Kanmani Serial: சொன்னபடி நடக்குது நினைச்சபடி கதை போகுது...!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் தெரிந்தோ தெரியாமலோ முத்துச்செல்வியை கதையில் கொண்டு வந்து விட்டார்கள். சின்னவருக்கும் தனக்கும் குழந்தை பிறப்பது போல முத்துச்செல்வி கனவு காண்கிறாள்.
இப்போது அதுதான் நடக்கப் போகிறது. காரணம் சவுந்தர்யாவுக்கு இனி குழந்தை பிறக்காது என்று டாக்டர் சொன்னதை முத்துச்செல்வியும் கேட்டுவிடுகிறாள்.
இன்னொரு பெண் உதவி செய்தால், அந்த பெண்ணின் கணவர் மூலமாக அவள் குழந்தை பாக்கியம் பெறலாம் என்கிற உண்மையையும் டாக்டர் சொல்ல முத்துச்செல்வி அதை அறிந்தும் கொண்டாள்.

ஒரு சிங்கம் முயலாகிறது
எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய கதை ஒரு சிங்கம் முயலாகிறது. அது படமாக எடுக்கப்பட்டபோது அவன் அவள் அது என்று எடுக்கப்பட்டது. இப்போது ஒரு வகையில் அந்த கதை படமாக்கப்படுவது போல இந்த சீரியலின் கதையின் போக்கும் இருக்கலாம். முற்றிலுமாக இல்லை என்றாலும் அந்த கதையின் தாக்கத்தோடு இருக்கும்.

சவுந்தர்யா முத்துச்செல்வி
சவுந்தர்யாவுக்குத் தெரியாமல் டாக்டரின் உதவியோடு கண்ணனின் குழந்தையை முத்துச்செல்வி சவுந்தர்யா அம்மாவுக்கு பெற்றுத் தர நினைக்கலாம். காலப் போக்கில் உண்மை தெரிந்து சவுந்தர்யா முத்துச்செல்வியை மாமன் கண்ணனுக்கு இன்னொரு தாரமாக கட்டி வைக்க நினைக்கலாம்.

அப்படி இருப்பதில்லை
சமுதாயத்தில் முத்துச்செல்வி போன்ற பெண்களின் உண்மை நிலை அப்படி இருப்பதில்லை. இப்படி ஒரு நிலையை சந்தித்துவிட்டு இல்லை என்று ஆன நிலையில் வேறு ஊருக்கு சென்று வாழும் பெண்கள் வேறு வாழ்க்கையைத் தேடி சமூகத்தோடு ஒன்றி வாழ்ந்து, தங்கை, அப்பாவை காப்பாற்ற முனைந்து வாழ்வதுதான் இயற்கை.

காலச் சக்கரத்தை
கதைக்கு என்று காலச் சக்கரத்தை ஒரே இடத்தில் சுற்ற வைத்து மக்களை ஏமாற்றி இதுதான் வாழ்க்கை என்று ஒரு கட்டுக்குள் அடக்கி விடுகின்றன சீரியல்கள். இதில் இருந்து மக்கள் வெளியில் வந்தால்தான் விரிந்து பரந்த சமுதாயத்தை மக்கள் அகன்ற விழிகளைக் கொண்டு பார்க்க முடியும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications