Kanmani Serial: அட... சவுண்டும் கண்ணனும் கட்டிபிடிச்சு... இதைத்தானே?
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் நடிகர் சஞ்சீவ் ஸ்டார் காஸ்ட் நடிகர். இவர் ஆ..ஊன்னு கத்தி வசனம் பேசி அவரும் அழுது யாரையும் அழ வைக்கமாட்டார்.
குரல் தழு தழுக்க வசனம் பேசி, கன்களில் நீரை வழிய விட்டு, பார்ப்பவர்களின் மனதையும், கண்களையும் கலங்க செய்வதில் வல்லவர். இவருக்காக கண்மணி சீரியலைப் பார்ப்பவர்கள் ஏராளம்.
இவருக்கு சவுந்தர்யா அக்கா பொண்ணு. சவுண்டு என்றுதான் கண்ணன் சவுந்தர்யாவை ஆசையாக கூப்பிடுவான். அந்த சவுண்டு தனக்கு கிடைக்கவில்லை என்று மனத்துக்குள் குமுறிக்கொண்டு இருந்தபோதுதான் முத்துச்செல்வி இவன் வாழக்கையில் வருகிறாள்.

மாமாமீது மீண்டும்
சவுந்தர்யா ஆகாஷை காதலிச்சு,அந்த கல்யாணம் நின்னு போன நிலையில்தான் மீண்டும் கண்ணன் மாமா மீது சவுந்தர்யாவுக்கு ஆசை வருது. அதை வீட்டில் அம்மாவிடம் சொல்லி சொல்ல செல்லுகையில், முத்துச்செல்வி பிரச்சனையில், அவளை தான் கல்யாணம் செய்து கொள்வதாக தேவர் மகன் கமல்ஹாசன் போல வாக்கு கொடுத்துடறான் கண்ணன். சவுந்தர்யா தனது காதலை சொல்லாமலே மறைத்து விடுகிறாள்.

பிரச்சனை முத்துச்செல்வி
கண்ணன், சவுந்தர்யா அம்மா காதலை புரிந்துகொண்ட முத்துச்செல்வி, இனி சின்னவருக்கும், சவுந்தர்யா அம்மாவுக்கும்தான் கல்யாணம் நடக்கணும்னு பெரிய நாடகமே ஆடிடறா. விளைவு வீட்டை விட்டு வெளியேறும்படி ஆகிவிடுகிறது. இப்போது ஸ்ரீகாந்த் என்கிற போலீஸ் இன்பெக்டர் வீட்டில் அடைக்கலம் புகுந்து இருக்காங்க முத்துச்செல்வி குடும்பம்.

மாமா தர்மராஜ்
மாமா தர்மராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட, வீடே கிருஷ்ணவேணி சொல் பேச்சு கேட்டு தலை கீழாக மாறிவிடுகிறது. சவுந்தர்யா காதலிச்ச ஆகாஷை அவளின் சித்தி பெண் அதாவது கிருஷ்ணவேணியின் பெண் வளர்மதி அக்கா காதலிச்ச ஆகாஷை காதலிக்கறா. சவுந்தர்யாவுக்கும், கண்ணனுக்கும் கல்யாணம்னு அறிவிச்சால்தான் ஆகாஷை வளர்மதிக்கு கல்யாணம் செய்து வைக்க முடியும்னு கண்ணன், சவுந்தர்யா கல்யாணத்தை அறிவிக்க வைக்கறாங்க.

கண்ணன் மாமா மனசில்
கண்ணன் மாமா மனசில் தான் இல்லை என்று நினைத்த சவுந்தர்யா, இன்னும் முத்துச்செல்வியை கண்ணன் மாமாவுக்கு கல்யாணம் செய்து வைக்க துடிக்கிறாள். ஆனால், கண்ணன் தூக்கத்தில் சவுந்தர்யா கண்ணனை நினைச்சு உளறினதை கேட்டு உடைந்து போகிறான். அப்போதும், தனிமையில் அமர்ந்து அழுது கொண்டு இருக்க, மாமா நீ எங்கியாவது போயிரு மாமான்னு சவுந்தர்யா சொல்கிறாள்.

எதிர்பார்த்த ஆடியன்ஸ்
அப்போதுதான் தன் மனதில் இருப்பதை முழுவதும் கொட்டி, நீ கூட சவுண்டு என்னை மனசுக்குள்ள நினைச்சு கிட்டு இருக்கேன்னு என்கிட்டே சொல்லி நான் கேட்க கூட எனக்கு குடுத்து வைக்கலேன்னு அழுது கொண்டே பேச, அப்போதுதான் சவுண்டு குலுங்கி குலுங்கி அழறா. மாமாவை கட்டிக்கறா. இதைத்தானே ஆடியன்ஸ் எதிர்பார்த்தன்ங்க!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications