Pandian Stores Serial: என்னாச்சு.. கையில் அல்வா வச்சுக்கிட்டு ஊறுகாயான்னு கேட்கறான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடைக்குட்டி கண்ணன் கையில் அண்ணன் கதிர் கொடுத்த அல்வா... ருசிச்சு ருசிச்சு சாப்பிடறான். இருந்தாலும் ஊறுகாயான்னு கேட்கிறான். அல்வாடா... ஊறுகாயாம்னு நக்கலா சொல்லிட்டு போறானே கதிர் என்ன நடக்குது இங்கே?

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தினமும் இரவு எட்டு மணிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வருது. நாலு அண்ணன் தம்பிங்க.. வாழ வந்த பெண்கள் மூன்று பேர். பக்கவாதம் வந்து எப்போதும் படுத்து இருக்கும் அம்மா இவர்களை சுற்றிய கதை.

ஒரு சத்தம்...பெரும் கூச்சல் சண்டை என்று எதுவும் இல்லாமல் சீரியல் எபிசோட் நகருது. ஆனாலும், இதை தொடர்ந்து பார்க்கத் தூண்டும்படியான குடும்ப அமைப்பு, அன்றாடம் நாம் பேசும் உரையாடல்கள் வசனங்களாக இடம் பெற்று இருப்பது இதெல்லாம்தான் காரணம்.

அல்வா மல்லிப்பூ

அல்வா மல்லிப்பூ

கதிர் வேலை மெனக்கெட்டு கடைக்கு போயி அல்வா, மல்லிப்பூ வாங்கிட்டு வர்றான். பைக்கில் வரும்போதே மனசுக்குள் ஒரு கிளுகிளுப்பு.. பல விதமான என்ன ஓட்டங்கள் என்று இனம் புரியாத மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வருகிறான். வந்தால் முல்லை கையை தலைக்கு வச்சு கீழே படுத்து கிடக்கா.முல்லை முல்லை என்று அவனுக்கே கேட்காதபடி கூப்பிட அவள் காதில் விழவில்லை.

கண்ணா இந்த அல்வா

கண்ணா இந்த அல்வா

மல்லிப் பூவை மட்டும் உள்ளே வச்சுட்டு வெளியில் வந்து கண்ணா இந்தா அல்வா சாப்பிடுன்னு சொல்றான். எனக்கா.. குடுன்னு வாங்கி அவசரமா பிரித்து அல்வாவை கையில் எடுத்து சாப்பிடறான் கண்ணன். அப்போது அங்கு முல்லையும் வந்து நிற்கிறாள். என்ன திடீர்னு ஒரு கடலை மிட்டாய் கூட வாங்கித் தர மாட்டியேன்னு கண்ணன் கேட்கிறான்.

சாப்பிடு பாசம்தாண்டா

சாப்பிடு பாசம்தாண்டா

பாசம்தாண்டா கண்ணா சாப்பிடுன்னு கதிர் சொல்றான்.. அப்படியா..சரி சரி என்று கண்ணன் ஒரு டவுட்டுடனே அல்வாவை கையில் வச்சுக்கிட்டு சாப்பிடறான்.. அண்ணனை பார்க்கறான்.. இதுக்கு நடுவில் முல்லையும் வந்து நிக்கறா. கண்ணன் அல்வா சாப்பிட்டுக்கிட்டே இருக்கான்.கண்ணா இந்தா இந்த பூவை வச்சுக்கோன்னு கையில் மறைச்சு வச்சிருந்த பூவை நீட்டுகிறாள்.

எது நான்... பூவா?

எது நான்... பூவா?

எது நான் பூ வச்சுக்கவா.. என்ன அண்ணி சொல்றீங்கன்னு கண்ணன் கேட்க, ஆமாம்டா... உங்க அண்ணன் அல்வாவோட மல்லிப்பூவும் வாங்கிட்டு வந்தாரு.. அல்வா உனக்குன்னா பூவும் உனக்குத்தானேன்னு முல்லை சொல்ல... என்ன நடக்குது இங்கேன்னு கண்ணன் கோவமா கேட்கிறான். முல்லையிடம் கண்ணால் ஜாடை காட்டிய கதிர்.. அல்வா சாப்பிடு கண்ணான்னு சொல்றான்.

அல்வாவா ஊறுகாவா?

அல்வாவா ஊறுகாவா?

ஏங்க அல்வாவும் மல்லிப்பூவும் எனக்குத்தானே வாங்கிட்டு வந்தீங்க. அதை சொல்றதுக்கு உங்களுக்கு என்ன வெட்கம்ன்னு முல்லை கேட்கிறாள். உங்க போதைக்கு நான்தான் ஊறுகாவான்னு கண்ணன் கேட்கிறான். நான் போயி அம்மாவைப் பார்த்துட்டு வரேன்.. அம்மாவுக்கு காய்ச்சலாம்னு சொல்லிட்டு. டேய் அல்வாடா.. ஊறுகாயாம்னு சொல்லிட்டு போறான். ஜோக்கு..ம்ம்னு கேட்டு கண்ணன் சலிச்சுக்கறான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+