Kanmani Serial: கண்ணனுக்கும் சவுந்தர்யாவுக்கும் கல்யாணம்னா சந்தோஷம்தானே பின்னே எதுக்கு?
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் கண்ணன் தனது அக்காவின் கணவர் தர்மராஜ் மாமா இறந்த கவலையில் இருக்கான். இந்த நேரத்தில் முத்துச்செல்வியை பற்றி அவன் நினைத்து கூட பார்க்கவில்லை.
இதற்கு முன்பு கூட முத்துச்செல்வி பேசிய பேச்சில் மனம் நொந்து, இவளை இனியும் கல்யாணம் செய்துக்கணுமான்னு யோசனையில்தான் இருக்கான். இந்த நேரத்தில் மாமா இறந்துவிட, முத்துச்செல்வி பற்றி மட்டும் இல்லை.,எதை பற்றியும் நினைக்க முடியாத துக்கத்தில் இருக்கான் கண்ணன்.
சவுந்தர்யாவை காதலிச்ச ஆகாஷ் மேல், சவுந்தர்யாவின் சித்தப்பா பெண் வளர்மதிக்கு காதல் வந்துருது. இவங்களை சேர்த்து வச்சிடணும்னு வளர்மதியின் அம்மா கிருஷ்ணவேணியும் கணக்கு போட்டுடறாங்க.

கண்ணன் சவுந்தர்யா
தர்மராஜ் ஐயாவின் காரியம் முடிந்த கையோடு, இந்த வீட்டில் ஏதாவது நல்லது நடக்கணும். அதை பார்த்துக்கோங்கன்னு ஊர் பெரியவர்கள் சொல்ல, கிருஷ்ணவேணி அம்மா தனது புருஷனுக்கு கண்ணை காமிக்கறாங்க. இதை அடுத்து அவர் பேச ஆரம்பிக்கையில், சவுந்தர்யா கல்யாணம்தான் அண்ணனுக்கு பெரும் கவலையா இருந்தது. அதனால், சவுந்தர்யா கண்ணன் கல்யாணத்தை நடத்தி முடிக்கணும்னு இப்போ கேட்டுக்கறேன்னு பேசிட்டு போயிடறார்.

குடும்பத்துக்கு அவர்தான்
குடும்பத்துக்கு இனி அவர்தான் பெரியவர், அவர் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாத்தான் இருக்கும்னு நாங்க ஏத்துக்கறோம்னு விஜயலட்சுமி ஏற்கனவே சொல்லிவிட, ஊர் பெரியவர்களும், அன்னிக்கே விஜயலட்சுமி அம்மா அவர் சொல்லும் எந்த முடிவுக்கும் நாங்க கட்டுப் படறோம்னு சொன்னாங்க. அதனால, இந்த முடிவுக்கும் அவங்க கட்டுப்படுவாங்க என்று ஊர் பெரியவர்கள் சொல்லிவிட்டு கிளம்பிடறாங்க.

எதுக்கு இப்படி
சவுந்தர்யாவுக்கும், கண்ணணுக்கும் கல்யாணம்னா விஜயலட்சுமி அம்மா சந்தோஷம்தானே படணும் அவங்க என்னமோ தம்பி கண்ணன் முகத்தை பார்க்கறாங்க. சவுந்தர்யா என்னவோ அதிர்ச்சியா கண்ணனை பார்க்கிறாள், கண்ணன் என்னவோ அதைவிட அதிர்ச்சியா அக்காவையும், சவுண்டையும் பார்க்கறான். மூணு பேருக்குமே தெரியும், அவங்கவங்க மனசுல யார் இருக்கா என்ன இருக்குன்னு.

முத்துச்செல்வி அடைக்கலம்
முத்துச்செல்வி குடும்பம் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் அடைக்கலம் புகுந்துட்டாங்க. எதுக்குன்னு இன்னும் அதை காமிக்கலை. இந்த நேரத்தில் சவுந்தர்யாவை காதலிச்ச, இன்னும் அவளை மறக்காமல் இருக்கும் ஆகாஷை வளர்மதிக்கு மாப்பிள்ளை கேட்டு கிருஷ்ணவேணி வர்றாங்க. இப்படி அதிரடி மாற்றங்கள் கண்மணி சீரியலில் நிகழ்ந்துகிட்டு இருக்கு.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications