Kanmani Serial: என் மாமாவை 99 வருஷத்துக்கு குத்தகைக்கு எடுத்திருக்கேன்!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் கிராமத்தில் நடக்கும் கதை. அழகான பச்சை பசேல் விளைச்சல் பகுதிகள்,தென்னந் தோப்பு நீர் நிலைகள் என்று வருவதால் சீரியல் பார்க்க நன்றாக இருக்கிறது.
இதுவரை அழுது வடிந்த போதும் சரி, இப்போது சவுண்டை கல்யாணம் செய்துக் கொள்ள இருப்பதால் சந்தோஷ மன நிலையிலும் சரி பகிடிகர் சஞ்சீவ் மிக நன்றாக நடிச்சு இருக்கார்.
சவுந்தர்யாவுக்கு கல்யாண புடவை எடுக்கும்போது கடை முழுவதும் கண்ணனின் சத்தம் மட்டுமே கேட்கும்படி அப்படி சந்தோஷமாக புடவை தேர்வு செய்கிறார்.

ஆகாஷ் வளர்மதி
தர்மதுரை ஐயா இறந்த நிலையில், அவர் ஆசைப்பட்ட இளைய மகள் சவுந்தர்யாவின் கல்யாணத்தை உடனடியாக நடத்த ஊர்க்காரர்கள் சபையில் பேசுகிறார்கள். இதற்கு நடுவில் சவுந்தர்யா காதலிச்ச ஆகாஷை , அவளின் தங்கை வளர்மதி கல்யாணம் செய்துக்க விரும்பறா. இதற்குள் சவுந்தர்யா கண்ணன் கல்யாணத்தை மறந்து வளர்மதி,ஆகாஷ் கல்யாணத்துக்கு திட்டமிட்டு நிச்சயதார்த்தம் நடந்துகிட்டு இருக்குது.

இருவர் கல்யாணம் பற்றி
இப்போதும் சித்தி கிருஷ்ணவேணி தனது மகள் வளர்மதிக்கு ஆகாஷை கல்யாணம்செய்து வைக்கும் வேலைகளில் இருக்கிறார்களே தவிர,சவுந்தர்யா கண்ணன் கல்யாணத்தை பேச ஆளில்லை. சவுந்தர்யாவின் அக்கா ரெண்டு பேரும் வளர் நிச்சயதார்த்தத்தில் இந்த பேச்சை ஆரம்பிக்க இருவரின் கல்யாணமும் முடிவாகுது. இதற்கு முழுக்க காரணமாக ஆகாஷ் இருக்கிறான்.

புடவை கல்யாணத்துக்கு
கல்யாணத்துக்கு ஜவுளி எடுக்க எல்லாரும் புறப்படறாங்க. சவுந்தர்யா மட்டும், நீங்க எல்லாரும் காரில் போங்க சித்தி.நான் கண்ணன் மாமா கூட வண்டியில் வந்துடறேன்னு சொல்றா. காரில்தான் இடம் இருக்கேம்மான்னு சித்தப்பா சொல்ல, அவங்க சின்னஞ்சிறுசுங்க... வண்டியில வரட்டும் விடுங்க..நாம் போகலாம்னு சொல்றாங்க சித்தி. சவுந்தர்யாவின் தங்கை வளர்மதிக்கு ஆகாஷ் கூட கடைக்கு போகணும்னு ஆசை வந்துருது.

90 வருஷத்துக்கு மாமாவை
சவுந்தர்யா இனிமே மாமாவை பிரிஞ்சு ஒரு நிமிஷம்கூட இருக்க மாட்டான்னு அக்காக்கள் கிண்டல் செய்ய, ஆமாம்.. என் மாமாவை நான் 90 வருஷத்துக்கு குத்தகைக்கு எடுத்திருக்கேன்னு சவுந்தர்யா சொல்ல எல்லாரும் சிரிக்கிறார்கள். வளர்மதி இன்னும் அதிக ஆசையில், ஆகாஷ் என்னை வந்து பிக்கப் பண்ணிக்கிட்டு போறியான்னு கேட்கிறாள்.

கண்ணன் கடையில்
கண்ணன் கடையில் புடவை புடவையாக எடுத்து சவுண்டு உனக்கு இது நல்லாருக்கும், அது நல்லாருக்கும்னு தேர்வு செய்ய,ஆகாஷ் வளர்மதிக்கு ஒரு புடவை கூட வந்து எடுத்து பார்க்காமல் ஒதுங்கி நிற்கிறான். .ஆகாஷ் வந்து எனக்கு புடவை எடுத்துக் குடுன்னு வளர் கேட்டபோதும், இதோ கண்ணன் எடுக்கறது நல்லாருக்கு.ரெண்டு பேருக்கும் ஒரே மேடையில்தானே கல்யாணம். புடவை, மாப்பிள்ளை டிரஸ் எல்லாம் ஒரே ,மாதிரி இருக்கட்டும்னு சொல்றான்.
பொறுமை இழந்த வளர்மதி கோவித்துக் கொண்டு, எனக்கு தலை வலிக்குது... நீங்களே செலக்ட் பண்ணி எடுத்துட்டு வாங்கன்னு கிளம்பி விடுகிறாள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications