பாரதி கண்ணம்மா 2: பாரதியின் கல்யாணத்தை நிறுத்த நடக்கும் சதி... கண்ணம்மாவை சந்தித்த சித்ரா

சித்ரா அவருடைய அத்தையால் திருடி என்று அவமானப்படுத்தப்பட்டு பின்பு அவர் தப்பு செய்யவில்லை என்று நிரூபணம் ஆகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதியின் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று அவருடைய அத்தை சூழ்ச்சிகளை செய்கிறார்.

பாரதி பாருக்கு சென்றிருந்த இடத்தில் ரவுடிகளோடு சண்டையிட்டு பிரச்சனை செய்கிறார்.

சித்ரா திருடி என்று அவமானப்படுத்தப்பட்டு பின்பு அவர் தப்பு செய்யவில்லை என்பது நிரூபணம் ஆகி பஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறார்.

முதல்முறையாக கண்ணம்மாவும் சித்ராவும் பஸ்ஸில் சந்தித்துக் கொள்கிறார்கள்.

போட்டுக் கொடுக்கும் ஷர்மிளா

போட்டுக் கொடுக்கும் ஷர்மிளா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீசன் 2 இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் சௌந்தர்யாவிடம் ஆபீஸ் சம்பந்தமான டாக்மெண்ட்களில் விஜய் கையெடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ஷர்மிளா அதாவது பாரதியின் அத்தை விஜயை தனியாக அழைத்து சென்று பாரதிக்கு பெண்பார்க்கும் விஷயத்தை சௌந்தர்யா தன்னை அசிங்கப்படுத்திய விஷயத்தையும் கூறுகிறார்.

வீட்டுக்குள்ளே வஞ்சகம்

வீட்டுக்குள்ளே வஞ்சகம்

அதுமட்டுமல்லாமல் அந்த குடிகார பாரதிக்கு வேறு யாருடனும் திருமணம் நடக்க கூடாது. உன்னுடைய தங்கச்சி வெண்பாவை கல்யாணம் பண்ணி வைக்கணும் அதோடு உனக்கு இந்த வீட்டு பெண்ணான அஞ்சலியை கல்யாணம் பண்ணி வைக்கணும், அதன் மூலம் இந்த சொத்து மொத்தத்திற்கு நான் எஜமானி ஆகி விடுவேன். அதுவரைக்கும் இந்த பாரதிக்கு கல்யாணம் ஆகக்கூடாது என்று கூறுகிறார். இதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று விஜய் ஒருவருக்கு போன் போட்டு திட்டம் தீட்டுகிறார்.

சித்ராவுக்கு திருடி பட்டம்

சித்ராவுக்கு திருடி பட்டம்

மறுபக்கத்தில் சித்ரா தன்னுடைய குடும்பத்தினரும் அத்தை மாமாவும் வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ளாததால் எங்கே செல்வது என்று தெரியாமல் பஸ்க்காக பஸ் ஸ்டாண்டில் காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே வந்த பஸ்ஸில் அவர் ஏறும்போது அவரது அத்தை ஆட்களோடு ஓடி வந்து பஸ்ஸை நிறுத்தி சித்ராவை வெளியே இறக்கி குழந்தைகிட்ட இருந்து திருடிய நகை எங்கே என்று திட்டி சண்டையிடுகிறார்.

நகை கிடைத்து விட்டது

நகை கிடைத்து விட்டது

சித்ரா நான் நகை எதுவும் எடுக்கலை சத்தியமா சொல்றேன். நம்புங்க என்று கெஞ்சி கொண்டிருக்க அவரது அத்தை அதை நம்பாமல் அவருடைய பேக்கில் இருக்கும் துணிகளை எல்லாம் எடுத்து வெளியே வீசி செக் பண்ணிக் கொண்டிருக்கிறார். அப்போது சித்ராவின் மாமா பைக்கில் வந்து நகை கிடைத்துவிட்டது. அங்கே தான் கட்டிலுக்கு கீழே கிடந்தது என்று சொல்ல பிறகு அவருடைய மனைவியும் கிளம்பி விடுகிறார் சித்ரா கண்ணீரோடு நிற்கிறார்.

இது ரவுடிசமா பாரதி

இது ரவுடிசமா பாரதி

அதே நேரத்தில் பாரதி கிளப்பில் உட்கார்ந்து பந்தயத்தை பார்த்துக்கொண்டு குடித்துக் கொண்டிருக்கிறார். அங்கு வரும் ரௌடிகள் இவன் தான் அவன் இன்று சொல்லி தகராறு செய்து செய்கின்றனர். பாரதி அவர்களை அடித்து நொறுக்குகிறார். இதை ஒருவர் வீடியோவாக எடுக்கிறார். பிறகு சித்ரா பஸ்டாண்டில் ஒரு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து இருக்கிறார். அப்போது ஏற்கனவே ஜெயிலில் இருந்து சித்ராவை கொலை செய்ய திட்டம் தீட்டிய தனத்தின் ரவுடிகள் சிலர் கண்ணமாவை பின் தொடர்கின்றனர்.

அறிமுகமாகும் கண்ணம்மாவும் சித்ராவும்

அறிமுகமாகும் கண்ணம்மாவும் சித்ராவும்

அப்போது பஸ் எடுக்கிறது கண்டக்டர் சித்ராவிடம் எங்கே போக வேண்டும் என்று கேட்க? பஸ் எங்கே போகிறது என்று கேட்டதும், கண்டக்டர் அதிர்ச்சியாகி அன்னவாசல் செல்கிறது என்று சொல்ல ,அங்கேயே எனக்கு டிக்கெட் கொடுங்கள் என்று சித்ரா கேட்டு வாங்குகிறார். பின்பு தன்னுடைய பேக்கை மேலே வைக்கலாம் என்று வைத்துக் கொண்டிருக்கும்போது ஒரு பெண் பஸ்ஸுக்கு ஓடி வருகிறார். அவளுக்கு கை கொடுத்து பஸ்ஸில் ஏற உதவி செய்கிறார். பிறகு இருவரும் ஒரே சீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அந்தப் பெண் என்னுடைய பெயர் கண்ணம்மா என்று அறிமுகம் செய்து கொள்கிறார். யாருமே தெரியாத அன்னவாசல் எதுக்கு போறீங்க என்று சித்ராவிடம் கண்ணம்மா கேட்க? சித்ரா என்ன சொல்வது என தெரியாமல் யோசிக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+