Kanmani Serial: என்ன கொடுமை இது முத்துச்செல்வி? ஐயோ பாவம்!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் முத்துச்செல்வி ஓடுகிறாள் ஓடுகிறாள் வாழக்கையில் எல்லைக்கே ஓடுகிறாள் பாவம். வயதான, பொறுப்பு அவ்வளவாக இல்லாத தந்தையை மட்டுமே ஆண் துணை என்று நம்பி அவளின் பயணம் தொடர்ந்துக் கொண்டு இருந்தது.
மிகவும் அழகிய முத்துச்செல்வி இந்த சமூகத்தில் எங்கெங்கோ யார் யாரிடமோ மாட்டி, கடைசியில் அடைக்கலம் கொடுத்த இன்ஸ்பெக்டரும் கொடூரமானவன் என்று தெரிந்து தப்பித்து ஓடும் காட்சிகள் பரிதாபம்.
இவளையும் தந்தையையும் நம்பி சிறுமி தங்கம் வேறு....கடைசியில் தங்கமும், தந்தையும் விபத்தில் சிக்கிவிட இருவரும் மருத்துவமனையில்.. முத்துச்செல்வி நிலைமை ரொம்ப பரிதாபமாக இருக்கிறது.

புத்தம் புது மலராய்
முத்துச்செல்வி மருத்துவமனையில் அவ்வளவு சிக்கல்கள், பிரச்சனைக்கும் நடுவில் புத்தம் புது மலர் போல ஜொலிப்பதை இயக்குநர் கண்டு, அவளை கொஞ்சம் தலைமுடியை கொண்டையிட்டு எளிமையான கோலத்தில் காட்டி இருந்தால் நன்றாக காட்சிக்கு இன்னும் வலு சேர்ப்பதாக இருந்திருக்கும்.

செய்வதறியாமல் முத்து
அப்பா இறந்துவிட்டார்..அவரை காப்பாற்ற முடியவில்லை.. உன் தங்கையை காப்பாற்றி விட்டோம். உடலை ஃபார்மாலிட்டீஸ் முடிச்சுட்டு எடுத்துக்கிட்டு போம்மான்னு டாக்டர் சொல்ல , முத்துச்செல்வி எனக்கு வீடுன்னு எதுவுமில்லையே.. நான் எங்கே கொண்டு போவேன்னு அழும் காட்சிகள் பரிதாபமாக இருந்தது.

அமைப்பு உதவி
அந்த சமயத்தில் இஸ்லாம் அமைப்பு ஒன்று இது போல ஆதரவற்ற அனாதைகளுக்கு இறுதி சடங்கு அவரவர் மதப்படி செய்ய நாங்கள் உதவி செய்கிறோம்னு வர்றாங்க. இதுவும் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. அவர்கள் உதவியோடு இந்துமத சடங்குகளில் முத்துச் செல்வி இறுதிச் சடங்குகளை செய்கிறாள்.

அக்கா அப்பா
இங்கு முத்துச்செல்விக்கு ஆறுதலாக நடக்கும் ஒரே விஷயம், தங்கை தங்கத்தை காப்பாத்தி முத்துச்செல்வியிடம் போயி பாருங்க என்று சிஸ்டர் கூறுவது. தங்கம் கண் விழிச்சவுடன்...உனக்கு ஒண்ணும் இல்லைடா.. நீ பொழைச்சுட்டேன்னு முத்து சொல்ல, தங்கம் அப்பா என்று கேள்வி கேட்பது மனதை என்னவோ செய்துவிட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications