Kanmani Serial: நீலி கோயிலுக்கு போனா கல்யாணம் நின்னுருமா?.. இதெல்லாம் எதுக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் மீண்டும் வயல் வெளியில் பச்சை பசேல்னு பயிர் விளைந்து வருவதை காண்பித்து கண்களை குளிர வைத்து இருக்கிறார்கள்.

வயல்வெளியில் ஆண்களும் பெண்களுமாக நாற்று நட்டு கொண்டு இருப்பதைப் பார்க்கவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒருவர் காலையில் பழங்கஞ்சி குடிக்காமல் பசி மயக்கத்தில் இருப்பது சின்னவருக்கு சங்கடத்தை ஏற்படுத்த, அவர் ஒரு அக்காவிடம் சோறு வாங்கி கையில் வைத்து சாப்பிட சொல்வது அருமை.

இப்படிப்பட்ட காட்சிகள் கண்ணுக்கு குளிர்ச்சியானவை. கிராமத்து கதை என்பதால், இவைகளை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை சீரியல் எடுப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

கண்ணன் சவுந்தர்யா

கண்ணன் சவுந்தர்யா

சவுந்தர்யா கண்ணன் கல்யாணம், ஆகாஷ் வளர்மதி கல்யாணத்தோடு நடக்க கூடாது என்று, ஆகாஷ் அம்மா கிருஷ்ணவேணியிடம் கண்டிஷன் போட்டுடறாங்க. இரு கல்யானமும் ஒரே மேடையில் நடக்க கூடாது. அதோடு சவுந்தர்யா ,கண்ணன் கல்யாணம் நின்னு போகணும்னு கிருஷ்ணவேணிக்கு சொல்லிக் குடுத்துடுடறாங்க.

கல்யாணத்தை எப்படி

கல்யாணத்தை எப்படி

கிருஷ்ணவேணி அம்மாவின் மனதுக்குள் கண்ணன் சவுந்தர்யா கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என்கிற எண்ணத்தில் இருக்கும் கிருஷ்ணவேணியை நாத்தனார் இருவரும் கண்காணிக்கறாங்க. அதில் ஒரு நாத்தனாரின் மகனுக்கே போன் செய்து, நீலி கோயிலுக்கு வர சொல்றாங்க. நாத்தனாருக்கே அண்ணி யாரை நீலி கோயிலுக்கு வர சொல்றாங்கன்னு தெரியலை.

நிறைந்த பால் சொம்பு

நிறைந்த பால் சொம்பு

பாலை எடுத்து ஒரு சொம்பு நிறைய நிரப்பிக்கிட்டு யாருக்கும் தெரியாமல் நீலி கோயிலுக்கு கிளம்பிப் போறாங்க. ஒரு காட்டில் பயங்கர முகத்துடன் ஒரு சாமி சிலை இருக்கிறது.அங்கு நின்று கொண்டு, நாத்தனாரின் பையனுக்காக காத்து இருக்காங்க. அங்கே வந்து வண்டியை நிறுத்திவிட்டு, என்ன அத்தே..இங்கே சாதாரணமா யாரும் சாமி கும்பிட வரமாட்டாங்க நீங்க வந்து இருக்கீங்கன்னு கேட்கிறான்.

அந்த வீட்டில்

அந்த வீட்டில்

அந்த வீட்டில் எனக்கு உன் மேல மட்டும்தான் நம்பிக்கை. அதனாலதான் நிறை பால் சொம்புடன் இங்கே வந்திருக்கேன். இங்கே நாம் ஒருத்தருக்கு கொடுக்கும் சத்தியத்தை எப்பாடு பட்டாவது நிறைவேற்றி வச்சுடணும். அதுக்கு இந்த நீலியும் துணை இருப்பா... சவுந்தர்யாவுக்கும், கண்ணனுக்கும் கல்யாணம் நடக்க கூடாது. இதுல சத்தியம் செய்.மத்ததை அப்புறம் சொல்றேன்னு சொல்றாங்க.

நீலி கோயில் எங்கே இருக்குதுன்னு இனிமேல் மக்கள் கேட்கும்படி இருக்கிறது இந்த காட்சி. இவைகளைத் தவிர்க்கலாமே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+