு, மூத்த பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "ஜோதிகாவை சந்திக்க மும்பை விரைகிறார் சிவக்குமார்.. என்னைக்கு ஜோதிகாவை காதலிப்பதாக சூர்யா சொன்னாரோ, அன்னைக்கே சிவக்குமாருக்கு தலைவலி ஆரம்பமாகிவிட்டது.. ஜோதிகா வேண்டாம், வேண்டாம் என்று தலையிலேயே அடித்து கொண்டார்.. ஆனால், ஜோதிகாவை கல்யாணம் செய்தே தீருவேன் என்றார் சூர்யா.

தங்கை திருமணம்: தங்கை கல்யாணம் முடிந்ததும் பார்க்கலாம்.. உன்னுடைய காதல், தங்கையின் திருமணத்துக்கு தடையாக இருக்கக்கூடாது என்றார் சிவக்குமார். இதையடுத்து தன்னுடைய செலவிலேயே தங்கைக்கு திருமணம் செய்து வைத்தார் சூர்யா. இதற்கு பிறகு ஜோதிகாவை திருமணம் செய்வதில் உறுதியாக இருக்கவும், வேற வழியின்றி சிவக்குமாரும் ஒப்புக் கொண்டார்.
ஆனால், மீண்டும் சினிமாவில் நடிக்கக்கூடாது என்று ஜோதிகாவிடம் சொன்னார் சிவக்குமார்.. இந்த உத்தரவை மீறி "36 வயதினிலே" படத்தின் கதையை கேட்டு, சிவக்குமாரை சம்மதிக்க வைத்துவிட்டார் ஜோதிகா.. அந்த படத்தில் ஜோடி இல்லை, டூயட்டும் இல்லை.
ஆனால், ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள்.. மறுபடியும் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார் ஜோதிகா.
தலைவலி: பிறகு ஜோதிகா நிரந்தர தலைவலியாகிவிட்டார் சிவக்குமாருக்கு.. சூர்யா, கார்த்திக்காக ஒரு வீட்டை 6 மாதத்தில் கட்டி முடித்தார் சிவக்குமார். ஆனால், அந்த வீட்டில் ஜோதிகா குடியிருக்கவில்லை.. மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கி, குழந்தைகளை அங்கேயே படிக்க வைப்பதாக சொன்னார்.. பிறகு தன்னுடைய தாய், தந்தையரை கவனித்து கொள்ள வேண்டும் என்றார்.
ராமர் இருக்கிற இடமே சீதைக்கு அயோத்தி என்பார்கள்.. ஆனால், சூர்யாவை பொறுத்தவரை, மனைவி இருக்கிற இடம்தான் சொந்த வீடு என்று நினைத்து, சென்னையையே காலி செய்துகொண்டு மும்பைக்கு சென்றுவிட்டார்.
ஞானவேல்ராஜா: கடந்த 2 வருஷமாகவே கங்குவா படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.. இந்த படத்தை தயாரித்தவர் ஞானவேல்ராஜா.. எப்பவும் சிரித்து கொண்டே இருப்பார். ஆனால், முகத்தில் உள்ள புன்சிரிப்பு அவரது உள்ளத்தில் கிடையாது.. அமீருக்கு ஞானவேல்ராஜா சரியாக பணம் தரவில்லை என்ற விவகாரம் அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். இது தெரிந்தும் சிவக்குமார் குடும்பத்தினர் ஞானவேல் ராஜாவை ஒதுக்கியிருக்க வேண்டும்.
ஆனால் கங்குவா கதையை கேட்டதுமே ஒப்புக் கொண்டுள்ளார் ஞானவேல்ராஜா. இந்த கதையை நன்றாக சொல்லியிருக்கிறார் சிறுத்தை சிவா.. ஆனால், சொன்னபடி படத்தை எடுக்கவில்லை.. முதல் அரை மணி நேரம் பயங்கர போர் அடிக்குது.. நிறைய வில்லன்கள் வருகிறார்கள்.. எதுக்கு வர்றாங்க என்றே தெரியவில்லை.. திரைக்கதையில் குழப்பம்.. ஆனால், கேமரா, கலை, ஸ்டண்ட் போன்ற விஷயங்கள் சிறப்பாக இருந்தது.. எனவே, அவைகளை எல்லாம் நாங்கள் பாராட்டியே இருந்தோம்.
காட்டுக்கத்தல்: கங்குவா படத்தில் காட்டுக்கத்தல் கத்துறாங்க.. கேட்கவே நாராசமாக இருந்தது.. என்று விமர்சகர்கள் நாங்கள் அனைவருமே சுட்டிக் காட்டினோம்.. இதற்கு பிறகு தியேட்டர்களில் வால்யூம் 2 புள்ளி குறைக்கும்படி ஞானவேல்ராஜா சொல்லியிருக்கிறாராம்.. அப்படியானால், விமர்சகர்கள் நாங்கள் உள்ளதை உள்ளதுபடிதானே சொல்றோம்?
2011- சூர்யா ஒரு பேட்டியில், "நல்ல படத்தை ஓடச்செய்யுங்கள்.. தப்பான படத்தை ஓட விடாதீங்க, அப்படி ஓடவைத்தால், நல்ல கதையுள்ள படம் வெற்றி பெறாமலேயே போய்விடும். நல்ல படங்களுக்கு ஆதரவு தாருங்கள்" என்றார்.. அன்று சூர்யா சொன்னதையே, இன்று பத்திரிகையாளர்களாகிய நாங்களும் சொல்றோம்.. இதைத்தான் எப்பவுமே சொல்றோம்.
ஜோதிகா அறிக்கை: ஆனால் ஜோதிகா திடீரென, "நல்ல படத்தை திட்டுறாங்க, ஓடாத படத்தை ஓட வைக்கறாங்க, ஓட வேண்டிய படத்தை ஓடவிடாமல் செய்றாங்க. திட்டமிட்டு பழிவாங்கிவிட்டார்கள்" என்றெல்லாம் அறிக்கை வெளியிட்டு விட்டார்.
ஜோதிகாவிடம், 2 கேள்விகளை கேட்க நான் விரும்புகிறேன்.. உங்க வீட்டுக்காரர்தானே "கங்குவா" படத்தின் கதாநாயகன்.. நீங்க மும்பையில் இருந்துட்டே, இந்த படத்தின் புரமோஷனுக்கு ஏன் வரல?
2 கேள்விகள்: கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா, பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது.. அந்த இசை வெளியீட்டு விழாவுக்கும் நீங்கள் வர மறுத்தது ஏன்? புறக்கணித்தது ஏன்? அப்போதெல்லாம் கணவன் நடித்த படம் என்று உங்களுக்கு அக்கறை இல்லையா? படம் சரியாக போகல்விலை என்றதும் வானத்துக்கும், பூமிக்கும் எகிறி குதிப்பது ஏன்? என்பதுதான் என்னுடைய கேள்வி
கங்குவா படத்தில் மேக்கிங் ரொம்ப நல்லா இருந்தது.. ஆனால், திரைக்கதையும், கதையும் கேவலமா இருக்கு.. மொக்கையான திரைக்கதை.. இதுக்கு ஜோதிகா கோபப்பட்டு பிரயோஜனமில்லை.. உண்மையை ஏற்க மறுப்பவர்கள் முட்டாள்கள். ஓடும் படத்துக்கு எத்தனை விமர்சனம் செய்தாலும் ஓடவே செய்யும். ஓடாத படத்துக்கு என்னதான் பாராட்டி பேசினாலும் ஓடாது. படிக்கிற பையன் எங்கேயும் படிப்பான்" என்று கூறியிருக்கிறார்.
இதனிடையே ஜோதிகா வெளியிட்ட அறிக்கைக்கு பல்வேறு தரப்பினர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.. "சினிமா பற்றித்தெரிந்தவர்கள் அதை அறிவார்கள். கங்குவா பார்த்த ரசிகன் படம் நன்றாக இல்லை என்கிறான்.. அவனுக்கு ஜோதிகாவின் ஆறுதல் என்ன? படம் அரை மணிநேரம் சுமாராகத்தான் இருந்தது என்று ஜோதிகா சொல்கிறார் என்றால், நன்றாக இல்லாத காட்சிகளை அரை மணி நேரம் படத்தில் ஏன் வைக்க வேண்டும்? அதைத் தூக்கி எறிய வேண்டியதுதானே?" என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
இதனிடையே, பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி ஒரு பேட்டியில், "கங்குவாவில் பெண்களை பெருமைப்படுத்தி விட்டார்களா?படத்தில் திஷா பதானி பிகினி உடை அணிந்திருந்தாரே. அது என்ன பெண் இனத்துக்கே பெருமை சேர்த்த விஷயமா? சூர்யாவின் மனைவியாக அந்தப் பதிவை எழுதவில்லை என்று ஜோதிகா சொன்னதெல்லாம் பொய். அவர் சூர்யாவின் மனைவியாகத்தான் அந்தப் பதிவை எழுதியிருக்கிறார்" என்றெல்லாம் கூறியிருக்கிறார் காட்டமாக.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications