Kanmani serial: பொறந்த வீட்டு கோடி புடவை எங்கேப்பா? கண்ணீருடன் கண்ணன்
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலில் இப்போது தர்மதுரை ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போக, கண்ணனை எல்லாரும் ஓரம் கட்டி அவனை கஷ்டப் படுத்தறாங்க.
தர்மதுரை ஐயாவின் மனைவி விஜயலட்சுமி மற்றும் அவளுடன் ஒட்டிக் கொண்டு சிறு பையனாக இருக்கும்போதே அக்காவுடன் வந்துவிட்ட கண்ணன் இருவரையும் கிருஷ்ணவேணி அவமதிக்கிறாங்க.இவங்க தர்மதுரையின் தம்பி மனைவி
எப்போதுடா தன் கைக்கு அதிகாரம் வரும் என்று காத்திருந்த கிருஷ்ண வேணி அம்மா,தர்மதுரை இறந்ததுதான் சாக்கு என்று, இந்த நேரத்தை பயன்படுத்திக்கறாங்க. தர்மதுரை காரிய நாளன்று பொறந்த வீட்டு கோடிப் புடவை எங்கே என்று கேட்டு,அவனை சீண்டி அழவைத்து வேடிக்கை பார்க்கறாங்க.

என்பது போல
கிராமத்தில் உண்மையில் பெரிய குடும்பத்தை சேர்ந்த பெரியவர் ஒருவர் இறந்தால் எப்படி சாவு வீடு இருக்குமோ அத்தனையையும் படம் பிடித்து ஒளிபரப்பி இருந்தார்கள். உண்மையில் துக்க வீட்டை காண்பிப்பது போலவும் காண்பித்து இருந்தார்கள். கிருஷ்ணவேணி அம்மா கண்ணனை கொள்ளி போட கூடாது என்றும், அதோடு காரியத்துக்கு ஆற்றங்கரையில் உட்கார கூடாது என்றும் கட்டளை போட்டுடறாங்க.

கண்ணன் மாமா
மாமாவுக்கு கண்ணன் என்றால் உயிர். கண்ணனுக்கு மாமா என்றால் உயிர். இதில், மாமாவுக்கு எதுவும் செய்ய கூடாது என்று கூறியதில் மனம் நொந்து இன்னும் துக்கத்திலிருந்து மீண்டு வராமல் இருக்கான் கண்ணன். இந்த நேரத்தில்தான் காரியத்தை முடித்துக் கொண்டு ஆண்கள் வீட்டுக்கு வருகிறார்கள். அப்போது விஜயலட்சுமி அம்மாவுக்கு முறை செய்ப்பவர்கள் செய்யலாம் என்று ஐயர் சொல்றார்.

பிறந்த வீட்டு புடவை
மகள்கள் உறவினர்கள் எல்லாரும் விஜயலட்சுமி அம்மாவின் தோளில் புடவையை போட்டுவிட்டு போகிறார்கள்.அப்போது பார்த்து கிருஷ்ணவேணி அமமா பொறந்த வீட்டு கோடி புடவை எங்கே? அதை போடணும்னு தெரியாதான்னு கேட்கறாங்க. அக்கா தம்பியை பார்க்க, தம்பி கண்ணீர் வழிய அக்கவைப் பார்க்கிறான்.

யாரும் சொல்லலை
எனக்கு இதெல்லாம் தெரியாது. .யாரும் சொல்லலைன்னு கண்ணன் கண்ணீருடன் சொல்றான். ஆஹா ஒன்னும் தெரியாது... வாங்கறதுக்கு வக்கு இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானேன்னு கிருஷ்ணவேணி அமமா ஏசறாங்க. இப்போ கூடவா தெரியலை.. எல்லாரும் போடறாங்கன்னு மறுபடியும் ஏசறாங்க. சரி சரி பீரோவில் புது பட்டுப்புடவை இருக்கு. அதைக் கொண்டு வந்து குடுங்க..அவன் போடட்டும்னு அவங்க சொல்ல, புடவையை எடுத்து வந்து கண்ணனிடம் குடுக்கறாங்க.
அக்காவின் நிலையைப் பார்த்து தம்பி கண்ணீருடன் அந்த புடவையை தோளில் போட்டு விட அக்கா கதறி அழறாங்க.இந்த காட்சியில் முத்து முத்தாக கண்ணீர் விட்டு, நம்மையும் கலங்க வச்சுட்டார் சஞ்சீவ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications